பலதம்பிமார் - துச்சாசனனையுந் துன்முகனையுஞ் சித்திராங் கனையுமுள்ளிட்டார்நாற்பத்தொன்பதின்ம ரெனவும், விந்தரன் - பூதிவிந்த னென்பவனெனவும், 'ஆதியர்'என்றது-திட்டத்துய்மனையுஞ் சாத்தகியையும் எனவும் பெருந்தேவனார் பாரதத்தால்விளங்கும். * பி-ம்: சல்லியனிவரையும். (37) 38.-வீமன் வீடுமனுடன்பொருது அவனுக்குத் துணையாய் வந்த சகுனிமுதலானாரையும் பின்னிடச்செய்தல். வன்பனைக்கொடிமீதுபன்னிருவாளிமெய்க்கவசத்தின்மேல் ஒன்பதிப்படியேவிவீடுமன்மெய்ந்நடுங்கவுடற்றினான் மன்பரப்பொடுசகுனிசல்லியன்வந்ததம்பியரனைவரும் பின்படப்பலகணைதொடுத்தனன்வருசதாகதிபிள்ளையே. |
(இ-ள்.) வரு - (அங்ஙனம் அருச்சுனனுக்குத் துணையாக) வந்த, சதாகதிபிள்ளை-வாயுகுமாரனான வீமன், வீடுமன்-பீஷ்மனது, வன் பனைகொடி மீது-வலிய பனைமரத்தின்வடிவமெழுதிய துவசத்தின்மேல், பன்னிருவாளி - பன்னிரண்டுபாணங்களும், மெய் கவசத்தின்மேல் - உடம்பிலணிந்த கவசத்தின்மேல், ஒன்பது(வாளி) - ஒன்பது பாணங்களும், இப்படி ஏவி-(ஆக) இவ்வாறு பிரயோகித்து, மெய்நடுங்க- (அவ்வீடுமன்) உடல் நடுங்கும்படி, உடற்றினான்- போர் செய்தான்;(அன்றியும்), மன் பரப்பொடு வந்த-மிக்க யுத்தவேகத்துடனே (வீடுமனுக்குத் துணை)வந்த, சகுனி சல்லியன் தம்பியர் அனைவரும்உம் -சகுனியும் சல்லியனும்(துரியோதனனது) தம்பிமார் பலருமாகிய எல்லோரும், பின் பட-பின்னிடையும்படி,பலகணை தொடுத்தனன்- அநேக பாணங்களை யெய்தான்; (எ - று,) "நினைப்பரிய கூர்வாளி நீள்வரைத்தோள் வேந்தன், பனைக் கொடிமேற் பன்னிரண்டு பாய்ச்சி - நுனைப்பகழி, யொன்பதுகொண்டாங்கவன்ற னொண்கவசத் திண்புறுத்தி, முன்பதிர வெய்தான் முனிந்து" என்றார் பாரத வெண்பாவிலும். பனைக்கொடி - தாலத்துவஜம். கவசம்-இரும்பு முதலியவற்றாலாகிய உடம்பின்மேற் சட்டை, முதலடியிலுள்ள வாளி யென்பது, இரண்டாமடியிலும் எடுத்துக்கூட்டப்பட்டது; அன்றி, ஒன்பது என்பதை எண்ணலளவை யாகுபெயராகக் கொள்ளலுமாம். பரப்பு - பரபரப்பு. பின் பட- புறங்கொடுத்தோட, தோற்க. ஸதாகதி யென்ற வடமொழிப் பெயர்க்கு - எப்பொழுதுஞ் சஞ்சரித்தலை யுடையவ னென்று பொருள். பிள்ளை - இருதிணைக்கும்வரும். மன்பரப்பொடு கணைதொடுத்தனன் என இயைத்தலுமாம். (38) 39.-அபிமன்னு வீடுமனது தேர்க்குதிரையை யழித்தலும் உத்தரன் சல்லியனோடு பொருதலும். ஏசிலாதுயர்தன்பிதாவினெழிற்பிதாமகனேறுதேர் வாசிநாலும்விழத்தொடுத்தனன்வாளியாலபிமன்னுவும் |
* பி - ம் :என்பது வருமிடங்களிலெல்லாம் பிரதிபேதம் என்ற பொருளது. |