பக்கம் எண் :

26பாரதம்வீட்டும பருவம்

வீரசாபமுஞ்சாபமும்வீக்கின
தூரவாளியும்வாளியுந்தோய்ந்தவே.

     (இ - ள்.) (இருத்திறத்திலும்), பாரம் - பெரிய, வாளம்உம் வாளம் உம் -
வாளாயுதங்களும் வாளாயுதங்களும், பாய்ந்தன - (ஒன்றின்மேலொன்று) பாய்ந்தன;
கூர - கூர்மையையுடைய, வேல்கள்உம் வேல்கள்உம் - வோலாயுதங்களும்
வோலாயுதங்களும், குத்தின - (ஒன்றையொன்று) குத்தின; வீரம் - போர்
வலிமையையுடைய, சாபம்உம் சாபம்உம் - விற்களும் விற்களும், வீக்கின -
(ஒன்றையொன்று) அழித்தன; தூரம் - நெடுந்தூரத்திலுஞ் செல்லுந்தன்மையுள்ள,
வாளிஉம் வாளிஉம் - அம்புகளும் அம்புகளும், தோய்ந்த - (ஒன்றின்மேலொன்று)
பொருந்தின; (எ - று,)

     வாள்வீரரோடு வாள்வீரரும், வேல்வீரரோடுவேல்வீரரும், வில் வீரரோடு
வில்வீரரும் எதிர்த்துப்பொருததை உபசாரவழக்காக ஆயுதங்களின்மேல் ஏற்றிக்
கூறினார். பாராவாளம், வீரசாபம், தூரம் - வடசொற்கள். வாளம் என்ற
வடமொழியே, வாள்என விகாரப்பட்டுநிற்பது; இனி, வேறு தமிழ்மொழி யென்னின்,
அம் - சாரியை யென்க. கூர - கூரென்னும் பகுதியின்மேற் பிறந்த
குறிப்புப்பெயரெச்சம்; இனி, கொடியதென்னும்பொருள் தரும் க்ரூரமென்னும்
வடசொல்திரிந்ததாக்கொள்ளினும் பொருந்தும்.                      (21)

22.இட்டதார்முடிமன்னவரோடெதிர்
இட்டதார்முடிமன்னவரெய்தினார்
பட்டவர்த்தனப்பார்த்திவர்தம்முடன்
பட்டவர்த்தனப்பார்த்திவரெய்தினார்.

     (இ - ள்.) (இருபடையிலும்), இட்ட தார் - அணிந்தமாலையையுடைய, முடி
மன்னவரோடு - கீரிடந்தரித்து அரசாளும் மகுடவர்த்தனரென்னும் அரசர்களோடு,
இட்ட தார் முடி மன்னவர் - அத்தன்மையரான மகுடவர்த்தனர், எதிர் எய்தினார்-
எதிரிற் பொருந்தினார்; பட்டவர்த்தனப் பார்த்திவர் தம்முடன் - (கிரீடமின்றி)
நெற்றிப்பட்டத்தை மாத்திரங்காட்டி அரசாளும் பட்டவர்த்தனரென்னும்
அரசர்களோடு, பட்டவர்த்தனப் பார்த்திவர் - அத்தன்மையரான அரசர்கள்,
எய்தினார் - பொருந்தினார்; (எ - று,)

     ஒத்தவீரர்கள் ஒருவரோடொருவர் எதிர்த்தல் தருமயுத்தமாதலின்,
இங்ஙனங்கூறினார்.                                         (22)

23. மந்திரத்தவர்தம்முடன்மாமதி
மந்திரத்தவர்வந்தெதிர்மோதினார்
தந்திரத்தவர்தம்மிசையேசெலத்
தந்திரத்தவர்சாயகமேவினார்.

     (இ - ள்.) மா மதி - சிறந்த அறிவையுடைய, மந்திரத்தவர் தம்முடன் -
மந்திரிகளுடனே, மந்திரத்தவர்-மந்திரிகள், எதிர் வந்து மோதினார் - எதிர்த்து
வந்துதாக்கினார்கள்; தந்திரத்தவர்தம் மிசைஏ செல-படைத்தலைவர்கள்மேலேயே
செல்லும்படி, தந்திரத்.