பக்கம் எண் :

40பாரதம்வீட்டும பருவம்

னுக்கு அடையாளப்பூமாலை, நந்தியாவட்டம். ஒருகாலத்தில் கைலாச கிரியிற்
சிவபெருமான் சனகர்முதலிய நால்வர்க்கு யோக நிலைமையை
உணர்த்துதலினிமித்தம் தாம் யோகஞ்செய்துகொண்டிருக்கையில், பிரமனேவலால்
மலரம்புகளை யெய்து தமதுதவத்தைக் கெடுக்கலுற்ற மன்மதனைச் சினந்து
நெற்றிக்கண்ணை விழித்து அதன்நெருப்புக்கு இரையாய் உடம்பெரிந்து
சாம்பராய்ப்போம்படிசெய்தன ரென்பது ஈற்றடியிற் குறித்த கதை.      (42)

43.-வீமன் துரியோதனனைச் சார்ந்தாரோடு நிகழ்த்திய கடும்போர்.

செண்டினால்வசுகிரிதிரித்திடுசெழியனென்னவெடுத்தகைத்
தண்டினாலெதிர்சென்றுதேரணிதிரியவன்பொடுசாடினான்
மண்டினார்மணிமுடியும்வேழமும்வாசியும்பலதுணிபடக்
கெண்டினான்முனைநின்றபன்னககேதுவோடமர்மோதினான்.

     (இ-ள்.) செண்டினால்-(சிவபிரான் கொடுத்தருளின) செண்டை
ஆயுதமாகக்கொண்டு அதனால், வசுகிரி-பொன்மலையாகிய மகாமேருவை,
திரித்திடு-சுழலச்செய்த, செழியன் என்ன-பாண்டியன் போல, எதிர் சென்று-
எதிர்த்துப்போய்,கை. எடுத்த தண்டினால்-(தன்) கையிலேந்திய கதாயுதத்தால்,
மண்டினார்-(துரியோதனனைச் சுற்றிலும்) நெருங்கியுள்ள அரசர்களது, தேர் அணி-
தேர்களின்வரிசைகள், திரிய - நிலைகெடும்படி, வன்பொடு சாடினான் -
வலிமையோடு அடித்து, (அவர்களது) மணி முடிஉம் - இரத்தினகிரீடமும்,
வேழம்உம்- யானைகளும், வாசிஉம்-குதிரைகளும், பல துணிபட -
அநேகந்துண்டுகளாகும்படி, கெண்டினான் - பிளந்து,முனை நின்ற பன்னக
கேதுவோடு - எதிரில்நின்ற  பாம்புக் கொடியனானதுரியோதனனுடனே, அமர்
மோதினான் - போர்செய்பவனானான்; (எ-று.)

     வஸு - செல்வம், வடசொல்; இது, இங்கே சிறப்பாய்ப் பொன்னையுணர்த்திற்று.
செழியனென்பது - செழுமையுடையவனெனப் பொருள்படும்: பாண்டியனைக்
குறிப்பது. கெண்டுதல் - கிண்டுதல், கண்டித்தல். பி - ம் : தறிய . கிண்டினான்.

     முதலடியிற் குறித்த கதை:- மலயத்துவசபாண்டியனது மகளாகிய
தடாதகைப்பிராட்டியைச் சுந்தரபாண்டியவடிவமாகி மணம் புரிந்துகொண்ட
சிவபெருமான் அவளிடம் தமக்குப்பிறந்த குமாரனாகிய உக்கிரபாண்டியனுக்கு
முடிசூட்டி அவனுக்குப் பகையாகும் கடலையும் இந்திரனையும்
மேருவையும்வெல்லுமாறு வேலும் வளையும் செண்டும் அளித்துப் போயினர்;
பின்னர் அவன் ஒருகால் தன் நகர்மேற் பொங்கியெழுந்த ஏழுகடல்களையும்
வேலெறிந்து வற்றச் செய்துவென்றான்;  ஒரு காலத்தில் தன் நாட்டிற்
பொதியமலையில் மேய்ந்திருந்த மேகங்களைப் பிடித்து அவன் தளைசெய்ய, அது
கேட்டுத் தன்னையெதிர்த்து யுத்தஞ்செய்து தேவேந்திரன்மீது வளையையெறிந்து
மகுடபங்கப்படுத்திச் சயித்தான்; மற்றொரு காலத்தில் தன்நாட்டில்
பஞ்சம்நேரிட்டபொழுது மேருகிரியையடைந்து நிதிதேடி அது
இருக்குமிடந்தெரியாமையால் அதன்மேற் செண்டைவீசி, அதற்கு ஆற்றாமல்
அம்மலையரசன் எதிரில்வந்து