துரங்கமம் - துரிதமாகச்செல்வ தெனக் காரணப்பெயர். ஓடு கசதுரங்கமங்களென வினைத்தொகையாக எடுத்து, ஓடுந்தன்மையனவான என்றும் உரைக்கலாம்: அப்பொழுது, தேர்களென்பது- மூன்றாம் வேற்றுமைத் தொகை. நகுலராசன் - நகுலனாகியராசனென இருபெயரொட்டு. (82) 6. | மிடல்கொள்வாளமைச்சரோடுவிரைவின்வீரர்பின்வர முடுகுசேனையபிமன்வீமன்விசயன்மாயன்முன்செல நடுவுநால்வகைப்படும்பதாதியோடுநாயகன் கடகநாதனுடனணிந்துநின்றனன்களத்திலே. |
(இ - ள்.) மிடல் கொள் வாள் அமைச்சரோடு - வலிமையைக் கொண்ட ஆயுதங்களையேந்திய மந்திரிகளுடனே, விரைவின் வீரர் - (போரில்) விரைதலையுடைய வீரர் (பலர்), பின் வர - பின்னே வரவும்,- முடுகு சேனை- ஊக்கங்கொண்ட சேனைகளுடனே, அபிமன் வீமன் விசயன் மாயன் - அபிமந்யுவும் வீமசேனனும் அருச்சுனனும் கண்ணனும், முன் செல - முன்னேபோகவும்,-நடுவு- நடுவிலே, நால் வகை படும் பதாதியோடு - நாலுவகைப்பட்ட சேனைகளுடனே, நாயகன் - தலைவனான தருமபுத்திரன், கடகம் நாதனுடன்-சேனைத்தலைவனாகிய திட்டத்துய்மனுடனே, களத்தில்-போர்க்களத்தில், அணிந்து நின்றனன்- அணிவகுத்துநின்றான்; அமைச்சர் - (எப்பொழுதும் அரசனது) அருகி லிருப்பவரென்று பொருள் : மந்திரிகளுக்குத் தமிழில் 'உழையிருந்தான்' எனவும், 'உழையன்' எனவும் பெயர்வழங்குதல் காண்க. விரைவின்வர என இயைத்தலுமாம். பதாதி - காலாட்சேனை; இது-இங்கே, சேனைமாத்திரமாய் நின்றது; இங்ஙனம் சிறப்புப் பெயர்பொதுப்பொருளையும், பொதுப்பெயர் சிறப்புப்பொருளையும் உணர்த்துதல் ஒருவகைப்பாஷை வழக்கம். நால்வகைப்படும் பதாதி - சதுரங்கசேனை. பி-ம் : -மிடலும்வாண்மிலேச்சரோடுவீட்டும். (83) 7-வீடுமன் அணிவகுத்துத் துரியோதனனுடன் களத்தில் வந்துநிற்றல். மாடிரண்டுமெண்ணில்கோடிமன்னர்சேனைநிற்கவும் பீடுகொண்டநேகமன்னர்பேரணிக்கணிற்கவும் சூடுதும்பைமண்டலீகர்தூசியாகநிற்கவும் வீடுமன்மகீபனோடுநடுவண்வந்துமேவினான். |
(இ - ள்.) மாடு இரண்டுஉம் - இரண்டு பக்கங்களிலும், எண் இல் கோடி -அளவிறந்த கோடிக்கணக்கான, மன்னர் - அரசர்களது, சேனை - சேனைகள்,நிற்கவும்-, அநேகம் மன்னர் - பல அரசர்கள், பீடு கொண்டு - பராக்கிரமத்தையுடையராய், பேர் அணிக்கண்- பெரிய பின்னணிச்சேனையிலே, நிற்கவும்-, சூடு தும்பை-அணிந்த தும்பைப் பூமாலையையுடைய, மண்டலீகர் - மண்டலாதிபதிகளான அரசர்கள், தூசி ஆக - முன்னணிச்சேனையாக, நிற்கவும்-, நடுவண்-(இவர்கள்) நடுவிலே, வீடுமன் - பீஷ்மன், மகீபனோடு - துரியோதன அரசனுடனே, வந்து மேவினான்- வந்து சேர்ந்தான்; (எ-று.) |