30.-அருச்சுனன் சிகண்டியை முன்னிட்டுக்கொண்டு போர் தொடங்கி வீடுமனெதிரிற் போதல். தூரியங்கறங்கநரபாலர்சங்கினங்களணிதோறுநின்றுநின்றுகுமுறத் தேர்களுந்துரங்கமொடுவேழமுங்கலந்துவருசேனைமண்டலங்களுடனே பேர்பெறுஞ்சிகண்டிதலையாகமுன்புகொண்டுலகுபேருமன்றுமின்று கொலெனப் போர்தொடங்கிவென்றிபுனைவீடுமன்றடங்கணெதிர்போயினன்றனஞ் சயனுமே. |
(இ-ள்.) தூரியம் கறங்க - வாத்தியங்கள் முழங்கவும், நரபாலர் சங்கு இனங்கள் - அரசர்களது சங்கங்களின் கூட்டங்கள், அணி தோறுஉம்- அப்படைவகுப்பினிடந்தோறும், நின்று நின்று குமுற - மிகுதியாகப் பொருந்தி ஆரவாரிக்கவும், தேர்கள்உம் துரங்கமொடு வேழம்உம் கலந்து வரு சேனை மண்டலங்களுடனே - இரதங்களும் குதிரைகளும் யானைகளும் கூடிவருகிற சேனைக்கூட்டங்களுடனே, தனஞ்சயன்உம் - அருச்சுனனும், பேர்பெறும் சிகண்டி தலை ஆக முன்பு கொண்டு - பிரசித்திபெற்ற சிகிண்டியைத் தலைமையாக முன்னேநிறுத்தி, உலகு பேரும் அன்றுஉம் இன்றுகொல் என - 'உலகங்கள் அழியும் அந்த உகாந்தகாலமும் இன்றைக்கோ?' என்று (யாவரும்) அஞ்சும்படி, போர் தொடங்கி - யுத்தத்தைச் செய்யத்தொடங்கி, வென்றி புனை வீடுமன் தட கண் எதிர்போயினன் - சயத்தைக்கொண்ட பீஷ்மனது பெரிய கண்களி னெதிரிற் சென்றான்; (எ-று.)-பேர்பெறும் - வீடுமனைக் கொல்லப் பிறந்தவனென்று புகழ்பெற்ற என்க. (354) 31.-சிகண்டியைக்கண்டதும் ஆயுதத்தைப்போகட்டு வீடுமன் நிற்க, எதிரிசாபம்முதலியன துணியும்படி துச்சாதனன் அம்புதூவுதல். காதிவெங்கொடும்பகழியேவுதிண்சிகண்டிதலைகாணலுங்குனிந்துநகையா வாதியம்பையின்றுபகைமூளவந்ததென்றுதனதாயுதந்துறந்துவிரைதேர் மீதுகங்கைமைந்தனொருதான்வெறுங்கைநின்றளவின்மேனடந்துசென்று பொருதுச் சாதனன்சரங்கள்பலதூவினன்பரிந்தெதிரிசாபமுந்துணிந்துவிழவே. |
(இ-ள்.) காதி-எதிர்த்து, வெம் கொடு பகழிஏவு திண்சிகண்டி-மிகக்கொடிய அம்புகளைச் செலுத்துகிற வலிமையையுடைய சிகண்டியினது, தலை-முகத்தை, காணலும்-பார்த்தமாத்திரத்திலே,-கங்கை மைந்தன்-வீடுமன்,-குனிந்து-(இயற்கையில் ஆண்மையில்லாத அவனோடு போர் செய்ய நாணித்) தலைகுணிந்து, நகையா- சிரித்து, 'ஆதி அம்பை பகை-முன்பு அம்பையினாலாகிய பகைமை, இன்று மூள வந்தது-இப்பொழுது பலிக்கவந்தது', என்று - என்று எண்ணி, தனது ஆயுதம் துறந்து-தன்னுடைய ஆயுதங்களைக் கீழேபோகட்டு, விரை தேர் மீது- துரிதமாகச்செல்லும் (தனது) தேரின்மேல், ஒரு தான்-தான் தனியாய், வெறு கை நின்ற அளவில்-வெறுங்கையோடு நின்றபொழுதில்,-பொரு துச்சாசனன்-போர் செய்யவல்ல துச்சாதனன், பரிந்து-(வீடுமனுக்காகப்) பரிவு கொண்டு, மேல் நடந்து சென்று - அச்சிகண்டியின்மேல் எதிர்த்துப்போய், எதிரி சாபம்உம் துணிந்து விழ- அப்பகைவனது |