பக்கம் எண் :

58பாரதம்வீட்டும பருவம்

மிடைந்தகுடைகாம்பற்றுமிதப்பனவுங்கரியபுகர்வேற்கண்மாதர்
குடைந்தநறும்பரிமளச்செங்குங்குமநீரிடையெழுந்தகுமிழிபோலும்.

     (இ - ள்.) உடைந்த தட தேர் - (போரில்) உடைப்பட்ட பெரிய தேர்களின்,
உருள்கள் - சக்கரங்கள்,-உகு குருதி புனல்தோறுஉம்- பெருகுகிற
இரத்தவெள்ளங்களிலெல்லாம், உம்பர் வானில் அடைந்த வயவருக்கு வழி ஆய
சுடர் மண்டலத்தின் சாயை போலும் - மேலுலகத்து வீரசுவர்க்கத்திற் சேர்ந்த
வீரர்களுக்குவரும் வழியாய் நடுவுதுளைபட்ட சூரியமண்டலத்தின் நிழல்களை
யொக்கும்; காம்பு அற்று மிதப்பன - காம்பு அறுபட்டு (இரத்தத்தில்)
மிதப்பனவாகிய,மிடைந்த குடைஉம் - நெருங்கியகுடைகளும்,- கரிய புகர்-
கருமையானநிறத்தையுடைய, வேல் கண் - வேலாயுதம்போன்ற கண்களையுடைய,
மாதர் -மகளிர், குடைந்த - நீராடின, நறு பரிமளம் செம்குங்குமம் நீரிடை -
நல்லவாசனையையுடைய சிவந்தகுங்குமக்குழம்போடு கலந்த நீரிலே, எழுந்த -
தோன்றிய, குமிழி - குமிழிகளை, போலும்-; (எ-று.)

     தன்மைத்தற்குறிப்பேற்றவணி. போர்க்களத்தில் அழிந்தசேனைகளின்
உடம்பினின்று பெருகிய இரத்தவெள்ளத்தில் கிடந்த தேர்ச்சக்கரங்கள்-
வீரசுவர்க்கமடைபவர் சூரியமண்டலத்தைத் துளைத்துக் கொண்டு செல்லுதலால்,
நடுவில் துவாரம்பொருந்திய அம்மண்டலத்தின் பிரதிபிம்பங்கள்
அவ்விரத்தவெள்ளத்தில் விளங்குவனவற்றைப் போலு மென்பது, முன்னிரண்டடியின்
கருத்து. உகுகுருதிப்புனல் தோறும் என்பது மத்திமதீபம். போரிற் பின்வாங்காது
இறந்தவர் வீரசுவர்க்கம் அடைந்து இன்புறுவரென்பதும், அங்ஙனம் அடைகையில்
இரவிவட்டத்தைப் பிளந்துகொண்டு அதனிடைவழியாய்ச் செல்லுவரென்பதும்
நூற்கொள்கை. கண்ணுக்கு வேல் உவமை-கூர்மைக்கும் வடிவுக்கும் வேட்கைநோய்
விளைத்து ஆடவரை வருத்துதற்கு மென்க. "மாதர் காதல்" என்ற
தொல்காப்பியத்துஉரிச்சொல்லியற் சூத்திரத்தால், மாதரென்றது - விருப்பத்தை
யுணர்த்துவதோர்உரிச்சொல்லாம்; அது - ஆகுபெயராய், விரும்பப்படும்
அழகையுடைய மகளிரைக்குறிக்கும். இரத்தம் செந்நீராதலால் 'குருதிப்புனல்'
எனப்பட்டது. குங்குமச்செங்குழம்பு- அம்மகளிருடம்பிற்பூசியது. குமிழ்ப்பது-குமிழி:
மொக்குகள்; இ- கருத்தாப்பொருள்விகுதி.                             (70)

71.வெங்கலங்கற்கடுங்குருதி வெள்ளத்துக் கொடியாடைமிதக்குந்
                                    தோற்றஞ்,
செங்கலங்கற்புதுப்புனலில்விளையாடித்திரிகின்றசேல்கள்
                                     போலும்,
பொங்கலங்கனிருபர்தலைபுனைமகுடத்துடன்கிடப்பொறியார்
                                        வண்டு,
தங்கலங்கல்வண்கனகசததளபங்கயமுகுளசாலம்போலும்.

     (இ - ள்.) வெம் - பயங்கரமான, கலங்கல் - கலக்கத்தையுடைய, கடு - மிக்க,
குருதி வெள்ளத்து - இரத்தவெள்ளத்திலே, கொடி ஆடை - துவசச்சீலைகள்,
மிதக்கும் - மிதந்தலைகிற, தோற்றம் - காட்சி,-செம் - செந்நிறமுள்ள, கலங்கல்-
கலக்கத்தையுடைய, புது