பக்கம் எண் :

54பாரதம்வீட்டும பருவம்

படான்-அஞ்சுடர்கண், மின்னுயிர்க்கும் வெள்வேல் விராடன் குலமதலை,
யின்னுயிர்க்குங் காலமிது" என்பன பாரத வெண்பா.               (64)

65.-வீடுமன் தேவர் சொல்லையறிந்து சுவேதனைநோக்கி, 'வில்லன்றி
வேறுபடை உனக்குத் தெரியாதோ?' எனல்.

ஓகைநிகழெண்வகைவசுக்களிலொருத்த
னாகியநராதிபதியம்முறையறிந்தான்
வாகைவரிவில்லொழியவாளயில்களென்னும்
வேகமுறுவெம்படைகள்கற்றிலைகொல்வெய்யோய்.

இதுவும், மேற்கவியும் - ஒரு தொடர்.

     (இ - ள்.) ஓகை நிகழ் - களிப்புப்பொருந்தின, எண் வகை வசுக்களில்
ஒருத்தன் ஆகிய நராதிபதி - அஷ்டவசுக்களில் ஒருவனான பீஷ்மராசன், அ
முறைஅறிந்தான் - (தேவர்கள் குறித்த) அவ்விதத்தை அறிந்தவனாய்,
(சுவேதனைநோக்கி),வெய்யோய்-பராக்கிரமமுடையவனே! (நீ), வாகை வரி வில்
ஒழிய -வெற்றிமாலையைத்தரித்த கட்டமைந்த வில்லின் தொழில்மாத்திரத்தையே
யன்றி, வாள்அயில்கள் என்னும் வேகம் உறு வெம் படைகள் கற்றிலை கொல் -
வாளும்வேலுமென்கிற உக்கிரத்தன்மை பொருந்திய வெவ்விய ஆயுதத்தொழில்களை
அறிந்தாயில்லையோ? (எ-று.)-"என்றெதிர்சிவேதனொடு இயம்புதலும்" என
அடுத்தகவியோடு இயையும்.

     அந்தத்தேவர்கள் வார்த்தையைக் கேட்டவுடனே, இனி இவனை எளிதிற்
கொல்லலாமென வீடுமன் மகிழச்சியோடு போரில் ஊக்கமிக்கதனால்,
'ஓகைநிகழ்நராதிபதி'என்றது. அஷ்டவசுக்கள் - அத்வரன், அநலன்,  அநிலன்,
ஆபன், சோமன்,துருவன், பிரத்யூஷன், பிரபாசன் என இவர். இவர்களுட்
பிரபாசனேவீடுமனாப்பிறந்தவன். சுவேதனுக்கு ரோஷமுண்டாய் அவன் வில்லை
விட்டுவேறுபடைக்கலத்தை எடுக்கச் செய்யும்பொருட்டு வஞ்சனையாக இவ்வாறு
கூறினான்வீடுமன். சுவேதனுக்கு வெற்றி தருவது வில்லேயாதலின், அதனை
'வாகைவில்' எனவிசேடித்தது.                                   (65)

66.-மூன்றுகவிகள்-வாட்படைகொண்டு பொருஞ்
சுவேதனை வீடுமன் அம்பினாற்பொருது கொன்றமையைக் கூறும்.

என்றெதிர்சிவேதனொடியம்புதலும்வெள்கிக்
குன்றுசிலைகொண்டவனளித்தசிலைகொள்ளான்
வென்றிவடிவாளுருவிமேலுறநடந்தான்
நின்றவனும்வேறொருநெடுஞ்சிலைகுனித்தான்.

     (இ - ள்.) என்று - என்று இவ்வாறு, சிவேதனொடு - சுவேதனுடனே, எதிர்
இயம்புதலும் - எதிரிற்சொன்னவளவிலே, (அச்சுவேதன்), வெள்கி - நாணமுற்று,
குன்று சிலைகொண்டவன் அளித்த சிலை கொள்ளான் - மகாமேருகிரியை
வில்லாகக்கொண்ட சிவபிரான் (தனக்குக்) கொடுத்தருளினவில்லைக்
கைக்கொள்ளாமல் (நீக்கி), வென்றி வடிவாள் உருவி - வெற்றியைத்தரத்தக்க
கூர்மையான