பக்கம் எண் :

88பாரதம்வீட்டும பருவம்

வாரேதொடங்கும்பணைக்குலமு மணிக்காகளமுமுடன்முழங்கப்
பாரேதொடங்கியெவ்வுலகு மடைவேசெவிடுபட்டனவே.

     (இ - ள்.) இரு படைஉம் - இருத்திறத்துச்சேனையும், போர் தொடங்கி -
யுத்தத்தைச்செய்யத்தொடங்கி, புகுந்த பொழுதில்-(போர்க்களத்தில்)
அடைந்தபொழுது,-உகம்தொலைத்த - கல் பாந்தகாலத்தில் (உலகத்தை)
அழிக்கலுற்ற, கார் தொடங்கி -மேகம்முதலாக, கார்கோள் - கடல்களும், வெம்
கடுகால்-கொடிய சண்டமாருதமும்,கலி கொண்டு ஆர்ப்பன போல்- முழக்கத்தைக்
கொண்டு ஆரவாரிப்பனபோல, வார்தொடங்கும் பணை குலம்உம்-
தோற்கயிற்றாற்கட்டப்பட்ட பறைகளின் கூட்டமும்,மணி காகளம் உம் - அழகிய
எக்காளமென்னும் வாத்யவிசேஷமும், உடன் முழங்க- ஒருங்குஒலிக்க, (அதனால்),
பார் தொடங்கி எ உலகு உம்-பூமிமுதலாகஎல்லாவுலகங்களிலுமுள்ள பிராணிகளும்,
அடைவுஏ செவிடு பட்டன- முறையேசெவிடாய்விட்டன; (எ - று.)- ஏகாரங்கள்
ஆறும் - அசைநிலை.

     உகந்தொலைத்த காரே தொடங்கிக் கார்கோள்வெங்கடுங்கால்
கலிகொண்டார்ப்பனபோல் என்பதற்கு - சர்வசங்காரகாலத்தில் அனைத்தையும்
அழித்தற்பொருட்டு இடைவிடாப்பெருமழை பொழியும் மேகம் முதலாக
ஒருங்குபொங்கியெழும் கடல் இடையாக மிகக்கொடிதாகவீசும் பெருங்காற்று
இறுதியாக உள்ள மூன்றுபொருள்களும் முழங்கிப் பேராரவாரத்தை விளைப்பன
போலவென்று கருத்து. அளவிறந்த ஓசையைக் கேட்டால் காது செவிடாம்:
அன்றியும், உலகத்தில் எங்கும் ஒருவர்பேசும்பேச்சு மற்றவர்க்கு இப்போரவாரத்தால்
கேட்கவில்லையென்ற கருத்துங் கொள்ளலாம். பல பிராணிகள் அழியுங் கால
மாதலின், கல்பாந்த காலத்தை உவமைகூறினது ஏற்கும். கடலினின்று மேகத்தால்
(நீர்)கொள்ளப்படுவதால், கடலுக்குக் கார்கோள் என்று பெயர்; 'கார்முகக்கப்
படுதலின்,கடல் கார்கோள் என்று பெயர்பெற்றது; ஆகுபெயர்' என்பர்
நச்சினார்க்கினியர்.தொடக்குதல் - கட்டுதல்: இது - மூன்றாமடியில் எதுகை
நயம்நோக்கித் தொடங்கும்என மெலிந்தது. காகளம் - சிறுசின்னம்; இது -
இடைக்குறைவிகாரமாய்க்காளமெனவும் வழங்கும். உகம் - யுகமென்னும் வட
மொழித் திரிபு; இது -இலக்கணையாய், யுகமுடிவையுணர்த்தி, இங்கே,
கால்பாந்தகாலத்துக்கு வந்தது.                            (112)

4.-வீடுமன் துரோணன்முதலியோர்,
ஸ்ரீக்ருஷ்ணனுடனே அருச்சுன வபிமன்யுஇவர்களை வளைத்தல்.

சொல்லார்கேள்விக்கங்கைமகன் றுரோணன்முதலாமதிரதரு
மெல்லாரிரதகயதுரங்க மேலாளுடனேகாலாளும்
வில்லான்முன்னாட்டமைத்துரந்த வீரன்றனையுஞ்சிறுவனையும்
மல்லால்வஞ்சமல்லடர்த்த மாயன்றனையும்வளைத்தாரே.

     (இ - ள்) சொல் ஆர் - சொற்கள்நிறைந்த, கேள்வி - கேள்விகளையுடைய,
கங்கை மகன் - வீடுமனும், துரோணன்