பக்கம் எண் :

242பாரதம்வீட்டும பருவம்

வில்லும் அறுபட்டுவிழ, பல சரங்கள் தூவினன் - அநேகபாணங்களைப்
பிரயோகித்தான்; (எ-று.)

     சாபமும் என்ற எச்சவும்மையால், அவனது இதயமும்தேரும் பிளத்தல்
விளங்கும்; அடுத்த கவியிலுங் காண்க. சிகண்டி தலை காணலும்-சிகண்டியை
எதிரிற் கண்டவுடனே என்றுமாம். ஒரு தான்-ஒப்பில்லாத தான் என்றுமாம்.
எதிரி-எதிர்ப்பவன். (பி-ம்:) பகழிமோது. மீளவந்தது.             (355)

32.-சிகண்டி வந்தவழி மீள,
வீடுமன் ஸ்ரீக்ருஷ்ணனது திருமேனியும் புண்படச் சரம்விடுதல்.

சாகநின்றிலன்றுருபதேயனெஞ்சமின்றிவரிசாபமின்றிவண்கொடிகொடேர்
வாகமின்றிவந்தவழிமீளநின்றசந்தனுகுமாரனுஞ்சரங்கள்விடவே
யூகமும்பிளந்துசுரராசன்மைந்தன்முந்திரதமூருகின்றசெங்கணெடுமான்
மேகமுங்கருங்கடலுநீலமுங்கலந்ததிருமேனியுஞ்சிவந்ததறவே.

     (இ-ள்.) (அப்பொழுது) துருபதேயன்-துருபதராச குமாரனாானசிகண்டி,
நெஞ்சம் இன்றி-மனமழிந்து, வரி சாபம் இன்றி-கட்டமைந்த வில் இல்லாமல், வண்
கொடி கொள் தேர் வாகம் இன்றி-அழகியகொடியைக்கொண்ட தேராகிய வாகன
மில்லாமல், சாகநின்றிலன்-இறக்க நிற்காதவனாய், வந்த வழி மீள-வந்தவழியே
திரும்பிச்செல்ல, (பின்பு), நின்ற-, சந்தனுகுமாரன்உம்-சந்தனுராசபுத்திரனான
வீடுமனும், சரங்கள்விட-அம்புகளைச்செலுத்த,-யூகம்உம்-(பாண்டவரது)
படைவகுப்பும், பிளந்து-முறிபட்டு, சுரராசன் மைந்தன் முந்தி ரதம் ஊருகின்ற
செம்கண் நெடுமால் - தேவேந்திரகுமாரனான அருச்சுனனுக்கு
முன்நின்றுதேர்செலுத்துகிற சிவந்தகண்களையுடைய சிறந்த கண்ணபிரானது,
மேகம்உம் கரு கடல்உம் நீலம்உம்  கலந்த திரு மேனிஉம்-மேகத்தின் தன்மையும்
கரியகடலின்
தன்மையும்நீலரத்தினத்தின் தன்மையும் பொருந்தின அழகிய
வடிவமும், அறசிவந்தது-மிகச் செந்நிறம் பெற்றது;

     அங்ஙனமானது, வீடுமன் விசையாக விட்ட அம்புமழைபட்டு
இரத்தங்குழம்பியதனா லென்க. பிளந்து-பிளக்க எனத் திரிக்க. சாகநின்றிலன்
என்றது, இன்னும் சிறிதுபொழுது சிகண்டி அங்கு நின்றிருந்தால் துச்சாதனனாற்
கொல்லப்பட்டேயிருப்பானென்பதை நன்குவிளக்கும். துருபதேயன்-வடமொழித்
தத்திதாந்தநாமம். தேர்வாகம்-தேர்க்கு திரையுமாம்.                   (356)

33.-அருச்சுனன் சிகண்டியையிட்டுவந்துமுன்னேநிறுத்தி,
அவனம்புகளோடு
தன் அம்புகளை வீடுமன் மேனியிற் செலுத்துதல்.

போனதிண்சிகண்டிதனைமீளவுங்கொணர்ந்துபொருபூசலுங்கடந்திரதமே
னீநிலஞ்சனின்கணையுமேவுகென்றுவெஞ்சமரினேர்நடந்துசென்றுவிசயன்
கூனலங்கிதந்தசிலைகோலியம்பொடம்புபலகூடநெஞ்சழன்றுதையினான்
வேனிலம்புமுன்புதுதையாதிலங்குமம்பொன்வரைமேனியெங்கணும்
                                              புதையவே.