(தான் செய்த தவத்திற்கு) வரமாகச் சுவேதன் பெற்றான்; (எ - று,) -இப்பாட்டில் 'மதித்தார்' என்னும் முற்றெச்சம், அடுத்தபாட்டில் 'என்றனர்' என்ற முற்றோடு முடியும். பூமியிற் போர்நடக்கும்பொழுது அக்காட்சியைத் தேவர்கள் வானிலிருந்து காணுதல் இயல்பென்ப. வேனிலவன் - வேனிற்பருவத்துக்கு உரியவன்; வேனில்என்றது - இங்கே இளவேனிலை: அது - சித்திரை வைகாசி மாதங்களாகிய வசந்தகாலம்; அக்காலத்தில் ஆடவர்க்கும் மகளிர்க்கும் மிக்க வேட்கையை விளைத்துப் போர்த்தொழிலில் மன்மதன் ஊக்கமிகுதலால், அவனுக்கு, வேனிலவ னென ஒருபெயர். (63) 64.-வஞ்சனையால்தான் இவனை வெல்லவேணுமென்று தேவர்கள் கூறுதல். ஏறனையவீடுமனிளைத்தபடிகண்டால் வேறவனைவில்லமரில்வெல்லவுரியார்யார் மாறுபடுவெஞ்சமரில்வஞ்சனையிலன்றிக் கோறலரிதென்றனர்குலப்பகைமுடிப்பார். |
(இ - ள்.) (அந்தச்சுவேதனுக்குமுன்), ஏறு அனைய வீடுமன் இளைத்தபடி கண்டால் - ஆண்சிங்கத்தையொத்த வீடுமன்தானே (போரில்) சோர்வடைந்த விதத்தைநோக்குமிடத்து, வில் அமரில் அவனை வெல்ல உரியார் வேறு யார் - விற்போரில்அச்சுவேதனைச் சயிக்கத்தக்கவர் வேறு எவருளர்? [ஒருவருமில்லை யென்றபடி];(ஆகையால்), மாறு படு வெம்சமரில் - (ஒருவரோடொருவர்) பகைத்துச்செய்யுங்கொடியயுத்தத்தில், வஞ்சனையில் அன்றி கோறல் அரிது - வஞ்சனைவழியிலல்லாமல் [நியாய வழியில்] (அவனைக்) கொல்லுதல் முடியாது,' என்றனர் -என்றுசொன்னார்கள்; குலம் பகை முடிப்பார் - (தமது) இனத்துக்குப் பகையாயிருப்பவனை ஒழிப்பவராகிய தேவர்கள்; (எ - று.) தேவர்கூட்டத்திற்சேர்ந்தவரான வசுக்களுக்குப் பகையாகி அவர்கள் சாபத்தால்பூலோகத்தில் தோன்றின சுவேதனை அவ்வசுக்களில் ஒருவனான வீடுமனைக்கொண்டு கொல்லவேண்டு மென்னுங் கருத்தோடு தேவர்கள் இங்ஙனம் உபாயங் கூறினதனால், 'குலப்பகைமுடிப்பார்' என்றார். மிருகேந்திரனாகிய சிங்கம்போல வீடுமன் எல்லாவரசர்க்கும் மேம்பட்டவனாதலாலும், சிங்கம் யானை முதலிய விலங்குகளை எளிதில் அழித்தல்போல வீடுமன் பகைவர்களை எளிதிலழிக்கவல்ல னாதலாலும், 'ஏறனையவீடுமன்' என்றது. வீடுமன்என்றதன் இறுதியில், உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. 'வில்லவரில்' என்ற பாடத்துக்கு - வில்வீரருள் என்க. "ஆடவரம் பூண்டவரனார்தம் பாற்பெற்றுக், கூடமருள் வெல்லுங் கொடுஞ்சிலையா - னோடேநீ, வல்லாண்மை செய்யில்வலிதொலையான் வஞ்சனையால், வில்லாண்மையோடொழிய வெல்," "வஞ்சனையாற் கொல்லிவனை வாழ்வேந்தே மற்றவன்கை, வெஞ்சிலையுண்டாக வெலற் |