அப்பொழுது அடைந்த மனத்துயரமும், அப்படி-அதற்கேற்றவாறேயிருந்தது; (பின்பு), வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன - (பகை) வென்று (நெற்றியில்) வீரபட்ட மணிந்த யானை போல, (பகைவர் அஞ்சும்படி கம்பீரமாய்), வீமன் - வீமசேனன், அமரின்மேல் வந்தனன் - போர்செய்தற்கு வந்தான்; (எ - று.) துரியோதனன் பக்கத்தார் உத்தரனிறந்ததற்காக எவ்வளவு மகிழ்ந்தனரோ, அவ்வளவு விசனப்பட்டார்கள் அதற்காகப் பாண்டவ சேனையா ரென்பார், 'அப்படி' என்றார். மச்சர்கோ-மத்ஸ்யதேசத்தார்க்கு அரசன். நேரலார்-தம்மோடு மனமிணங்காதவர்; எனவே. பகைவராயிற்று. கற்பமுடிவுதோறுங் கடல் பொங்கியெழுந்து உலகை மூடியழிக்கு மென்பது, நூற்கொள்கை. யானை - வீரனுக்கு,நடைவலிமை காம்பீரியங்களால் உவமை. வாரணம் - தற்சமவடமொழி. (41) 42.-வீமன் போரில் வரவே எதிரிகள் பின்னிடைய, அப்போது துரியோதனன் வரக் கண்டு வீமன் சினத்தல். தாமன்மேல்வரவரவுடைந்திடுதமமெனும்படிதண்டுடன் வீமன்மேல்வரவரவுடைந்தனர்மேவலார்கள்வலம்புரித் தாமன்மேல்வரவரவுகண்டுதரிக்கிலாதெதிர்சென்றனன் காமன்மேலரனென்னநெஞ்சுகனன்றுகண்கள்சிவக்கவே. |
(இ-ள்.) தாமன்-ஒளிவடிவமான சூரியன், மேல் வரவர- வானத்திலே உயர்ந்துவரவர, உடைந்திடு - அழிந்தொழிகிற, தமம் எனும்படி- இருள்போல, வீமன்தண்டுடன் மேல் வர வர - வீமசேனன் (தனது சத்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தோடு தம்மேல் எதிர்த்துவரவர, மேவலார்கள்-எதிர்பக்கத்தார், உடைந்தனர்- அழிந்தொழிந்தனர்; (அப்பொழுது), வலம்புரி தாமன் - நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனன், மேல்வர - வீமன்மேல் எதிர்த்துவர, (வீமன்), வரவு கண்டு -(அவனது)வருகையைப் பார்த்து, தரிக்கிலாது - சகிக்காமல், நெஞ்சு கனன்று-மனங்கோபித்து, கண்கள் சிவக்க - (அதனாற்) கண்கள் செந்நிறமடைய, காமன்மேல் அரன் என்ன-மன்மதன்மேற் பரமசிவன் போல, எதிர் சென்றனன் - (அத்துரியோதனன்மேல்) எதிர்த்துச் சொன்றான்; (எ - று.) இப்பாட்டிற்கூறிய உவமையிரண்டனுள், முன்னது-இருந்த விடந்தெரியாதபடி உடனே அழிதற்கும், பின்னது - தவறாமல் விரைவில் எளிதில் அழிதற்கும் உவமை. தாமம் - வடசொற்றிரிபு: இது-ஒளியும் மாலையுமாதலை "தாம மொளியுந் தார்மாலையுமாம்" என்ற திவாகரத்தாலு மறிக. சூரியனுக்கு 'தாமநிதி' என்று வடமொழியில் ஒரு பெயர். தமஸ் - வடசொல். மேவலார் - விரும்பிச்சேராதவரென்று காரணப்பொருள். காமன் என்பதற்கு - (ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒன்றற்கொன்று) ஆசையை விளைப்பவனென்றும், (யாவருங்கண்டு) விரும்புங் கட்டழகுடையவ னென்றும் பொருள். அரன் - ஹரன்; இவ்வடமொழிப்பெயர், அழித்தற்றொழிற் கடவுளானமைபற்றியது: இனி, அரனென்பதற்கு - அடியவரது அருந்துயரை அழிப்பவ னென்றும் பொருள்கொள்ளலாம். துரியோதன. |