பக்கம் எண் :

பத்தாம் போர்ச்சருக்கம்255

     (இ-ள்.) (அதுகேட்டு), தீ வாய் நாகம் கொடியோன்- விஷாக்கினியை உமிழும்
வாயையுடைய பாம்பைக் கொடியிலுடைய துரியோதனன், (கர்ணணை நோக்கி),
'தான அதிகனே - ஈகையால் மேம்பட்டவனே! நீ-, வெம்சமரில் -
கொடியயுத்தத்தில், சேனை தலைவன் ஆனால்-சேனாதிபதியாய் விட்டால், அரசு
ஆய் நிற்பார் யார் - (என்னுடன் பிரதான) அரசனாய்நிற்பவர் வேறுயாவர்?
[எவருமில்லையே என்றபடி],' என்று-என்றுசொல்லி, அவனை விலக்கி -
அக்கர்ணனை (ச்சேனைத்தலைமை பூணுதலினின்றி) விலக்கி (துரோணனை
நோக்கி), 'மீன் ஆர் கொடியோன்தன்னை-மீன்பொருந்தின கொடியையுடைய
மன்மதனையும், வென்ற-(போர்த்திறத்தில்) சயித்த, வேதம் கொடியோய்-
வேதமெழுதிய கொடியை யுடையவனே! சேனாபதி ஆக-(நீ)
சேனைத்தலைவனாகுக,' என்றான்-என்று பிரார்த்தித்தான்; (எ-று.)

     காமமுதலிய குற்றங்களை ஒழித்தவனென்றும், மன்மதனை வென்ற
சிவபிரானோ டொத்தவனென்றும் மூன்றாமடிக்குக் கருத்துக்கொள்ளல் சாலும்.
உயர்ந்த சாதியில் சிறந்தகுலத்திற்பிறந்த வனாதலாலும், பிராய அறிவு
ஒழுக்கங்களில்முதிர்ச்சியுடையவனாதலாலும், அஸ்திரசஸ்திர வித்தைகளில் சிறந்த
அநேகர்க்கும்ஆசிரிய னாதலாலும், துரோணன்
சேனைத்தலைவனாக்கப்பட்டான்.

52.-துரோணன் சேனாபதியாயிருத்தற்கு உடம்பட, யாவருந் துயிலுதல்.

சிலையாசிரியன்வேந்தர்வேந்தன்சேனைதனக்குத்     
தலையாய்மன்னர்யாருந்தன்னைவந்துசூழக்
கொலையார்பகழிவெள்ளமார்பந்தோறுங்கோத்துத்        தொலையாவெம்போர்தொலைக்கத்துணிந்தானெவருந்துயின்றார்

     (இ-ள்.) சிலை ஆசிரியன்-வில்லாசிரியனாகிய துரோணன், வேந்தர்
வேந்தன்சேனை தனக்கு தலைஆய்-துரியோதனனதுசேனைக்குத் தலைவனாய்,
மன்னர்யார்உம் தன்னை வந்து சூழ - அரசர்களெல்லோரும் தன்னை
வந்துசூழ்ந்திட,-கொலை ஆர்-கொல்லுதல் தொழில் மிக்க, பகழி வெள்ளம் -
பாண வருஷத்தை,மார்பம் தோறுஉம்-(பகைவீரர்களது) மார்பிலெல்லாம், கோத்து-
தொடுத்து,தொலையாவெம் போர்-நீங்காத கொடிய போரை,  தொலைக்க-
செய்துமுடிக்க, துணிந்தான்-நிச்சயித்தான்; (பின்பு அவ்விரவில்), எவர்உம்
துயின்றார்-எல்லோரும்உறங்கினார்கள்; (எ-று.)-பி-ம்: சேனைக்கெல்லாம்.    (376)

53.-சூரியோதய வருணனை.

வருணன் மைந்தன் பாடு வருணற் குரைத்து மீளத்
தருண மைந்தன் விசயஞ் சதம கத்தோன் கேட்ப
இருணி றைந்த கங்கு லேங்கி முன்னே யோட
அருணன் பொற்றேர் தூண்ட வருக்கன் குணபா லடைந்தான்.