கொண்டு அம்புமழையைச் சொரிந்துகொண்டு, முகில் எறிந்த உரும் என- மேகமிடித்த இடிபோல [மிகப்பயங்கரமாக], தலைப்பெய்தான் - எதிர்த்து வந்தான்; (எ - று.) விக்ரம் - விக்ரமம் என்பதன் விகாரம்; பராக்கிரமம். சக்ரதேவன் முகிலெறிந்தஉருமென எனஎடுத்து, தேவராசனான இந்திரன் (தனக்கு வாகனமான) மேகத்தை(வச்சிராயுதங்கொண்டு) அடித்தலாலுண்டான இடிபோல என்றும் உரைக்கலாம்;ஸக்ரன் - வடசொல். தலைப்பெய்தல்-முன்னே கலத்தல். அநேகபோர் - நிலைமொழிவட சொல்லாதலால், வலி இயல்பு. (89) வேறு, 13.-கலிங்கராசனுடன்வந்த யானைப்படைகளை வீமன் வென்றமை. கதிக்கடுந் தேரினின் றிழிந்து காலிங்கன் மதிக்குமும் மதகரி வந்த யாவையுந் துதிக்கைவன் கரங்களாற் சுற்றி யெற்றினான் விதிக்கொரு விதியனான் வீம சேனனே. |
(இ - ள்.) (அப்பொழுது), விதிக்கு ஒரு விதி அனான் - ஊழ்வினைக்கும் ஒருஊழ்வினையை யொத்தவனாகிய, வீமசேனன்-, கதி கடு தேரினின்று இழிந்து - வேகம்மிக்க (தனது) இரதத்தினின்று இறங்கி,- காலிங்கன்-அந்தக் கலிங்கநாட்டுமன்னனான சக்ரதேவன், மதிக்கும்- நன்குமதித்த, மும்மதம் கரி வந்த யாவைஉம் - மூன்றுமதங்களையுடைய யானைகள் (போருக்கு) வந்தன எல்லாவற்றையும், வல் கரங்களால் துதிக்கை சுற்றி எற்றினான்- (தனது) வலியகைகளால் துதிக்கையைப் பிடித்து வீசினான்; (எ - று.) பதினாயிரம் யானைபலங் கொண்டவனாதலால், இங்ஙனம் எளிதிற் செய்தான். 'விதிக்கொருவிதியனான்' என்றது - மற்றையோருடைய போர்ச்செயல்களெல்லாம் விதியை அனுசரித்துப் பயன்தரும்: இவனது போர்ச்செய்கையையோ, விதி தான் அனுசரிக்கும் என்றவாறு; எனவே, பகைவரை எதிர்த்துத் தவறாமற் கொல்ல வல்லவன் என்றதாம்; "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான் முந்துறும்" என்றபடி எல்லாவுபாயங்களையுந் தடுத்துவிட்டுத் தான் தவறாமற் பலிப்பதாகிய ஊழ்வினையையுந் தன் கருத்தின்படி நடத்தத்தக்க பராக்கிரமமுடையா னென்க. விதிக்கு என்றதன் இறுதியில் உயர்வுசிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. பீமஸேனன்-பயங்கரமான சேனையையுடையான். காலிங்கன்- தத்திதாந்தநாமம். மும்மதம்-கன்னம் இரண்டு, குறியொன்று ஆக மூன்றிடங்களினின்று பெருகுவன. துதிக்கை வன்கரங்களால் - யானைத் துதிக்கைபோன்ற தனது வரிய கைகளாலென்றுங் கொள்ளலாம். பி-ம் : காலிங்கர். இதுமுதற் பத்துக் கவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும், மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். (90) |