பக்கம் எண் :

இரண்டாம் போர்ச்சருக்கம்83

30.-சூரியாஸ்தமனவருணனை.

வேலையமுதுக்குவருவானவர்களொத்தனர்கள்வீடுமன்முதற்படைஞரா
லாலநிகரொத்தனனனீகினிதொலைத்தொருதனாண்மைநிலையிட்டுவருவோன்
மேலினியிமைப்பொழுதுநாம்வெளியினிற்கிலிவன்மேலிடுமெனக்கருதினான்
போலெழுவயப்புரவியூருமிரதத்திரவிபோயுததியிற்சொருகினான்.  

     (இ - ள்.) (அப்பொழுது அஞ்சித் சிதறியோடின), வீடுமன் முதல் படைஞர் -
பீஷ்மன்முதலான சேனைவீரர்கள், வேலை அமுதுக்கு வரு வானவர்கள்
ஒத்தனர்கள் - பாற்கடலில்தோன்றிய அமிருதத்தைப் பெறுதற்கு வந்த தேவர்களைப்
போன்றார்கள்; அனீகினி தொலைத்து - (அங்ஙனம் சத்துரு) சேனையை யோட்டி,
ஒரு தன் ஆண்மை நிலை இட்டு வருவோன் - ஒப்பற்ற தனதுபராக்கிரமத்தை
நிலைநிறுத்தி வருபவனான அருச்சுனன், ஆலம் நிகர் ஒத்தனன் - (அப்பொழுது
பாற்கடலினின்று யாவரும் அஞ்சுமாறு எழுந்த) காலகூடவிஷத்தை உவமையாகப்
பொருந்தினான்; (அச்சமயத்தில்), எழு வய புரவி  ஊரும் இரதத்து இரவி-ஏழு
வலியகுதிரைகள் பூண்டு நடந்துந் தேரையுடைய சூரியன், இனி மேல் நாம்
வெளியில் இமைப்பொழுது நிற்கில் இவன் மேலிடும் என கருதினான் போல் -
நாம்இனிமேல் வெளியிலே ஒரு கணப்பொழுது நின்றாலும் இவ்வருச்சுனன்
நம்மேலும்(அழிக்க) வருவானென்று எண்ணினான்போல, உததயில் போய்
சொருகினான் -(மேல்) கடலிற் போய் மறைந்தான்; (எ - று.)- படைஞரால்,
ஆல் - ஈற்றசை.

     முன்னிரண்டடி - உவமையணியும், பின்னிரண்டடி- ஏதுத்தற்குறிப்
பேற்றவணியு
மாம். மண்ணுலகத்தில் ஆண்மைநிலையிட்டு வருபவன்  அங்கு
எதிர்ப்பவரில்லாமையால் விண்ணுலகத்துப் பாய்ந்து எதிரில் நிற்குந் தன்மேல்
பொருதிடுவானோ எனச் சூரியன் அஞ்சினான். சூரியன் அஸ்தமித்தலை
மேல்கடலில்மறைதலாகத் தோற்றம்மாத்திரத்தைக்கொண்டு கவிகள் வருணிப்பர்.
வீடுமன்முதலியோரை வானவர்க ளென்றதற் கேற்ப, வெற்றியை அமுதமாகக்
கொள்க.அமுதுக்கு - நான்காம்வேற்றுமை, பொருட்டுப் பொருளது. 'படைஞரார்'
என்றபாடத்துக்கு, ஆர் - விகுதிமேல் விகுதி. ஆலம் - ஹாலம்:  வடசொல்.
எழுபுரவி -பண்புத்தொகை; சூரியனது தேர்க்குதிரை ஏழெனப் பெயர்பெற்ற
தொன்றேயென்பாரும், ஒரு குதிரைக்கு  ஏழு பெயர்க ளென்பாரும்,
ஏழுகுதிரைகளென்பாரும்,ஏழுகுதிரைகளில் ஒன்று ஏழெுன்று பெயர்பெற்ற
தென்பாரும் எனப் பலதிறத்தவராவர்.

31.-மாலைப்பொழுது வருணண.

ஆதபனொளித்ததிசையோவொளிசிவந்ததறவாழ்குருதிமெத்துகையினான்
மாதிரமுமைக்கடலுமாநிலமுமுட்டவொருமாசறுசிவப்புவடிவா
யேதிலிருள்புக்குலவலாமிடமறக்கடையினேறனலியொத்ததிகலிப்
பாதகமிகுத்தகொலைவாணிருபர்தத்தமதுபாடிநகர்புக்கனர்களே.