பக்கம் எண் :

இரண்டாம் போர்ச்சருக்கம்71

11.-சேனாபதிதோற்கவே வீமசேனன் உக்கிரமாகப்
பொருதல்.

உடைந்துடைந்துசேனைமன்னன்வருதல்கண்டுருத்துவான்
மிடைந்தகொண்டலெனவதிர்ந்துவீமசேனன்வேலையைக்
கடைந்தகுன்றொடொத்ததேர்கடாவிவந்துமுனிவனோ
டடைந்தமன்னருட்கியோடவொருகணத்திலமர்செய்தான்.

     (இ - ள்.) சேனை மன்னன்-(தங்கள்) சேனைத்தலைவனான திட்டத்துய்மராசன்,
உடைந்து உடைந்து வருதல் - (இங்ஙனம்) தோற்றுத் தோற்று வருதலை, கண்டு -
பார்த்து, வீமசேனன்-, உருத்து- கோபங்கொண்டு, வான் மிடைந்த கொண்டல் என
அதிர்ந்து - ஆகாயத்திற்பொருந்திய மேகம் போலக் கர்ச்சித்து, வேலையை
கடைந்தகுன்றொடு ஒத்த தேர் கடாவிவந்து - (முன்னே) திருப்பாற்கடலைக்
கடைந்திட்டமந்தரமலையோடு சமமான (தனது) இரதத்தைச் செலுத்திவந்து,
முனிவனோடுஅடைந்த மன்னர் உட்கி ஓட- அந்தண குலத்தானாகிய
அத்துரோணனும்(அவனுக்குத் துணையாகச்) சேர்ந்துள்ள அரசர்களும் தோற்றுப்
பயந்தோடும்படி,ஒரு கணத்தில் அமர் செய்தான் -ஒருக்ஷணப் பொழுதிலே
போரைச்செய்தான்;

     உடைந்து உடைந்து என்ற அடுக்கால், திட்டத்துய்மன் மீண்டும் வேறு
வில்லையெடுத்துக்கொண்டு வேறொருதேரின்மே லேறிச் சென்று துரோணனோடு
பொருவதுந் தோற்பதுமாக இங்ஙனம் பல முறை நிகழ்ந்த தென விளங்கும்.
முன்னொரு காலத்தில் துருவாசமுனிவரது சாபத்தாற் கடலினுட்புக்கு ஒளித்த
சுவர்க்கலோகத்துச் செல்வங்களையெல்லாம் மீளவும் பெறும்பொருட்டு
இந்திரன்முதலிய தேவர்கள் திருமாலின்நியமனப்படி அசுரர்களுடன் கூடிச்சென்று
மந்தரமலையை மத்தாகநாட்டி வாசுகி யென்னும் பெரும்பாம்பைக்
கடைகயிறாகப்பூட்டித் திருப்பாற்கடலைக் கடைந்தன ரென்பது கதை. மந்தரகிரி
பாற்கடலைக் கலக்கியதுபோல, வீமன்தேர் போர்க்கடலைச் கலக்குதல்பற்றியது,
இவ்வுவமை.                                                   (88)

12.-வீமசேனன் உக்கிரமாகப் பொரவே, கலிங்க மன்னனான சக்ரதேவன்
யானைவீரர்களோடு வந்து அவனை எதிர்த்தல்.

உக்ர மாக வீமன் வந்த வுறுதி கண்ட நேகபோர்
விக்ர மாம தத்த டக்கை வேழ வீரர் தம்முடன்
வக்ர சாப மழைபொ ழிந்து வடக லிங்க மன்னவன்
சக்ர தேவன் முகிலெ றிந்த வுருமே னத்த லைப்பெய்தான்,

     (இ - ள்.) வீமன் - வீமசேனன், உக்ரம் ஆக வந்த - (இவ்வாறு) கடுமையாக
எதிர்த்துவந்த, உறுதி-மனவுறுதியை, கண்டு-பார்த்து, வட கலிங்கம் மன்னவன்-வட
கலிங்கதேசத்து அரசனாகிய, சக்ரதேவன்- சக்கரதேவ னென்பவன், அநேகம் போர்
விக்ரம் மா மதம் தடகை வேழம்வீரர் தம்முடன்-பலவகைப் போர்த்திறமையையும்
மிக்கமத சலத்தையும் பெரியதுதிக்கையையுமுடைய யானைகளின்மே லேறிய
பலவீரர்களுடனே, வக்ர சாபம் மழை பொழிந்துவளைவான வில்லைக்