பக்கம் எண் :

இரண்டாம் போர்ச்சருக்கம்69

     சூடுதும்பைமண்டலீகர் என்றது, வடமொழிநடை; தும்பை சூடு மண்டலீகர் என
மொழிமாற்றுதல், நேராம். 'எண்ணில்கோடி' என்ற அடைமொழியை மன்னர்க்குஞ்
சேனைக்குங் கூட்டுக. முன்னே 'மாடிரண்டும்' என வந்ததனாலும், பின்னே 'தூசி'
என வருவதனாலும், நடுவில் 'பேரணி' என்றது பின்னணியாயிற்று. பி - ம்:
மகீபரோடு.                                           (84)

8.-இருதிறத்துச் சேனைக்குங் கைகலந்த போர்.

வீசுகொண்டலுடனெதிர்ந்துகோடையுந்திவீசவே
மூசுகொண்டலோரிரண்டுமுடுகிநின்றுபொழிவபோல்
தூசிநின்றவீரரோடுதூசிவீரர்வில்வளைத்
தாசுகங்கள்வீசவீசவந்தரம்புதைந்தவே.

     (இ - ள்.) வீசு கொண்டலுடன் எதிர்ந்து - வீசியடிக்கிறகீழ் காற்றோடு
எதிரிட்டு, கோடை உந்தி வீச - மேல்காற்று மோதி வீசுதலால், மூசு கொண்டல்
ஓர்இரண்டு - நெருங்கிய இரண்டு மேகங்கள், முடுகி நின்று - (ஒன்றோடொன்று)
பகைத்துநின்று, பொழிவபோல் - மழை பெய்வனபோல,-தூசிநின்ற வீரரோடு -
(ஒருபக்கத்து) முன்னணிச் சேனையில்நின்ற வீரர்களுடனே, தூசிவீரர் -
(மற்றொருபக்கத்து) முன்னணிச்சேனையில்வீரர்கள், வில்வளைத்து -
வில்லைவளைத்து, ஆசுகங்கள் வீச வீச - அம்புகளை மேன்மேல் வீசுதலால்,
அந்தரம் புதைந்த - ஆகாயவெளிகள் மறைந்தன; (எ - று.)

     பெருங்காற்றோடுகூடிப் பெருமழை பொழிவதுபோல, வீரர்கள் ஒருவர்மேல்
ஒருவர் அம்புகளை அளவில்லாமற் சொரிந்து ஆகாயத்தைமறைத்தார்களென்பதாம்.
"குணக்கெழுகாற்று மேகமுங் கொண்டல்," "வெயிலுங்காந்தளு
மேற்றிசைக்காற்றுங் குதிரையும் வேனிலுங் கோடையாகும்" என்ற
பிங்கலந்தையைஇங்கே அறிக. பொழிவ - பெயர்; பொழிவனவாகிய கொண்ட
லோரிரண்டுபோலென்க. ஆசுகம் - விரைந்துசெல்வதென்று பொருள்; ஆசு -
விரைவு: வடமொழிஅவியயம்.                                     (85)

9.-இதுவும் அடுத்த கவியும்-திருஷ்டத்யும்நனும் துரோணனும்பொர,
திருஷ்டத்யும்நன் தோற்றோடியமை கூறும்.

சொற்கையாதவாய்மைவல்லதுருபதன்குமாரனும்
விற்கையாசிரியனுமுற்றெதிர்ந்து தம்மில்வெகுளவே
பொற்கைவெஞ்சராசனம்பொழிந்தகோலிழிந்தவா
னுற்கையென்னவொருகைமாமுகங்களூடொளித்தவே.

     (இ-ள்.) (அப்பொழுது), சொல்கையாத-சொல்வெறுக்கப்படாத
[இன்சொல்லையுடைய],வாய்மை வல்ல - உண்மைபேசுதலில் வல்லவனான,
துருபதன் குமாரன்உம் -துருபதராசனது புத்திரனான திட்டத்துய்மனும், வில் கை
ஆசிரியன்உம் -வில்லையேந்திய கையையுடைய துரோணாசார்யனும், உற்று
எதிர்ந்து - வந்துஎதிரிட்டு, தம்மில் வெகுள - தமக்குள் [ஒருவன் மேலோருவன்]
கோபிக்க, (அச்சம