முன்னமே தன்மக்கள்சிலர் இறந்ததனால் மனம்வருந்திய திருதராட்டிரன் இப்பொழுது குலத்தலைவனும் சேனாபதியும் தன்னைவளர்த்த தந்தையுமான வீடுமனும் அழிந்த செய்தியைக் கேட்டு அவ்வருத்தத்தின்மேல் மிக்கவருத்தமுற்றானென்பதாம். நான்காமடி - துன்பத்தின்மேல் துன்பமடைதற்கு உவமை; ''புண்ணிலாம்பெரும்புழையிற் கனல்நுழைந்தாலென'' எனக் கம்பர் கூறியதுங் காண்க. இனி, முதல்வன் புதல்வன் என்பதற்கு - யாவர்க்கும் முதல்வனாகிய திருமாலினது அவதாரமான வியாசமுனிவனுக்கு மகனாகிய திருதராட்டிர னென உரைத்தலுமொன்று. இரண்டாமடியால், வீடுமனைத் திருதராட்டிரன் தனக்குக் கண்ணாகக் கருதியிருந்தமை விளங்கும். பி-ம்: அயலுற்றென்ன. (373) 50.-இனிச்சேனாபதியாகுபவர் யாரென்று துரியோதனன் எண்ணுகையில், கர்ணன் தான் சேனாபதியாவே னெனல். செங்கணரவக்கொடியோன்சேனாபதியாய்நாளை யிங்குமுனையினிற்பார்யாரென்றெண்ணுமெல்லை அங்கர்பூபன்யானேயமரார்வானத்தமரக் கங்கைமைந்தன்சொன்னபரிசேகாப்பனென்றான். |
(இ-ள்.) செம் கண் அரவம் கொடியோன் - (கோபத்தாற்) சிவந்த கண்களையுடைய துரியோதனன், 'இங்கு - இப்பக்கத்தில், சேனாபதி ஆய் - சேனைத்தலைவனாய், நாளை - நாளைக்கு, முனையில்-போர்க்களத்தில், நிற்பார்- நிற்கவல்லவர்,யார்?'என்றுஎண்ணும் எல்லை - என்று ஆலோசிக்கும் பொழுது,- அங்கர் பூபன் - அங்க நாட்டாரரசனான கர்ணன், 'யானே-,அமரார் வானத்து அமர-பகைவர்கள் மேலுலகத்துச் செல்லும்படி, கங்கை மைந்தன் சொன்ன பரிசுஏ - வீடுமன்சொன்னபடியே, காப்பன் - (சேனைத்தலைவனாய் நம்சேனையைக்) காப்பேன்,' என்றான்-என்றுசொன்னான்; (எ-று.) கங்கைமைந்தன் சொன்னதை, கீழ் நாற்பத்துநான்காங்கவியிற் காண்க. கர்ணன்வீடுமனிடஞ் சென்று அவனைக் கண்டு பேசித் தான் சேனாபதியாகும்படி அவனிடம் விடைபெற்றுவந்தானென இங்கே முதனூல் கூறும். அமரார் - (தம்மை) விரும்பிச் சேராதவர். பி - ம்: அமரிற்றலைவனாகி. (374) 51.-தனக்குத் துணையாக நிற்பவர் ஒருவருமில்லையென்று அக்கர்ணனைத்துரியோதனன் விலக்கித் துரோணனைச் சேனாபதியாகெனல். தானாதிகனேநீவெஞ்சமரிற்சேனைத்தலைவ னானாலரசாய்நிற்பார்யாரென்றவனைவிலக்கி மீனார்கொடியோன்றன்னைவென்றவேதக்கொடியோய் சேனாபதியாகென்றான்றீவாய்நாகக்கொடியோன். |
|