பக்கம் எண் :

248பாரதம்வீட்டும பருவம்

ஆதி ஆன அரசர்- துரியோதனனை முதலாகவுடைய அரசர்களும், பொங்கும்
கடலால் உலகம் பொன்றும் அன்று போல-பொங்குகின்ற கடலினால்
உலகங்களழியும் அந்தயுகாந்த காலத்திற் (பிராணிகள் வருந்துவது) போல, சிங்கம்
அன்னான் பாதம்சென்னி மேல்கொண்டு அழுதார்-சிங்கத்தை யொத்தவனான
வீடுமனது திருவடிகளைத் தலைமேல் வைத்துக்கொண்டு புலம்பினார்கள்; (எ-று.)    

     பாதம் சென்னிற்மேற் கொண்டு - திருவடிமீது முடிபடும்படி சாஷ்டாங்கமாக
விழுந்து தண்டனிட்டு என்க. நற்குணநற்செய்கைகளையுடைய பாண்டவர் பக்கல்
அபிமானத்தால் 'இங்கும்' என்றும், தீக்குணம் தீச்செய்கைகளையுடைய எதிரிகள்
பக்கல் வெறுப்பால் 'அங்கும்' என்றும் கவி கூறினார். பி - ம்: பொங்குங்கனலால்.
                                                            (363) 

40. இதுவும், மேற்கவியும்-ஒருதொடர்; இருதிறத்தாரும் புலம்பல்.

மறமும்வாகுவலியும்வல்வின்முதலெப்படையின்
திறமுந்தேசும்வாழ்வுஞ்சீருங்கேள்விச்செலவும்
நிறமுமுண்மையறிவுநெறியும்புகழுந்திகழ்பேர்
அறமும்பொன்றுநின்னோடையாவந்தோவந்தோ.

     (இ-ள்.) ஐயா-தலைவனே! மறம்உம்-பராக்கிரமமும், வாகுவலிஉம் -
தோள்வலிமையும்,  வல் வில் முதல் எ படையின் திறம்உம்-வலியவில் முதலிய
எல்லா ஆயுதங்களின் வல்லமையும், தேசுஉம்-ஒளியும்,வாழ்வுஉம்-(மதிப்போடு)
வாழ்தலும,்சீர்உம்-சிறப்பும், கேள்வி செலவுஉம் - நூற்கேள்விகளின்படி ஒழுகும்
ஒழுக்கமும், நிறம்உம்- பெருமையும், உண்மை அறிவுஉம்-தத்துவஞானமும்,
நெறிஉம்-நீதிவழியும், புகழ்உம்-கீர்த்தியும், திகழ் பேர் அறம்உம்- விளங்குகிற
சிறந்ததருமமும், (என்னும் இவையெல்லாம்), நின்னோடு பொன்றும்-(உலகத்தில்)
உன்னுடனே அழியும்; அந்தோ அந்தோ-! (எ-று.)

     உன்போலப் பராக்கிரமம் முதலியன உடையார் ஒருவரும் இனி
உலகத்திலில்லை யென்பதாம், தேசு-க்ஷத்திரியதேஜஸ். அந்தோ அந்தோ,
அடுக்கு-இரக்கம். நிறம்-நற்குணமுமாம்.                       (364)

41.தந்தையின்பமெய்தத்தவமேயின்பமாகச்
சிந்தைதெளியுஞானச்செல்வாசெஞ்சேவகனே
முந்தைமரபுக்கெல்லாமுதல்வாஞாலமுழுது
மெந்தையாளவைப்பாரினியார்கோவேயென்றார்.

     (இ-ள்.) தந்தை இன்பம் எய்த-பிதாவாகிய சந்தனு (இரண்டாவது மணஞ்
செய்து) இன்பமடையும்பொருட்டு, தவம்ஏ இன்பம் ஆக சிந்தை தெளியும்-
துறவறவொழுக்கத்தையே உலகவின்பமாகக்கருதி மனந்தெளிந்த, ஞானம் செல்வா-
தத்துவஞானமாகிய செல்வத்தையுடையவனே! செம் சேவகனே-நீதிதவறாத வீரனே!
முந்தை - பழமையான, மரபுக்கு எல்லாம் - குருகுலத்திற்பிறந்த