பக்கம் எண் :

இரண்டாம் போர்ச்சருக்கம்73

14.-இதுமுதல் ஐந்துகவிகள் - வீமனாற்போரிலடிபட்ட யானைகளை
வருணிப்பன.

மின்பொழிபடையுடைமேவலாருட
லென்புகவிபங்களையெடுத்தெறிந்தவா
தன்பெருந்துணைவனாந்தாமமாருதி
வன்புடன்பறித்தெறிவரைகளென்னவே.

     (இ - ள்.) 'தன் பெரு துணைவன் ஆம் - தனது [வீமனது] பெரிய
தமையனான, தாமம் மாருதி - ஒளியையுடைய வாயுகுமாரனான அநுமான்,
வன்புடன் பறித்து எறி - வலிமையோடு பேர்த்து வீசிய, வரைகள்- மலைகளாம்,'
என்ன - என்றுஉவமை கூற,- மின் பொழி - மின்னல்போன்ற ஒளியைச்
சொரிகிற,படை உடை - ஆயுதங்களையுடைய, மேவலார் - பகைவர்களது, உடல்
என்பு -உடம்பிலுள்ள எலும்புகள், உக - சிந்தும்படி, இபங்களை - யானைகளை,
(வீமன்),எடுத்து எறிந்த-, ஆ - விதம், (என்னே!) (எ - று,)

     முடிக்குஞ்சொல் வருவித்து முடிக்க. எடுத்தெறிந்தவாற்றை மேலிற்கவிகளிற்
காண்க. இபம் - வடசொல். ஆ - ஆறு என்பதன் கடைக்குறை. அடுத்த தமையன்
தருமனாதலின், அனுமானை 'பெருந்துணைவன்' என்றது; துணைவன் -
உடன்பிறந்தவன்: பிராதா. அனுமான் கேசரியென்னும் வாநரராசனது மனைவியாகிய
அஞ்சநாதேவியினிடம் வாயுதேவனால் முன்புபிறந்தவனாதலால், பின்பு வாயுவினாற்
குந்தியினிடம் பிறந்த வீமனுக்கு அண்ணனாவன். தாமம்மாருதி - மாலையையுடைய
அனுமா னென்றுமாம்; இந்திரன் இளமையில் இவனுக்கு ஒருபொற்றாமரைமாலை
யளித்ததாகவும், பட்டாபிஷேககாலத்தில் இராமபிரான் திவ்வியமான ஒரு
முத்தாரத்தைச் சீதாபிராட்டியைக்கொண்டு கொடுப்பித்ததாகவும், இராமாயண
வரலாறு.தாமம் - இருபொருளிலும், வடசொல். மாருதி-தத்திதாந்தநாமம்: மருத்-
வாயு.அனுமான் மலைகளைப் பறித்தெறிந்தது, இலங்கைக்குச்செல்லக் கடலில்
அணைகட்டிய பொழுதி லென்க. வலிமையும் பருமையும் பற்றிய
தற்குறிப்பேற்றவுவமையணி. பி-ம்: எறிந்தனன்.                   (91)

15.வெம்பிமேல்வருதிறல்வீமன்மும்மதத
தும்பிமேல்விழவிழத்தும்பிவீசுவ
பம்பிமேலெறிதருபவனனாற்கட
லம்பிமேல்விழவிழுமம்பிபோன்றவே.

     (இ - ள்.) வெம்பி - கோபங்கொண்டு, மேல் வரு - (பகைவர்)
மேல்வருகிற,திறல் - பலத்தையுடைய, வீமன்-, மும் மதம் தும்பி மேல் விழ விழ -
மூன்றுமதங்களையுடைய யானைகளின்மேல் அடுத்தடுத்து விழும்படி, வீசுவ -
எடுத்துஎறிவனவான, தும்பி - யானைகள்,-பம்பி மேல் எறிதரு பவனனால் -
நெருங்கிமேல்வீசுகிற வாயுவினால், (வீசியெறியப்பட்டு), கடல் - கடலிலே,
அம்பிமேல்விழ விழும் - மரங்கலங்களின் மேல் அடுத்தடுத்து விழுகிற, அம்பி-
மரக்கலங்களை,போன்ற - ஒத்தன; (எ-று.)