பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்41

கொடுத்த பொருள்களை யெல்லாம் பெற்றுவந்தா னென்பது கதை. 'செண்டினா
லிமகிரி திரித்திடு சென்னியென்ன' என்ற பாடத்துக்கு-ஒரு செண்டினாலே
இமயமலையைத் திருப்பிய சோழன் போல என்று பொருள்; அதற்குக் கதை
வருமாறு;-
பூர்வத்தில் மிக வலிமைகொண்ட கரிகாலனென்னுஞ் சோழராசன்,
சேரபாண்டியர் முதலிய அரசரெவரும் இங்குத் தன்னையெதிர்த்துப் போர்செய்யும்
வல்லமையுடைய ரல்லாமையால், போரிலே பேராசையையும் தோள்தினவையும்
உடையவனாய் 'வடதிசை பெருந்திசையாதலால், அங்கேயாவது பகைபெறலாம்'
என்று எண்ணிப் போர்விருப்பத்தோடு புறப்பட்டுச்சென்று அங்கும் எதிர்ப்பவர்
எவரையும் பெறாமல் அப்பாற் செல்லுமளவிலே, இமயமலை இவனை வழிதடுப்பது
போலக் குறுக்கிட்டு எதிரிற் காணப்பட,  அதுகண்டு அவன் 'இதுபகையாக நின்று
என்னை விலக்கி எதிரிட்டது' என்று கருதிக் கோபங்கொண்டு அதைப்
புறங்காண்பதற்காகவும், அதற்கு வடக்கிலுந் தனது ஆஞ்ஞை செல்லுவதற்காகவும்,
தனது போர் விருப்பத்தையும் தோள்தினவையும் தணித்துத் தன்பெருவலிமையையும்
வெற்றியையும் வெளியிடுவதற்காகவும், சாத்தனனென்னுந் தெய்வத்தின் அருளால்
தான் பெற்ற ஒருசெண்டை ஆயுதமாகக்கொண்டு அந்த மலையின்மேல் எறிந்து
அதனால் அதை அடித்துத்திருப்பி அம்மலையின் மேல்புறத்திலே தனது
கொடியாகிய புலியை வெற்றிக்கு அடையாளமாக எழுதுவித்து, பின்பு
கோபந்தணிந்துமீண்டும் அக்கிரியை முன்போலவே திருப்பிச் சரி செய்து
நிறுத்தினான் என்பதாம்; இதைச் சிலப்பதிகாரத்தாலும் கலிங்கத்துப்பரணியாலும்
அறிக.                                                        (43)

44.-இதுவும் அடுத்த கவியும் - வீமன் துரியோதனனோடு நிகழ்த்திய
கடும்போரைத் தெரிவிக்கும்.

மோதியாயிரபேதமாகமுனைந்துதங்களிலிருவருஞ்
சாதியாதனவில்லைமீளிமடங்கலேறனதன்மையார்
காதியாடமர்புரியுமேதினிகாவலன்குனிகார்முகஞ்
சேதியாவொருகைகொடேறியதேரெடுத்தெதிர்சிந்தினான்.

     (இ - ள்.) (அப்பொழுது), மீளி-வலிமையையுடைய, மடங்கல் ஏறு -
ஆண்சிங்கத்தை,அன - ஒத்த, தன்மையார் - தன்மையையுடையவர்களாகிய,
இருவர்உம் - (வீமனும்துரியோதனனும் ஆகிய) இரண்டுபேரும், தங்களில் -
தமக்குள் (ஒருவரோடொருவர்)மோதி - தாக்கி, ஆயிரம் பேதம் ஆக முனைந்து -
மிகப்பலவகைகளாகப்போர்செய்து, சாதியாதன - செய்து முடிக்காத யுத்த வகைகள்,
இல்லை-: (பின்புவீமன்), காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் -
வருத்திவெல்லவல்லபோரைச்செய்யும் நிலவுலகத்தரசனான துரியோதனனது, குனி
கார்முகம் - வளைந்த வில்லை, சேதியா - துண்டுபடுத்தி, ஒருகை கொடு - (தனது)
ஒருகையால், ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் - (அவன்) ஏறியுள்ள தேரைத்
தூக்கி எதிரில் வீசியெறிந்தான்; (எ - று.)

     வீரருக்குச் சிங்கவுவமை, நடை வலிமை நோக்கு தைரிய காம்பீரியங்களால்
என்க. இருவரும் சமபலமுடையவ ராதலின், இரு