பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்63

தாம் இருந்து கொண்டாட - போர்த்திறத்தையுடைய அரசர்கள் இருந்து புகழும்படி,
சமரில்-போரில், ஈந்தார் - கொடுத்தார்கள்; இனி-இனிமேல், என் உயிர்உம் நினது
அன்றி யாரது-எனது உயிரும் உனக்குஉரியதேயல்லாமல் வேறுயாருக்குஉரியது?
[எவர்க்கு முரியதன்று என்றபடி]; என உரைத்தான்-என்று (தருமனை நோக்கிக்)
கூறினான் : (யாவனெனில்), வளம் மலி சீர் மச்சர் கோமான் - எல்லா
வளப்பங்களும்நிறைந்த சிறப்பையுடைய மத்ஸ்ய தேசத்தார்க்குத் தலைவனான
விராடமகாராசன்;(எ- று.)

     எவர்க்கும் உயிரினும் அன்புக்கு விஷயமானது பிறிது இன்று ஆதலால்,
அதுவே சிறந்தஅன்புக்குப் பொருந்தின உவமையாக எடுத்துக்கூறப்படும்.
தருமபுத்திரன் கங்கபட்டனாக இருந்த அஞ்ஞாதவாசகாலமாகிய ஒருவருஷத்தில்
உத்தரனை மிகுந்த அன்போடு பாராட்டிவந்ததையே கொண்டு, உபசாரமாக,
'உன்னுயிர் போல் நீ வளர்த்தவுத்தரன்' என்றது. 'என்னுயிரு நினதன்றியாரதினி'
என்றது, நானும் என்னாலியன்றவளவு பெரும்போர்செய்து உன் பொருட்டாகவே
உயிருதவுவேனென்றதாம்; அங்ஙனமே அவன்செய்து முடித்தலை மேற்காண்க.
தருமன்உலகத்து உயிர்களையெல்லாம் தன்னுயிர்போலவே பாவித்து நன்கு
காக்குமவனாதலாலும், எல்லாவுயிர்களின் அன்புக்கும் இடமாகுபவனாதலாலும்,
அவனை 'சதுர்முகத்தோனீன்றபாரின் மன்னுயிருக்குயிரனையாய்' என விளித்தான்;
இப்படிப்பட்ட சற்குணசம்பந்நனான உன்திறத்தில் நாங்கள் உயிர்துறப்பது
எங்களுக்குஉற்றதொழிலேயா மென்பது, இதனாற்போதரும். வீரர்பெருமையை
வீரரேயறிவராதலால், 'போரரசர்கொண்டாட' எனப்பட்டது, பி-ம்: வீந்தார்,வீழ்ந்தார்.                                               (76)

77.-சூரியோதய வருணனை.

முப்பொழுது முணர்கேள்வி முகுந்தனுடன் பாண்டவரு
                              முடிசாய்த் தாங்கண்,
எப்பொழுது விடிவதென நினைதருமெல் லையின் வல்லே
                                யிரண்டு போரும்,
அப்பொழுது காண்டற்கு வருகின்றானெனத்தடந்தே
                               ரருக்கன் வந்தான்,
மைப்பொழுதுஞ் சிவேதனெதிர் மத்திரத்தான் வரூதினிபோன்
                                  மாய்ந்த தம்மா.

     (இ - ள்.) முப் பொழுதுஉம்-மூன்றுகாலத்துச் செய்திகளையும் உணர்-அறிந்த
கேள்வி-நூற்கேள்விகளையுடைய, முகுந்தனுடன் - கண்ணபிரானுடனே,
பாண்டவர்உம்-,  ஆங்கண் - அவ்விடத்திலே [பாசறையில்], முடிசாய்த்து -
தலைசாய்த்து [படுத்து], எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையின் -
(நாம்வெற்றிகொள்ளுமாறு) எப்பொழுது உதயமாகுமென
எண்ணமிட்டுக்கொண்டிருக்கையில்,-தட தேர் அருக்கன்-பெரியதேரையுடைய
சூரியன், இரண்டுபோர்உம் காண்டற்கு அப்பொழுது வல்லே வருகின்றான் என -
இருதிறத்தாருடையபோரையும் பார்க்கும்பொருட்டு அப்பொழுது
விரைவாகவருகிறவன் போல, வந்தான் - வந்துஉதித்தான்: (அங்ஙனம் உதித்த
சூரியனது முன்பு), மை பொழுதுஉம் - இருட்பொழுதாகிய