னும் சிறந்த அநேக உபகாரங்களை (மிக்க அன்போடு) செய்தருளினாய்; (அதுவுமின்றி), சமரூடு - போரிலே, இன்று - இன்றைக்கு, உன் சேய் செய்த- உனதுமக்கள் செய்த, உயிர் உதவி-(தன்தனது) பிராணனைக் கொடுத்தலாகிய உபகாரத்தை, தேவர் எலாம் துதிக்கின்றார்-(இம் மண்ணுலகத்து மனிதர்மாத்திரமேயன்றி விண்ணுலகத்துத்) தேவரெல்லோரும் புகழ்கிறார்கள்; செறிந்தோர் தம்மில்-உற்ற நண்பர்களில் நீ செய்த பேர்உதவி யார் செய்தார் - (நேராகவும் மக்கள் மூலமாகவும்) நீ செய்த பெரியஉதவிபோன்ற உதவியை வேறு எவர்செய்தார்? [ஓருவருமில்லை யன்றோ?]', என உரைத்தான்-என்று உபசாரமொழிகூறினான்: (யாரெனில்),-நெறி செய் கோலான் - நீதிமுறைமையைச் செய்யுஞ்செங்கோலையுடைய தருமபுத்திரன்; (எ - று.) விராடன் செய்தது "காலத்தினாற் செய்தநன்றி" ஆதலின், அதற்கு ஒத்ததும் மிக்கதும் வேறுஇல்லை யென அறிக. நெறிசெய் என்ற அடைமொழியில், தான் நல்வழியில் நடத்தலும், குடிகளைச் சன்மார்க்கத்திற் செலுத்துதலும் ஆகிய இரண்டும்அடங்கும். பிசாசங்கள் யதேச்சையாகத் திரியுங் கொடுங்காடென்பார், 'பேய்செய்தவரங்கனைய பெருங்கான்' என்றார். யாவரன்பினும் தாயன்பு சிறத்தலால்,'பெற்றகாதல்தாய்' என்றார். சேய் என்ற உயர்திணைப் பெயர் - சாதி யெருமையாய்,இரண்டு குமாரரையும் உணர்த்திற்று. உயிருதவி - "அன்பிலா ரெல்லாந் தமக்குரியரன்புடையார், என்புமுரியர் பிறர்க்கு" என்றபடி தம்மோடுதொடர்ச்சியுடையார்பொருட்டுத் தமதுஉயிரையு மிழந்து உதவியது. அரசனாற் செய்யப்படும் முறைமைஒருபாற்கோடாது செவ்விய கோல்போலுதலால், செங்கோலென்றும், கோலென்றுங்கூறப்படும்; வடநூலாரும் தண்ட மென்பர். அரங்கு - ரங்கமென்னும்வடமொழித்திரிபு; நடம்பயிலிடம். இப்பாட்டில், திரிவோர்க்கு என்றதைத்தன்மைக்குப்படர்க்கைவந்த இடவழுவமைதி யென அறிக. இனி, இப்பாட்டில்'நெறிசெய்கோலான்' என்றதை - கண்ணபிரானெனக் கொண்டால், திரிவோர்க்குஎன்ற படர்க்கை, வழாநிலையாம். (75) 76.-தருமபுத்திரனுக்கு விராடன்கூறும் உத்தரம் உன்னுயிர்போனீவளர்த்தவுத்தரன்றனுயிருமுருத்தெழுஞ்சிவேதன் தன்னுயிரும்போரரசர்தாமிருந்துகொண்டாடச்சமரிலீந்தார் என்னுயிருநினதன்றியாரதினிச்சதுர்முகத்தோனீன்றபாரின் மன்னுயிருக்குயிரனையாயெனவுரைத்தான்வளமலிசீர்மச்சர்கோமான். |
(இ - ள்.) 'சதுர் முகத்தோன் - நான்குமுகங்களையுடைய பிரமதேவன், ஈன்ற- படைத்த, பாரில் - நிலவுலகத்திலுள்ள, மன் -நிலை பெற்ற, உயிருக்கு - எல்லாவுயிர்களுக்கும், உயிர் அனையாய் - உயிரை யொத்தவனே! [பேரன்புடையவனே!], உன் உயிர்போல் நீ வளர்த்த, உனதுஉயிரைப்போல(ப் பாவித்து மிக்க அன்போடு) நீ வளர்த்த உத்தரன் - உத்தரகுமாரன், தன்- தன்னுடைய,உயிர்உம்-உயிரையும், உருத்து எழும் - (பகைவர்மேற்) கோபித்துக்கிளம்புகிற,சிவேதன்-,தன் - தன்னுடைய, உயிர்உம்-உயிரையும், போர் அரசர் |