வேறு 69.- சுவேதன்பட்டதற்கு வானோரும் துரியோதனனும் பக்கத்து அரசரும் மகிழ்தல். பூழிபட நிலமிசையப் பொற்சுண்ணங் கமழ்மேனிப் புதல்வன் வீழ வாழிமொழித் துளமகிழ்ந்தா ரந்தரதுந் துபிமுழங்க வானோ ருள்ளார் ஊழிபெயர்ந் துலகேழு முள்ளடக்கித் திசைநான்கு முகளித் தேறி யாழிபரந் தார்ப்பதென வார்த்தனரப் பெருஞ்சேனை யரசரெல்லாம். |
(இ - ள்.) பொன் - பொன்நிறமான, சுண்ணம் - சுகந்தப்பொடி, கமழ் - மணம்வீசப்பெற்ற, மேனி - (தனது) உடம்பிலே, பூழி பட - புழுதிபடிய, அ புதல்வன்- அந்தச்சுவேதகுமாரன், நிலம்மிசை - தரையிலே, வீழ - இறந்துவிழ, - வானோர்உள்ளார் - ஆகாயத்தில் (போர்காண) வந்துள்ளவரான தேவர்கள், வாழி மொழிந்து- வாழ்த்துக்கூறி, அந்தரம் துந்துபி முழங்க - ஆகாயத்தில் தேவ துந்துபி வாத்தியம்முழங்காநிற்க, உளம் மகிழ்ந்தார் - மனமகிழ்ச்சி கொண்டார்கள்; ஆழி - கடல், ஊழி- கற்பமுடிவுகாலத்திலே, பெயர்ந்து - தன்நிலைமாறி [பொங்கி], உலகு ஏழ்உம் உள்அடக்கி - ஏழுலகங்களையுந் தன்னுள்ளே அடங்கச்செய்து, திசை நான்குஉம்உகளித்து ஏறி-எல்லாத் திக்குக்களிலும் கடந்துகிளர்ந்து, பரந்து-பரவி, ஆர்ப்பது என- ஆரவாரிப்பதுபோல, அ பெரு சேனை அரசர்எல்லாம் - பெரிய அந்தக்கௌரவசேனையிலுள்ள அரசர்கள் யாவரும், ஆர்த்தனர்- ஆரவாரித்தார்கள்;(எ -று.) சிறந்தவீரன் மண்ணுலகத்தைவிட்டுத் தமதுவிண்ணுலகத்துக்கு விருந்தானதும், தமது இனத்தவரான வசுக்களில் ஒருவனான வீடுமன் வெற்றி கொண்டதும், தேவர்கள் மனமகிழ்ந்து பேரிகை கொட்டி வாழ்த்துக்கூறினதற்குக் காரணம். சுண்ணம் - சூர்ணமென்னும் வடமொழிச்சிதைவு. வாழி மொழிந்து - வாழியென மொழிந்து என்க. வானோர் உளம்மகிழ்ந்தார்-"உயர்திணை தொடர்ந்த பொருள் முதலாறும், அதனொடுசார்த்தினத்திணை முடிபின" என்ற விதிபற்றி, அஃறிணையாகிய சினைப்பெயர் உயர்திணையாகிய முதலின் முடிபைக் கொண்ட திணைவழுவமைதி. ஊழி-பிரமனாயுள். உலகேழ் - பூலோகம் புவர்லோகம் ஸு வர்லோகம் மஹர்லோகம் ஜநலோகம் தபோலோகம் ஸத்யலோகம் என்னும் மேலுலகேழும், அதலம் விதலம் ஸு தலம் தராதலம் ரஸாதலம் மஹாதலம் பாதாளம் என்னுங் கீழுலகேழுமாம். உகளித்து, உகளி-பகுதி. இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் ஒன்பதுகவிகள் - பெரும்பாலும் ஈற்றுச்சீரிரண்டும் மாச்சீரும், மற்றைநான்கும் காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்; இவற்றில் ஆறாஞ்சீர் தேமாச்சீராகவேநிற்கும். (69) 70.-இதுமுதல் மூன்றுகவிகள் - படுகளச்சிறப்புக் கூறும். உடைந்ததடந்தேருருள்களுகுகுருதிப்புனறோறுமும்பர்வானில் அடைந்தவயவருக்குவழியாயசுடர்மண்டலத்தின்சாயைபோலும் |
|