பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்59

புனலில் - புதுநீர் வெள்ளத்தில், விளையாடி திரிகின்ற-, சேல்கள்- சேல்மீன்களை,
போலும் - ஒக்கும்;  பொங்கு - விளங்குகிற, அலங்கல் -போர்ப்பூமாலையைச்
சூடிய,நிருபர் - அரசர்களது, தலை - தலைகள், புனை மகுடத்துடன் - அணிந்த
கிரீடத்துடனே, கிடப்ப - (அவ் விரத்தத்தில்) விழுந்துகிடப்பவை,- பொறி
ஆர்வண்டுதங்கு - புள்ளிகள் பொருந்தின வண்டுகள் மொய்த்தற்குரியனவும்,
அலங்கல்-ஒளிசெய்தலையுடையனவுமாகிய, வண் கனக சததள பங்கய முகுள
சாலம் போலும்- அழகிய பொன்மயமான நூற்றிதழ்த் தாமரையரும்பின் தொகுதியை
ஒக்கும்; (எ -று.)

     கிரீடத்தோடுகூடிய தலைகள், அடியகன்று மேலே முறையே குறுகி
யிருத்தலால் தாமரையரும்புபோலும். வீரர்கள்முகத்தின் விளக்கத்தையும்
அவர்கள்கிரீடம் பொன்மயமாயிருத்தலையும் நோக்கி, உபமானத்தை
'வண்கனகபங்கயம்' என்றார். 'வண்டுதங்கு' என்ற உபமானத்தின் அடைமொழியை
நோக்கி, உபமேயத்தில் கிரீடத்து உச்சியில் நீலமணிகள் பதிக்கப்பட்டுள்ளன
வெனக்கொள்ளினுமாம். வண்டுக்குப்பொறிபோல நீலமணிக்கு ஒளியென்க.
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. செந்நீருக்கு உவமையாதற் பொருட்டு,
செங்கலங்கற்புதுப்புனல் கூறினார். இரண்டும், வடிவுவமை. சேல்-மீனின்ஓர்சாதி.
சிறியவும் பெரியவுமாகிய கொடிச்சிலைகள், சேலினங்களை யொக்கும்
கநகஸததளபங்கஜமுகுள ஜாலம் - வடசொற்றொடர். சததள பங்கஜம் -
நூற்றிதழ்த்தாமரை. பங்கஜம்-சேற்றிற்பிறப்பது; தாமரைக்குக் காரணவிடுகுறிப்பெயர்.
                                                               (71)

72..எண்ணிழந்தகுருதிநதியிருமருங்குங்கரிபரியாள்கரைகளாகக்,
கண்ணிழந்த பறையிடையே செருகியகால்வாய்த்தலையின்
                              கண்கள் போலும்,
மண்ணிழந்துபடுமரசர்மணிக்கலங்கள் பலசிந்திவயங்கு
                                    தோற்றம்,
விண்ணிழந்துபரந்தசெழுங்கடலிடையேமீனினங்கள்
                               வீழ்ந்தபோலும்.

     (இ - ள்.) எண் இழந்த - அளவில்லாத, குருதி நதி - இரத்தப் பெருக்காகிய
ஆற்றிற்கு, இரு மருங்குஉம் - இரண்டுபக்கங்களிலும், கரி பரி ஆள் -
(விழுந்துகிடக்கிற) யானைகளும் குதிரைகளும் காலாட்களும், கரைகள் ஆக -
கரைகளாய் அமைந்திருக்க, கண் இழந்த பறை - (அடிக்குமிடமாகிய)
தோற்கண்ணைஇழந்த பேரிகைகள், இடையே செருகிய - நடுநடுவே பொருந்திய,
கால்வாய்தலையின் கண்கள் போலும் - வாய்க்கால்களின் தொடக்கத்திலுள்ள
மதகின்கண்களை யொக்கும்; மண் இழந்து-நிலவுலகத்தை விட்டு (உயிர்) நீங்கி,
படும் -இறந்துவிழுந்துகிடக்கிற, அரசர்-அரசர்களது, மணி கலங்கள் பல -
அநேகம்இரத்தினாபரணங்கள், சிந்தி - (அவ்விரத்த வெள்ளத்திலே) சிதறி,
வயங்கு-விளங்குகிற, தோற்றம் - காட்சி,-மீன் இனங்கள் - நக்ஷத்திரக்கூட்டங்கள்,
விண்இழந்து - ஆகாயத்தைவிட்டு, பரந்த செழுகடலிடைஏவீழ்ந்த-விசாலமான
நீர்நிறைந்தகடலினிடத்தே விழுந்திருப்பனவற்றை, போலும்-ஒக்கும்; (எ - று.)