யையுடைய சேனைகளைக்கொண்ட அவ்வரசர்களது பெரிய தலைகள் சிதறிவிழும்படி, அங்கு-அப்பொழுது, ஒரு கதையினால் - (தனது) ஒப்பற்ற கதாயுதத்தால், நனி சீறினான் - மிகக் கோபித்து அடித்தான்; மிகவலிமையுடையவனான வீமனுக்கு வாயுவும், அவனால் தள்ளப்பட்ட மன்னர் தலைகளுக்கு மகாமேருசிகரங்களும் உவமை. வீமன் வாயு குமாரனாதலால் அவனுக்கு வாயுவை உவமையாக்கியும், படை மன்னர் வஞ்சகனான துரியோதனனைச் சார்ந்தவ ராதலால் அவருக்குக் கைதவம் என்ற அடைமொழி கொடுத்துங் கூறினார். விண்ணிடைச் செய்துபெற்றனதேர்-விரைந்து செல்லுதலிலும், வலிமையிலும் அழகிலும், சிறப்பிலும் தேவவிமானம் போன்ற தேர்என்க. பவமாநன், கைதவம் - வடசொற்கள். முக்குவடு-திரிகூடம். அங்கு-அவ்விடத்து என்றுமாம். இல் போர் - பண்புத்தொகை. அடித்தலாகிய காரியத்தை நனிசீறுதலாகிய காரணத்தாற் கூறினார்; உபசார வழக்கு. பெற்றன-பெற்றாலன்ன, அல்லது பெற்றதன்ன. முடி- கிரீடமுமாம். பி-ம்: எய்துமத்திரர். மூன்றாமடியிற் குறித்த கதை:-முன்ஒருகால் வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார்பலசாலியென்று விவாதமுண்டாக, அதனைப் பரிசோதித்தறியும்பொருட்டு வாயுதேவன் மேருமலையின் சிகரத்தைப் பெயர்த்துத்தள்ளுவதென்றும், ஆதிசேஷன் அது பெயரவொட்டாமற் காத்துக்கொள்வதென்றும் ஏற்பாடு உண்டாகி, அங்ஙனமே இருவரும் தேவர்முதலியோரது முன்னிலையில் தத்தம் வலிமையைக் காட்டத் தொடங்கியபொழுது, ஆதிசேஷன் தனது ஆயிரம் படங்களாலும் மேருமலையின் ஆயிரஞ்சிகரங்களையுங் கவித்துக்கொண்டு பெயரவொட்டாமற் பல நேரங்காக்க, பின்னர் வாயுதேவன் தன் வலிமையால் அம்மலைச்சிகரங்களில் மூன்றைப் பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்திசையில் தள்ளி விட்டானென்பது. (47) 48.-தன்தம்பி யிறந்ததனாற் பெருஞ்சினங்கொண்டு சுவேதன் வில்லொடு தோன்றுதல். அம்பரத்தவர்கண்டுநின்றவரதிசயித்திடவானின்மே லிம்பரிப்படிதெவ்வர்வெம்படையிரியவன்பொடுதிரியவே தம்பிபட்டனனென்றுகொண்டெழுசாகரத்தெழுதழலெனத் தும்பையுற்றுமிலைச்சியீசனளித்தவில்லொடுதோன்றினான். |
(இ - ள்) அம்பரத்தவர் - மேலுலகத்தவரான தேவர்கள், வானின்மேல் - ஆகாயத்திலே (இருந்து), கண்டு நின்றவர் - (தனது போர்த்திறத்தைப்) பார்த்துக்கொண்டு நின்றவர்களாய், அதிசயித்திட - ஆச்சரியப்படும்படி, இம்பர் - இவ்விடத்திலே [போர்க்களத்தில்], தெவ்வர் வெம் படை இரிய - பகைவர்களது கொடிய சேனைகள் பயந்தோடுமாறு, வன்பொடு - வலிமையோடு, இப்படி திரிய - (வீமன்) இவ்வாறு [கதாயுத்தஞ்செய்து] சஞ்சரிக்க,-(மற்றொரு பக்கத்தில் சுவேதன்) 'தம்பி பட்டனன் என்று கொண்டு - (தனது) தம்பியான உத்தரன் இறந்தா னென்று அறிந்து, எழுசாகரத்து எழு தழல் என - பொங்குந்தன்மையதான கடலினின்று மேற்கிளர் |