லின் எதிரிகளதுமனம் யாதாயினுமொன்றைச் சிந்திக்கவுஞ் சிறிதும் அவகாச மில்லையாயிற் றென்க. ரணமென்னும் வடமொழி, முதலில் இகரம்பெற்று, இரணம்எனநின்றது; [நன் - பத -21.] (52) 53. | முரண்டெதிருமன்னவர்முரண்கொள்சிலையோரொன் றிரண்டுசிலையாகவொருவீரணிவையெய்தான் திரண்டுவருமன்னர்முடிசிந்தியுடன்மண்மேற் புரண்டுவிழவாளிமழைதூவுபுயல்போல்வான். |
(இ - ள்.) திரண்டு - (தம்மில்) கூடி, வரு - (போருக்கு) வருகிற, மன்னர் - பகையரசர்களது, முடி-தலையை, சிந்தி - திதறி, உடல் மண் மேல் புரண்டு விழ- (அவர்கள்) உடம்பு தரையிலே விழுந்து உருளும்படி, வாளி மழை தூவு- பாணவருஷத்தைச் சொரிகின்ற, புயல் - காளமேகத்தை, போல்வான் - ஒப்பவனான, ஒரு வீரன்-(சுவேதனாகிய) வீரனொருத்தன், முரண்டு எதிரும் மன்னவர் - பகைமைகொண்டு எதிர்த்துப்போர்செய்யும் அந்தஆறு அரசர்களது, முரண் கொள் சிலை-வலிமையைக் கொண்ட வில், ஓர் ஒன்று இரண்டு சிலை ஆக - ஒவ்வொன்றும் இவ்விரண்டு வில்லாகும்படி இவை எய்தான் - இந்தப்பல அம்புகளைச் சொரிந்தான்; (எ - று.) கீழ்க்கவியில் 'அவரந்தக்கரணம் வறிதாகும்வகை கணைபல தொடுத்தான்' என்றதையே இக்கவியில் விவரித்து நன்குவிளக்கிக் கூறினராதலால், 'கணைபல' என்றதை இவையென அண்மைச் சுட்டாற் குறித்தார். ஓரொன்று இரண்டுசிலையாக- ஒவ்வொன்று இரண்டு துண்டாக என்றபடி; ஒன்றை இரண்டாக்குதல் வல்லவர் தொழிலாதலின், இதில், ஒருவில் இரண்டு வில்லாக என ஒரு சமத்காரமுந் தோன்றக்கூறினமை காண்க; "அறுவர் சிலையினையுமாறிரண்டு கூறாக்கி" என்றார் பாரதவெண்பாவிலும். புரண்டு விழ-விழுந்துபுரள என விகுதிபிரித்துக்கூட்டுக.(53) 54. | தேரும்விசைகூரிவுளியுஞ்செறிபனைக்கைக் காருமயில்வாள்சிலைதரித்துவருகாலாள் யாரும்வெடிபூளைவனமென்னவொருதானே யூருமொருதேரனிலமொக்குமெனநின்றான். |
(இ - ள்,) (பகைவர்களது), தேர்உம்-இரதங்களும், விசை கூர் இவுளி உம்- வேகம்மிக்க குதிரைகளும், செறி பனை கை கார்உம்- (வலிமை) மிக்கபனைமரம்போன்றதுதிக்கையையுடைய மேகம் போன்ற யானைகளும், அயில் வாள் சிலை தரித்துவரு காலாள் - வேல் வாள் வில் என்னும் ஆயுதங்களை யேந்திவருகிறகாலாள்களும், யார்உம்-(ஆக நால்வகைச்) சேனையோரும், வெடி பூளைவனம்என்ன-வெடித்த இலவம்பஞ்சுத்தொகுதியை யொத்திருக்க, ஒரு தான்ஏ ஊரும்ஒருதேர் - வேறுதுணையில்லாத தான் ஒருவனே ஏறிச்செல்லும் (தனது) இரதமொன்று, அனிலம் ஒக்கும் என (அவ்விலவம்பஞ்சுகளைப் பறக்கடிக்கிற) காற்றையொக்கு மென்று சொல்லும்படி, நின்றான் - (வெற்றிகொண்டு) நின்றான்; (எ - று.) |