பக்கம் எண் :

பத்தாம் போர்ச்சருக்கம்249

எங்கள் எல்லோர்க்கும், முதல்வா-மூத்தவனே!எந்தை-எமது வமிச பிதாவே!
கோவே-தலைவனே! ஞாலம் முழுது உம் ஆள வைப்பார் இனி யார்-
பூமிமுழுவதையும் (எங்களை) அரசாளும்படி (முடிசூட்டி) வைப்பவர் இனி
வேறுயாவர் உளர்? என்றார்-என்றுசொல்லி (இருதிறத்தாரும்) புலம்பினார்கள்;(எ-று.)

     "போகமுந்தரும மேயானமெய்ப்புனிதன்'' என்றார், ஆறாம் போர்ச்சருக்கத்தும்.
எந்தை-அண்மைவிளி; அன்புபற்றிவந்த மரபுவழுவமைதி.                (365)

42.-அழும் மைந்தர்க்கு வீடுமன் தேற்றரவு கூறுதல்.

அழுதமைந்தர்தம்மையஞ்சலென்றென்றாற்றி
எழுதுதொல்லைவினையையாரேவிலக்குகிற்பார்
உழுதுவாளியுருவவுங்கண்முன்னர்வீழ்ந்தேன்
பழுதொன்றில்லையிதுவேபயனென்பவத்தாலென்றான்.

     (இ-ள்.) (அப்பொழுதுவீடுமன்), அழுத மைந்தர் தம்மை-(இங்ஙனம்) புலம்பின
குருகுலகுமாரர்களை, அஞ்சல் என்று என்று-பயப்படாதீர்கள் என்று பலமுறை
சொல்லி, ஆற்றி - துயரந்தணித்து, 'எழுது தொல்லை வினையை விலக்குகிற்பார்
யார்ஏ-நியமிக்கப்பட்ட பழமையான கருமப் பயனைத் தடுக்கவல்லவர் யாவர்?
[எவருமில்லை யென்றபடி]; வாளி உழுது உருவ-அம்புகள் தைத்து ஊடுருவ,
உங்கள் முன்னர் வீழ்ந்தேன்-உங்களெதிரில் அழிந்து விழுந்தேன்; (ஆதலால்
எனக்கு), பழுது ஒன்று இல்லை-ஒருதீங்கு மில்லை; இது ஏ என் பவத்தால் பயன் -
இதுவே எனது (அரசப்) பிறப்பினால் பெற்ற பலன்', என்றான் - என்றுசொன்னான்;
(எ-று.)

     இப்பாட்டின் மூன்றாமடியால், பகைவரம்பால் போரிற் புண்பட்டு வீழ்தல்
வீரர்களுக்குச் சிறப்பென்றும், பலபந்துக்களது முன்னிலையில் இறத்தல் யாவர்க்கும்
சிறப்பென்றும் விளங்கும்.                                       (366)

43.-அருச்சுனன் வீடுமன்சொற்படி அம்புகளால் அவன் முடியைத்
தாழாது உயரும்படி செய்தல்.

சரத்தின்சயனம்பஞ்சசயனங்களினுமினிதென்
சிரத்தின்றாழ்வுதீர்ப்பாய்திண்டோள்விசயாவென்ன
வரத்தின்பயனாலுயிரைநிறுத்துமன்னன்மகிழ
வுரத்தினம்பான்முடியையுயரும்வண்ணமுயர்த்தான்.

     (இ-ள்.) (பின்பு அருச்சுனனை நோக்கி), வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும்
மன்னன்-(தந்தைகொடுத்த) வரத்தின் பலத்தால் உயிரை (உடம்பு விட்டு நீங்காதபடி
யோகங்கொண்டு) நிறுத்தியுள்ள பீஷ்மராசன், 'திண்தோள் விசையா -
வலியதோள்களையுடைய அருச்சுனனே! சரத்தின் சயனம்-(உனது) அம்புகளாலாகிய
படுக்கை, பஞ்ச சயனங்களின்உம் இனிது - ஐவகைப் பொருள்களால் அமைந்த
மெத்தையினும் (எனக்கு) இனிமையாக