துரியோதனனைத் தேற்றுதற்குப் பாகனது துணையும் இல்லை யானதை இதில் தெரிவித்தார். நண்ணலரை மாகந்தனிற் சென்று அமர்கடந்து வரு மைந்துடையோன் திருமைந்தன் என்பதற்கு - (இந்திரனாலேவப்பட்டுப்) பகைவர்களாய் வந்து துரியோதனாதியர்களைக் கட்டித் தூக்கிக்கொண்டு போன சித்திரசேனன் முதலியவர்களைப் பெரிய வானத்திற் பாய்ந்து போரில் வென்று வந்த வலிமையையுடையனான வீமசேனனது சிறந்தகுமாரனாகிய கடோத்கச னென்று உரைப்பினும் அமையும். மீண்டும்-துரியோதனனைக் கடோற்கசன் வீழ்த்தினதல்லாமல்என்றபடி. நண்ணலர் - பொருந்தவர்: பகைவர். மாகம்=மஹா கம்: வடசொல்.வேகம்படப் பாய்ந்தான் என இயைப்பினுமாம். (117) 9.-துரியோதனன் சோர்ந்துவீழ்ந்தமைகேட்டு வீடுமன் அருச்சுனனைவிட்டு அங்கு எழுதல். விழுந்தான்வேலாற்றேர்ப்பாகன் வெஞ்சாயகத்தால்விறல்வேந்தர் தொழுந்தாளரசன்றானுமுயிர் சோர்ந்தானென்னுந்தொனிகேட்டுச் செழுந்தார்வாகைவிசயனையுந் தி்ருமாலையும்விட்டொருமுனையா யெழுந்தான்மந்தாகினிமைந்தனிலைந்தார்தமக்கோரெயில்போல்வான். |
(இ - ள்.) தேர் பாகன் - (துரியோதனனது) சாரதி, வேலால் - (பகைவன் எறிந்த)வேலாயுதத்தால் விழுந்தான் - இறந்துவிழுந்திட்டான்; விறல் வேந்தர் தொழும் தாள்அரசன் தான்உம் - வலிமையையுடைய அரசர்கள் பலர் வணங்கும் பாதத்தையுடையதுரியோதனராசனும், வெம் சாயகத்தால் - கொடியபகைவனம்பால், உயிர்சோர்ந்தான்-மூர்ச்சித்தான்,' என்னும்-என்று (சேனைவீரர்) கூவுகிற, தொனி-சத்தத்தை,கேட்டு-, இளைத்தோர்தமக்கு ஓர் எயில் போல்வான் - (போரில்) இளைத்தவர்க்குஒருமதில்போலப் பாதுகாவலாகவுள்ளவனாகிய, மந்தாகினி மைந்தன்-கங்காபுத்திரனான வீடுமன், செழு தார் வாகை விசயனைஉம் திருமாலைஉம் விட்டு -(தன்னா லெதிர்க்கப்பட்டுநின்ற) அழகிய வாகைப்பூமாலையைச்சூடியஅருச்சுனனையும் கண்ணனையும் விட்டுநீங்கி, ஒரு முனை ஆய் எழுந்தான் -ஒரேவேகமாய்ப்புறப்பட்டு (த் துரியோதனனிடம்) வந்தான்; (எ - று.) செழுந்தார்வாகை யென்றது, முந்தினநாளில் வீடுமனாதியோரைவென்ற சயத்தை விளக்குதற்கு. இளைத்தோர்தமக்கோ ரெயில்போல்வான்-இது இங்கே ஸாபிப்பிராய விசேஷணம்: கருத்துடையடைமொழி. ஸாயகம், த்வநி - வடசொற்கள். திருமால் - திருமகளிடத்து மால்கொண்டவனென்க; மால்- ஆசைப்பெருக்கம்: சிறந்தமாயவனுமாம். மந்தாகிநீ - ஆகாச கங்கைக்குப் பெயர். (118) 10.-வீடுமன் துரியோதனன் மூர்ச்சையைத் தெளிவித்தல். வண்டாரலங்கல்வலம்புரியோன் மார்பந்துளைத்தவாளிவழி கண்டானெடுத்துத்தாழ்ந்ததிருக் கையாலணைத்துக்காற்றேரிற் கொண்டானாவிதருமருந்து கொடுத்தானவனுங்கொடுத்தமருந் துண்டானுண்டகணத்தினின்மீண் டுணர்ந்தானுலகேழுடையானே. |
|