மூன்றாமடியால், கலிங்கன் வீடுமனுக்குப் போரில் உற்ற துணையாக வுள்ளவ னென விளங்கும். கந்து=ஸ்கந்தம்: மரக்கிளையின் பெயராகிய இந்த வடமொழி இலக்கணையாய், கட்டுத்தறியைக் காட்டும். யானை கட்டுத்தறி முறிப்ப தாதலை "தூணும் விலங்கு முறிப்பது" என மேற் பதினேழாம் போர்ச்சருக்கத்தில் வருவதனாலுங் காண்க. இந்திரன் - வீமனுக்கும், சிறகு - கலிங்கனுக்கும், குன்று - வீடுமனுக்கும் உவமை. (98) 22.-மூன்றுகவிகள் - வீமன் வீடுமனுடன் கடும்போர் புரிந்து ஆகவமுழுவதிலும் ஆரவம்மிகுத்தலைக் கூறும். வீமனுந் தனதுதேர் மேல்கொண் டாங்கொரு தாமவே லவன்புயத் தடத்தி லோச்சினான் மாமரு மாலையான் றானு மற்றவ்வே றோமர மொன்றினாற் றுணித்து வீழ்த்தினான். |
(இ - ள்.) வீமனும்-, தனது தேர் மேல் கொண்டு - தன்னுடைய தேரின்மேல்ஏறிக்கொண்டு, ஆங்கு-அப்பொழுது, ஒரு தாமம் வேல் - ஒளியையுடையதொருவேலாயுதத்தை, அவன் புயம் தடத்தில்-அந்த வீடுமனது தோளினிடத்தில், ஓச்சினான்- குறிக்கொண்டு எறிந்தான்; மா மரு மாலையான் தான்உம் - மிக்கவாசனையையுடைய மாலையையுடைய அவ்வீடுமனும், அ வேல் - அந்தவேலாயுதத்தை, தோமரம் ஒன்றினால் - (தான் எறிந்த) தோமரமென்னும் ஓராயுதத்தால், துணித்து வீழ்த்தினான் - துண்டித்துத் தள்ளினான்; (எ - று.) தோமரம் - இருப்புலக்கைக்கும், கைவேலுக்கும், பேரீட்டிக்கும் பெயர். தாமவேல்-வெற்றிமாலையைச் சூடிய வேலுமாம். மற்று - அசை. கீழ் 13-ஆம் பாட்டில் வீமன் தேரினின்று இறங்கினமை கூறியதனால், இங்கே 'தேர்மேல் கொண்டு'என்றார் (99) வேறு. 23, | ஓடுமிர தத்திவுளி நாலுமட லற்றுவிழ வோரொர்கணை தொட்டி ரதமு, மீடுகுலையத்துவசம் வீழவனி கத்தவரு மேகவெதிர் முட்டு தலுமே, நீடுவரை யொப்பதொர்கதாயுத மெடுத்தணுகி நேர்பட வடித்த னனரோ, வீடுமன் மனத்தனையதேர்வலவனைக்கடிதின் வீமனெனும் வெற்றி யுரவோன். |
(இ - ள்.) (அதுவுமின்றி, வீமனது), இரதத்து - தேரிற்பூட்டிய, ஓடும் - விரைந்துசெல்லுந்தன்மையனவான, இவுளி நால்உம் - குதிரைகள் நான்கும், உடல் அற்று விழ-உடம்பு துணிந்து விழும்படியும், இரதம்உம் ஈடு குலைய - அத்தேரும் வலிமைகெடும்படியும், துவசம் வீழ- அத்தேர்க்கொடி அறுந்துவிழும்படியும், அனிகத்தவர்உம் ஏக-(அவன்) சேனையிலுள்ள வீரர்களும் (புறங்கொடுத்து) ஓடும்படியும், ஓர் ஒர் கணை தொட்டு - (ஒவ்வொன்றுக்கு) ஒவ்வொரு அம்பை எய்து, எதிர் முட்டுதலும் - (வீடுமன்) எதிர்த்துப் போர் செய்தவளவில்,-வீமன் எனும்வெற்றி உரவோன்-வீமனென்கிற |