பக்கம் எண் :

70பாரதம்வீட்டும பருவம்

யத்தில்), பொன் கை வெம் சராசனம் - அழகியகையிற்பிடித்த பயங்கரமான
(இருவர்)விற்களும், பொழிந்த - சொரிந்த, கோல் - அம்புகள், வான் இழிந்த
உற்கை என்ன-ஆகாயத்தினின்று வீழ்ந்த எரிகொள்ளிபோல, ஒருகை மா
முகங்களூடு ஒளித்த -(எதிர்ப் பக்கத்திலுள்ள) ஒற்றைக்கையை [துதிக்கையை]
யுடைய விலங்காகியயானைகளின் முகங்களிலே தைத்துமறைந்தன; (எ - று.)

     உற்கை-எரிகொள்ளி; உல்கா என்னும் வடமொழித் திரிபு. சொற்கையாத
என்பதற்கு-(புகழ்பவரது) சொல்லுக்கு மிக இனிய என்றும் உரைக்கலாம்;
"நாகையாப்புகழான்" என்பர் மேற் பதினாறாம் போர்ச் சருக்கத்தும். கௌரவ
பாண்டவர்க்கும், சிகண்டி திட்டத்துய்மர்க்கும், துரோணன் வில்வித்தைபயிற்றி
வைத்தகுரு வாதலால், இவனை 'விற்கையாசிரியன்' என்றார். பொற்கை-
பொன்னாபரணமணிந்த கையுமாம். சராசநம்-வடசொல்; அம்புகளைத் தள்ளுவ
தென்று பொருள்.                                             (86)

10.வீரசாபமுடனுரைக்கும்வெய்யசாபம்வல்லவத்
தீரன்வாளியாலழிந்துசிலையுமேறுதேரும்விட்
டீரமாமதிக்குடைந்தவிருள்கொலென்னவேகினா
னாரவாரமுடன்மலைந்தவைவர்சேனையதிபனே.

     (இ - ள்.) (அப்பொழுது), வீர சாபமுடன் - வீரத்தன்மைக் குரிய வில்லின்
தொழிலிலும், உரைக்கும் வெய்ய சாபம்-கோபித்துச் சொல்லுங் கொடிய
சாபமிடுதலிலும், வல்ல - வல்லவனான, அ தீரன் - தைரியசாலியான
அந்தத்துரோணாசார்யனது, வாளியால் - அம்புகளால், ஆரவாரமுடன் மலைந்த
ஐவர்சேனை அதிபன் - பேரொலியோடு எதிர்த்துப்போர்செய்த
பாண்டவர்சேனைக்குத்தலைவனான திட்டத்துய்மன், அழிந்து - தோற்று, சிலைஉம்
ஏறு தேர்உம் விட்டு - கைவில்லையும் ஏறியதேரையும் ஒழித்து, ஈரம் மாமதிக்கு
உடைந்த இருள் கொல் என்ன - குளிர்ச்சியையுடைய பெரிய பூர்ணசந்திரனுக்குத்
தோற்ற இருள்போல, ஏகினான் - சென்றான்; (எ - று.)

     எளிதில் அழிதற்கு உவமை. துரோணன் அந்தணானாய் நின்றே
அரசர்க்குரியவில்வித்தையையும் முழுதுமறிந்துள்ள சிறப்புத் தோன்ற,
'வீரசாபமுடனுரைக்கும்வெய்யசாபம்வல்ல வத்தீரன்' என்றார்; வில்லாலுஞ்
சொல்லாலும்பகைவரையழிக்கவல்லவனென்பது, இத்தொடரின் கருத்து.
வெகுளிகொண்டுசபித்தாலும் அருள்கொண்டு அனுக்கிரகித்தாலும்
அந்தந்தப்பயன்களைத் தவறாமல்தந்தேவிடும் நிறைமொழியை யுடையவன்
இவனென்பது விளங்க 'உரைக்கும்வெய்யசாபம்வல்ல வத்தீரன்' என்றதனால்,
இவனது அந்தணவொழுக்கம்நன்குவிளங்கும். சாபமென்ற ஒரு சொல்லே
வெவ்வேறுபொருளில் மீளவும் வந்தது-மடக்கு என்னுஞ் சொல்லணி; இதனை
வடநூலார் யமகமென்பர். பொருளணியில்சொற்பின்வருநிலையணி யெனப்படும்.
இருள்கொல், கொல் - அசை.