தேன்பொருந்தின போர்மாலையையுடைய, குலிங்கரில் - குலிங்க தேசத்தவரிலும், சேரரில்-சேரநாட்டவரிலும், சிஞ்சியரில் - சிஞ்சி நாட்டவரிலும், வெம் சமர் விடா- கொடிய போரை நீங்காத, மா மகுடவர்த்தனரில் - பெரியமகுடவர்த்தனர்களிலும், மண்டலிகரில்-மண்டலீகர்களிலும், பட்டவர்த்தனரில் பட்டவர்த்தனர்களிலும், இ உரவோன் ஏமருகணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள்-(வீடுமனாகிய) இவ்வீரன் மிகுந்தகளிப்போடுஎய்த அம்புகளுக்குக் குறியாகாமல் தப்பின அரசர்கள், எ மன்னர் என்று மொழிவாம்-எந்த அரசரென்று (யாம்) கூறுவோம்? (எ-று.)-மற்று- அசை. எனவே, ஒருவரும் தவறாமல் எல்லாரும் வீடுமனம்புக்கு இலக்காயினரென்பதாம். ஏமருதல்-மிகுகளிப்புறுதல்; ஏமா என்னும் பகுதி விகாரப்பட்டு வினைத்தொகையில்வந்தது. இனி, ஏமரு-(காண்பவர்) திகைத்தற்குக் காரணமான என்றுங் கொள்ளலாம்: ஏ மரு-எய்யுந்தொழில் மருவுகின்ற என்றலும் ஒன்று. பின்னே துருபதேயர் என வருதலால், முன்னே சோமகர் என்றது - அக்குலத்தவருள் துருபததேசத்தவரொழிந்தவரையே குறிக்கும்; இனி, துருபதேயர் என்பதை-த்ரௌபதேயர் என்பதன் விகாரமாகக்கொண்டு, திரௌபதீபுத்திரரான உபபாண்டவர் ஐவரென உரைத்தல், முன்னும் பின்னும்வந்த நாட்டவரினத்தோடு பொருந்தாதாம். கீழ் இச்சருக்கத்தின் பதினான்காங் கவியையுங் காண்க. முன்வந்த பல நாடுகளின் சேர்த்தியால், சிஞ்சியென்பது - ஒருநாடென்று கொள்ளப்பட்டது. தென்னர்-தென்னாட்டவர். இது-கீழ்க்கூறிய விருத்தவகையில் சிறிது ஓசைவேறுபட்டது. வேறு. 28.-அதுகண்டு ஸ்ரீக்ருஷ்ணன் சொல்ல, அருச்சுனன் வீடுமனுடன் பொர வில்வளைத்தல். மேலெழுந்து தம்படையை நீடுகங்கை மைந்தனடு மேன்மை கண்டிரங்கி வெகுளா, ஞாலமுண்ட செம்பவள வாய்மலர்ந்து கொண்டிவனை நாமுரண்டொடங்க விதுவே, காலமென்று மன்றல் கமழ் கார்முகுந்தன்வெம்புரவி கால்கொள் சந்த னங்க டவவே, கோலவெஞ்ச ரங்களடைவேதெரிந்து கொண்டுசிலை கோலினன்ற னஞ்சயனுமே. |
(இ-ள்.) (இவ்வாறு), நீடு கங்கைமைந்தன்-பெரிய வீடுமன், மேல் எழுந்து - மேன்மேற் கிளர்ந்துவந்து, தம் படையை அடு - தம்பக்கத்துச் சேனையைஅழிக்கிற, மேன்மை-சிறப்பை, கண்டு-, மன்றல் கமழ் கார் முகுந்தன் - (திருமேனியில்) திவ்வியபரிமளம் வீசப்பெற்ற கருநிறமுடைய கண்ணபிரான், இரங்கி - மனமிரங்கி, வெகுளா - கோபங்கொண்டு,-ஞாலம் உண்ட செம் பவளம் வாய் மலர்ந்து - (பிரளயகாலத்தில்) உலகங்களை அமுதுசெய்கிற சிவந்த பவழம்போன்ற(தன்) திருவாய்மலரைத் திறந்து,இவனைகொண்டு நாம் முரண் தொடங்க இதுஏ காலம் என்று - இச்சிகண்டியை எதிர்கொண்டு நாம் போரைத் தொடங்குதற்கு இதுவே சமயமென்று சொல்லி, வெம் புரவி கால் கொள் சந்தனம் கடவ - வேக |