பக்கம் எண் :

244பாரதம்வீட்டும பருவம்

எதிர்ந்து பொருவோன்உம் - நம்மை எதிரிட்டுப் போர்செய்பவனும், மைந்தன்-
(நமது வமிச) புத்திரனான அருச்சுனனே; நன்று-(இவன்கையால் நாம் அழிவது)
நல்லதே; (ஆனால்), முதல் நாமம்உம் சிகண்டி தலைமையான
பேர்மாத்திரத்துக்குமே சிகண்டி (எதிரில் உள்ளான்); இவன் எய் வாளி ஒன்றுஉம்
இங்கு எமை உறா - இச் சிகண்டி தொடுக்கிற அம்புக ளொன்றும் இங்கு எம்மைச்
சேரமாட்டா; இது தனஞ்சயன் செய் பெரு வாழ்வு - இவ்வாறு என்னுடம்பை
ஊடுருவும்படி அம்புதொடுத்தல் அருச்சுனன் செய்யும் பெருஞ்சிறப்பேயாம்' என்று
அறிந்து -,மகிழா - மகிழ்ச்சிகொண்டு, (எ-று.)- "கூறினன்'' என அடுத்த கவியோடு
முடியும்.

     'இவனெய்வாளியொன்றும் இங்கு எமை உறா' என்றதனால், வீடுமனைக்
கொல்லுதற்கு வியாஜமாக நிற்பதுமாத்திரம் சிகண்டிக்கு உண்டேயொழிய, அவனது
அம்புகளுக்கு வீடுமனது தெய்வயாக்கையைத்துளைக்கும்
ஆற்றலில்லையெனவிளங்குகிறது. கீழ் முதற்போர்ச்சருக்கத்தின் பதினோராங்கவியை
இங்கே காண்க. பொருவோன்உம் மைந்தன் அன்றுஎனஎடுத்து-போர் செய்பவனும்
இயற்கையாண்மை யுடையவனல்லனென்றும், முதல்நாமம்உம் சிகண்டி-என்
உடம்பிற்பதியும் பாணங்களில் முதற்பெயரே சிகண்டி [அவற்றின்மேல்
அருச்சுனன்பெயரும் பின் உள்ளது] என்றும் உரைப்பினுமாம்.          (358)

35.-வீடுமன் துரியோதனன்தம்பிமாரை 'உங்களாலொன்றும் இங்குச்
செய்யலாகாது: மேல்ஆகவேண்டுவதை ஆய்க' என்று கூறுதல்.

நாமவெங்கொடுங்கணையினாமுநொந்தனஞ்சமரநாளுமின்று
                                    முந்தவினிநீர்,
போமடங்கநுந்தமையனீள்பதம்பொருந்தியுறுபோரறிந்துகொண்டு
                                        பொருவீ,
ராமதன்றியென்செயிமாவதொன்றுமின்றுதனியாண்மைபொன்ற
                                  லென்றருகுசேர்,
கோமடங்கறம்பியர்களாகிநின்றமைந்தரொடுகூறினன்பனங்
                                      கொடியனே.

     (இ-ள்.) (அப்பொழுது), பனங்கொடியன் - பனைக்கொடியையுடைய
வீடுமன்,அருகு சேர் - (தன்) அருகிற் பொருந்திய, கோமடங்கல் தம்பியர்கள்
ஆகி நின்றமைந்தரொடு- இராசசிங்கமாகிய துரியோதனனது தம்பிமார்களாய்ப்
பொருந்தியவீரர்களுடனே, 'நாமம் வெம் கொடு கணையின் - அச்சத்தைத்தருகிற
மிகவுங்கொடிய அம்புகளால் நாம்உம் சமரம் நொந்தனம் - நாமும்போரில்
வருந்தினோம்; நாள்உம் இன்று-(நமக்கு அபாயத்தை விளைக்கிற) தினமும்
இன்றைக்கே; இனி - இனி மேல், நீர் அடங்க - நீங்களெல்லோரும், முந்த போம் -
விரைவாகச் செல்லுங்கள்; நும் தமையன் நீள் பதம் பொருந்தி - உங்கள்
தமையனான துரியோதனனது சிறந்த இடத்தை யடைந்து, உறு போர் அறிந்து
கொண்டு-இனிச்செய்யவேண்டும் போரைத்தெரிந்துகொண்டு, பொருவீர் -
போர்செய்யுங்கள்; அது ஆம் அன்றி - அங்ஙனஞ் செய்வது தகுதியாகுமே
யல்லாமல், என் செயின்உம் ஆவது ஒன்றுஉம் இன்று - (நீங்கள்) என்ன முயற்சி
செய்தாலும் (எனதுஅபாயத்தைத் தடுப்பதற்குத்) தக்கவழி ஓன்றும் இல்லை;