பக்கம் எண் :

246பாரதம்வீட்டும பருவம்

சோர்வினாலும், நாக்குழறும், அம்புஅணை - ஸரதல்பம். முன்பு நின்றநிலை -
யோகநிலையென்பாருமுளர். கிடை - கிடைக்கும் நிலை. குழன்று - குழல என்னும்
எச்சத்திரிபு; குழல் - பகுதி. கோடு - வளைந்துள்ளது. முனை - நுனி.        (360)

37- போரிலே வீடுமன் எஞ்சியதுகண்டு யாவரும் வருந்துதல்.

போரிலெஞ்சி னன்குருகு லேசனென்று கண்டபுரு கூதன்
                         மைந்தனும்புனைதுழாய்,
வீரனுந்து னைந்துவரு தேரினின்றிழிந்திருகண்
                      வீழுமம்பி னின்முழுகினார்,
சேரவந்தி ரண்டுவகை யாகிவெங்களங்குறுகு சேனையுந்தி
                                  ரண்டலறவே,
யாருநெஞ்ச ழிந்தனர்கள்யாருநொந்து நைந்தனர்கள்
                        யாருநின்றிரங்கி னர்களே.

     (இ-ள்.) 'குருகுல ஈசன் - குருகுலத்தலைவனான வீடுமன், போரில் எஞ்சினன்
- யுத்தத்தில் அழிந்தான்', என்று-, கண்ட-பார்த்தறிந்த, புருகூதன் மைந்தன்உம் -
இந்திரகுமாரனான அருச்சுனனும் புனை துழாய் வீரன்உம் - தரித்த
திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரானும், துனைந்து வரு தேரினின்று இழிந்து
- விரைந்து வருகிற தேரினின்று இறங்கிவந்து, இரு கண் வீழும் அம்பினில்
முழுகினார் - (தமது) இரண்டு கண்களினின்றும் விழுகிற நீரில் மூழ்கினார்கள்
[மிகக்கண்ணீர்விட்டார்கள்]; இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனைஉம் -
இரண்டுபகுப்பாய்க் கொடிய போர்க்களத்தையடைந்துள்ள சேனைகளும், சேர
திரண்டு வந்து - ஒருசேரக் கூடி (வீடுமன் விழுந்தவிடத்து) வந்து, அலற - அழுது
கதற, யார்உம் - (இருதிறத்திலும்) எல்லோரும், நெஞ்சு அழிந்தனர்கள்-மனம்
அழிந்தார்கள்; யார்உம்-,நொந்து நைந்தனர்கள் - வருந்தி மெலிந்தார்கள்; யார்உம்-
,நின்று இரங்கினார்கள் - (திகைத்துநின்று) விசனமுற்றார்கள்; (எ-று.)

     அழிந்தவனாகிய வீடுமன் அம்பினில் மூழ்கியதுபோலவே, அழித்தவராகிய
கிருஷ்ண அருச்சுனரும் அம்பினில் மூழ்கினாரென ஒரு சமத்காரம் தோன்றக்
கவிகூறினார். பாண்டவதுரியோதனாதியரென்னும் இருவகையார்க்கும் வீடுமன்
மூத்தபாட்டனாதலால், இவனழிவுக்கு எல்லோரும் இரங்குவாராயினர். புருஹு தன் -
வடசொல்; புரு - மிகுதியாக, ஹூதன் - (யாகங்களில்) அழைக்கப்படுபவன்
என்றும்; புரு-புரு என்னும் அசுரனை, ஹூதன் - கொன்றவன் என்றும்
பொருள்படும். பி-ம்: அம்பினால். திரண்டுவரவே.                  (361)

                                வேறு.

38.-வீடுமன் உத்தராயணகாலம் வருமளவும் உயிர்விடேனென
யோகத்தாலுயிரை வைத்துக்கொண்டிருத்தல்.

ஆக மெங்குந் தங்கு மம்பி னணைமேல் வீழ்வான்
யோகங் கொண்டே யுயிரை யோடா வண்ண நிறுவி
மாகஞ் சூழும் பரிதி வடபா லெய்து மளவும்
நாகங் காணே னென்ன ஞானத் தோடே வைக.