சூழஉம்-உயர்ந்த கொடிய யானைகளும் குதிரைகளும் இரதங்களும் காலாட்படையும்ஆகிய சதுரங்க சைனியத்தோடு (பல) அரசர்கள் (தன்னைச்) சூழ்ந்துவரவும்,மத்திரத்து அரசு எங்கு நின்றனன் எங்கு நின்றனன் என்று போய் - (என்தம்பியைக்கொன்றவனான) மத்திரதேசாதிபதியாகிய சல்லியன் எவ்விடத்துள்ளான்எவ்விடத்துள்ளான் என்றுசொல்லித் தேடிச்சென்று, அங்கு நின்ற மகீபர்வென் இட -அவ்விடத்தில் [தான் போகிறவழியில்] நின்ற பகையரசர்கள் புறங்கொடுத்தோடும்படி,(பொருது), அவனை முந்துற அணுகினான் - அச்சல்லியனை முற்படக் கிட்டினான்;(எ - று.) அடுக்கு - கோபமும் விரைவும் பற்றியது. அரசு - அரசனுக்குப் பண்பாகுபெயர்: இது - சொல்லால் அஃறிணையாயினும் பொருளால் உயர்திணையாகையால், நின்றனன் என்ற ஆண்பால்முற்றைக் கொண்டது. வென் - வெந். (49) வேறு. 50.-சுவேதன் சல்லியனோடு வீரவாதஞ்சொல்ல, பிறகு இருவருங் கைகலந்து பொருதல். சல்லியனெ னப்பெயர்த ரித்துவரு கோமுன் வல்லியமெ னத்தகுசி வேதனமர் வல்லான் பல்லியமு ழக்கியதெ னப்பலவும் வீரஞ் சொல்லியொரு வர்க்கொருவர் தொடுசிலை குனித்தார். |
(இ - ள்.) அமர் வல்லான் - போர்செய்தலில் வல்லவனாகிய, வல்லியம் என தகு சிவேதன் -(கொடிய பராக்கிரமத்திற்) புலியென்று சொல்லத்தக்க சுவேதகுமாரன், சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன் - சல்லியனென்று பெயர்பெற்றுவந்த அவ்வரசனெதிரில் பல் இயம் முழக்கியது என - பலவகைவாத்தியங்களை முழங்கச்செய்ததுபோல, (உரத்தகுரலாக), பலஉம் வீரம் சொல்லி- பலவகைவீரவாதங்களை யெல்லாஞ் சொன்னபின்பு, (இருவரும்), ஒருவர்க்கு ஒருவர் தொடு சிலை குனித்தார் - ஒருவரோடொருவர் அம்புதொடுத்தற்குரிய வில்லை வளைத்துப் போர்செய்தார்கள்;(எ-று.) சொல்லி - எச்சத்திரிபு. தொடுசிலை - வினைத்தொகை. இதுமுதற் பத்தொன்பது கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்றுமாச்சீரும், மற்றை மூன்றும் விளங்காய்ச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள். (50) 51.-அப்போது துரியோதனன் தம்பிமார் அறுவரைச் சல்லியனுக்குத் துணையாக அனுப்புதல். ஒருவருமிவர்க்குநிகரில்லையெனவுற்றே யிருவருமலைந்திடவிராசகுலராசன் பருவரல்கொண்மத்திரபதிக்குதவியாகென் றருவரையொடொத்தபுயரறுவரைவிடுத்தான். |
|