பக்கம் எண் :

78பாரதம்வீட்டும பருவம்

சயத்தைத்தரும் பலத்தையுடைய வீரன், கடிதின் - விரைவாக, நீடுவரை ஒப்பது
ஒர்கதாஆயுதம் எடுத்து அணுகி-நீண்ட மலையை யொப்பதொரு கதாயுதத்தை
யெடுத்துக்கொண்டு அருகிற்சென்று, வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை-
வீடுமனது மனத்தை யொத்த தேரைச் செலுத்தும் பாகனை, நேர் பட அடித்தனன்-
குறி தவறாது காயம்படும்படி அடித்தான்; (எ - று.)

     கதைக்கு மலைஉவமை - பெருவடிவத்துக்கும், வலிமைக்கும், அழித்தற்கு
அருமைக்கும். அச்சந்தருவதற்கு மென்க. மனத்தனைய - மனத்துக்கு மிகவும்
இஷ்டமான என்றபடி; இதனைத் தேருக்கும் வலவனுக்கும் அடைமொழியாக்கலாம் :
தேருக்கு ஆக்கும்போது, மனத்து அனைய-மனோவேகத்தை யொத்த எனப்
பொருள்கொள்ளினும் இழுக்காது. உரவோன் என்பதில், உரவு-பகுதி;  அது-பலம்:
தேகபலம், ஆயுதபலம், சேனாபலம், மனோபலம், புத்திபலம், தெய்வபலம் முதலிய
பலவகை வலிமைகளையும் உணர்த்தும்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்துக்கவிகள் - பெரும்பாலும்
முதலைந்துசீரும் கூவிளங்காய்ச்சீர்களும், ஆறாவது தேமாச்சீரும், ஏழாவது
புளிமாச்சீருமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள்.         (100)

24.வேகமுடனிப்படியவ்வீமனுமுடற்றியடல்வீடுமனொ
                                டொத்தமுதுபோர்,
மோகரவிதத்தரசர்மாமகுடரத்நமுடன்மூளைகடெறிக்கவடியா,
நாகமொடெடுத்திவுளிதேர்சிதறமுற்றவொருநாழிகையிலெற்றி
                                         வரவே,
யாகவமுழுக்கவுருமேறெறிவதொக்குமெனவாரவமிகுத்ததறவே.

     (இ - ள்,) இ படி - இவ்விதமாய், வேகமுடன் - விரைவோடு, அவ்வீமனும்-,
உடற்றி - போர்செய்து, அடல் வீடுமனொடு ஒத்த - வலிமையையுடைய
பீஷ்மனோடு பொருந்திய, முது போர் மோகரம் விதத்து அரசர் - பழமையான
[பெரிய] யுத்தத்தில் உக்கிரமான தன்மையையுடைய அரசர்களது, மா மகுடம்
ரத்நமுடன்- பெரிய கிரீடத்திற்பதித்த இரத்தினங்களுடனே, மூளைகள்-
தலைமூளைகளும், தெறிக்க-சிதறும்படி, அடியா-அடித்து, நாகமொடு இவுளி தேர் -
யானைகளோடு குதிரைகளையுந் தேர்களையும், எடுத்து-, சிதற - (அவை
பொடியாய்ச்) சிந்தும்படி, ஒரு நாழிகையில் - ஒரு நாழிகைப் பொழுதிலே, முற்ற -
(அச்சேனை) முழுவதிலும், எற்றி வர - தாக்கிக்கொண்டு வருகையில், ஆகவம்
முழுக்க - அப்போர்க்களம் முழுவதும், உரும் ஏறு எறிவது ஒக்கும் என -
பேரிடிவிழுவதுபோலுமென்னும்படி, அற - மிகவும், ஆரவம் மிகுத்தது -
இரைச்சல்அதிகப்படப்பெற்றது; (எ - று.)

     ஆஹவம், ஆரவம் - வடசொற்கள். பெரியதையுஞ் சிறந்ததையும்
ஏறென்றல்,மரபு. பி - ம் : இப்படியில். சிதறி.                     (101)

25.-இதுவும். மேற்கவியும்-குளகம்:  அபிமனும்வந்து கடுமையாகப்
பொருவதைத் தெரிவிக்கும்.

மீளவும்வளைத்தசிலை வீடுமனத்திர்த்தகுரல் 
                            வீமனொடுருத்திருவருங்,
காளமுகிலுக்குமுகினேர்மலைவதொக்கவெரிகா லுநயனக்