பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்51

     (இ -  ள்.) தளர்ந்த நிலை கண்டு - (அங்ஙனம் வீடுமன்) சோர்வடைந்த
நிலைமையைப் பார்த்து, துரியோதனன்-, (அரசர்களை நோக்கி), 'சிவேதனுடன் அரு
போர்விளைந்தது - சுவேதனோடு பொறுத்தற்கரிய போர் உண்டாயிற்று; (அதில்),
வீடுமன் இளைத்தான்-: (ஆகையால்), இளந்தலைஉறாதபடி - (நமக்கு) இழிவு
உண்டாகாதபடி, ஏகுமின்- (வீடுமனுக்குத்துணையாகச் சுவேதனோடு போர்செய்யச்)
செல்லுங்கள்,' என - என்று சொல்ல, (அது கேட்டு), கிளர்ந்த முடி மன்னர் பலர்-
விளக்கமுற்ற கிரீடத்தையுடைய அரசர்கள் அநேகர், விரைந்து போய் கிட்டினர் -
துரிதமாகச்சென்று (வீடுமனுக்குப் பக்கபலமாகச் சுவேதனுக்கு எதிரே
நெருங்கினார்கள்; (எ - று.)

     இளந்தலை-கீழ்மை. கிளர்ந்த என்பதை மன்னர்க்கு அடை மொழியாக்கின்,
போரில்ஊக்கங்கொண்ட என்று பொருளாம்.                           (59)

60.-இதுவும் அடுத்த கவியும் - துரியோதனனேவலால் வந்தவரைச்
சுவேதன் வலியழித்தமை கூறும்.

அந்தமுடிமன்னவரநேகரையுமுன்னம்
வந்தவழிமீளவும்வரும்படிதுரந்தான்
தந்தம்வரிவில்லுமணிதாரும்விடுதேருஞ்
சிந்தவெரிகால்வனசிலீமுகம்விடுத்தே.

     (இ - ள்.) (அப்பொழுது சுவேதன்), அந்த முடி மன்னவர் அநேகரைஉம் -
அவ்வாறு வந்துஎதிர்த்த கிரீடாதிபதிகளான அரசர்கள் பலரையும், தம் தம் வரி
வில்உம் அணி தார்உம் விடு தேர்உம் சிந்த -தங்கள் தங்களது கட்டமைந்த
வில்லும்தரித்தபூமாலைகளும் செலுத்துந் தேர்களும் சிதறும்படி, எரிகால்வன
சிலீமுகம்விடுத்து - (மிக்க உக்கிரத்தன்மையால்) நெருப்பை வெளிவீசுவனவான
அம்புகளைஎய்து, முன்னம் வந்த வழி மீளஉம் வரும்படி-முன்னே அவர்கள்
வந்தவழியாகவேதிரும்பிச் செல்லும்படி, துரந்தான் - ஓட்டினான்;

     முன்னம் வந்தவழி மீளவும்வரும்படி என்றது, போரிற் சிறிதும் பயன்
பெறாதவராகுமாறு என்ற கருத்தை விளக்கும். தம்தம் - அவரவரது என்க.
சிலீமுகம்-வடசொல்; கூர்மையான நுனியையுடைய தென்று பொருள்.   (60)

61.வெவ்வனலநேர்குகுரராசனையும்வேறோ
ரைவரையுமேவினன்முனைந்தனர்களவருஞ்
செவ்வரைகள் போல்பவர்சிரங்களும்வளைக்குங்
கைவிரிவிலுந்துணிபடக்கணைதொடுத்தான்.

     (இ - ள்.) (இவ்வாறு வீடுமனுக்குத் துணையாகத் தான் அனுப்பின
அரசர்களையெல்லாம் சுவேதன் வென்று துரத்தியதை நோக்கித் துரியோதனன்),
வெவ் அனலம் நேர் - வெவ்விய அக்கினியை யொத்த [மிக்கபராக்கிரமமுடைய],
குகுரராசனைஉம்-குகுரதேசத்தரசனையும், வேறு ஓர் ஐவரைஉம் - மற்றுமொரு
ஐந்துஅரசர்களையும், ஏவினன் - (வீடுமனுக்குத் துணையாகச்