பக்கம் எண் :

240பாரதம்வீட்டும பருவம்

மானகுதிரைகளையும் சக்கரங்களையும் கொண்ட தேரை (வீடுமனெதிரில்) செலுத்த,-
தனஞ்சயன்உம்-அருச்சுனனும,்  கோலம் வெம் சரங்கள் அடைவுஏ தெரிந்து
கொண்டு-அழகியகொடிய அம்புகளை முறையே ஆராய்ந்தெடுத்தது, சிலை
கோலினன்-(போர் செய்ய) வில்வளைத்தான் (எ-று.)

     பிரளயகாலத்தில் திருமால் உலகங்களைத் திருவயிற்றில் வைத்துக் கொண்டு
பாதுகாக்கின்றமைபற்றி. 'ஞாலமுண்டவாய்' என்றார். சந்தனம்=ஸ்யந்தநம்.
இவனைக்கொண்டு - கதையை உட்கொண்டுவந்த சுட்டு.

     இதுமுதற் பத்துக்கவிகள் - இச்சருக்கத்து 17-ஆம் கவி போன்ற
விருத்தவகையிற் சேர்ந்தனவேயாகும்.                            (352)

29.-ஸ்ரீக்ருஷ்ணணுடைய பாஞ்சசன்னியமுழக்கம்.

ஓதம்வந்தெ ழுந்ததென மேகநின்ற திர்ந்ததென வூழியும்
                                பெயர்ந்த  தெனவே
மாதிரங்க ளுஞ்செவிடு போயகண்ட மும்பொதுளி வாய்பிளந்த
                                      தண்டமுகடுஞ்
சீதரன்செ ழுந்துளப மாதவன்ற யங்கருண சீதபங்க யங்கொ
                                           டிருவி
னுதன்வெஞ் சமங்கருதி யூதுகின்ற சங்கின்முழு நாதம்வந்தெ
                                    ழுந்த பொழுதே.

     (இ - ள்) சீதரன் - ஸ்ரீதரனென்னும் ஒருதிருநாமமுடையவனும், செழு
துளபம்- சிறந்த திருத்துழாய்மாலையையணிந்த, மாதவன்-மாதவனென்னும்
ஒருதிருநாமமுடையவனும், தயங்கு - விளங்குகிற, அருணம்-செந்நிறமுடைய, சீதம்-
குளிர்ந்த, பங்கயம்-தாமரைமலரை, கொள்-(இடமாகக்) கொண்ட திருவின்-
இலக்குமியினது, நாதன் - கணவனும் ஆகிய கண்ணபிரான், வெம் சமம் கருதி -
கொடியபோரை உத்தேசித்து, ஊதுகின்ற-(அப்பொழுது தன் திருவாய்மலரில்வைத்து)
ஊதின, சங்கின்-(பாஞ்சசன்னிய மென்னுந் திவ்விய) சங்கத்தினது, முழு நாதம் -
போரொலிமுழுவதும், வந்து எழுந்த பொழுது - வெளிப்பட்டு மிகுந்தபொழுது,
ஓதம் வந்து எழுந்தது என - கடல்கள் பொங்கிவந்ததென்று சொல்லவும், மேகம்
நின்று அதிர்ந்தது என - மேகங்கள் நிலை பெற்று இடிமுழங்கிற்று என்று
சொல்லவும், ஊழிஉம்பெயர்ந்தது என-கல்பகாலம் மாறிற் றென்று சொல்லவும்,
மாதிரங்கள்உம் செவிடு போய் - எல்லாத்திசையிலுள்ளவர்களும் செவிடுபட்டு,
அகண்டம்உம் பொதுளி-எல்லாவுலகங்களும் தாக்கி, அண்டம் முகடுஉம் வாய்
பிளந்தது-அண்டகோளத்தின் மேல்முகடும் (அதிர்ச்சியால்) வெடித்தது; (எ-று.) 

     மாதிரம் - ஆகுபெயர். ஸ்ரீதரன்-திருமகளைத் திருமார்பில் தரிப்பவன்:
மாதவன்-திருமகள்கணவன். பின்னே 'திருவின் நாதன்' என வந்ததனால், மாதவன்
என்னும் பெயர் - இடுகுறி மாத்திரமாய் நின்றது; இனி, (வாமனாவதாரத்தில்)
பெருந்தவமுடையா னெனினுமாம். அருணசீதபங்பஜம் - வடமொழித்தொடர்.  (353)