(இ - ள்.) (வீடுமன்), மருமங்களின்உம்-(எதிரிகளுடைய) மார்புகளிலும், புயங்களின்உம் - தோள்களிலும், வதனங்களின்உம்-முகங்களிலும், கண்களின்உம்- கண்களிலும், செருமும்படி - தைத்து நெருங்கும்படி, வெம் கணை மாரி சிந்தி சிந்தி-கொடிய அம்புமழையை மிகுதியாகப்பெய்து, சிரம் துணித்து-(அவர்கள்) தலைகளையறுத்து, தருமன் சேனை பரவை எலாம்- யுதிட்டிரனது சேனாசமுத்திரம் முழுவதிலும், தான்ஏ ஆகி- தானொருவனேயாய், தலைநாளில் பொரு மந்தரம் மால்வரை போல திரிந்தான்-முன்னொருகாலத்தில் (திருப்பாற்கடலில்) பொருந்திய [கடைந்த] பெரிய மந்தரகிரிபோலச் சுழன்று, வெம் போர் புரிந்தான்-கொடிய போரைச்செய்தான்; (எ-று.)- முதலடியிற்கூறிய நான்கிடமும், அம்பெய்தற்குச் சிறந்தஇலக்குக்களாம். செருமம், செருமு-பகுதி. மர்மம், வதநம், மந்தரம் - வடசொற்கள். (121) 13.-வீடுமன் மும்முரமாகக் கொன்றுகொண்டிருக்கவும், அருச்சுனன் கண்டுங் காணான்போலிருத்தல். மலையொத் ததிருங் கடகளிறும் வயமா வணியு மான்றேருந் தொலையத் தொலைய யாவரையுஞ் சுடுவெங் கணையாற் றுரந்துதுரந் தலையத் தரங்க மெறிகடல்வாய் வடவா னலம்போ லவனின்ற நிலையைக் கண்டுங் காணான்போ னின்றான் விசய னிகரில்லான். |
(இ - ள்,) மலை ஒத்து அதிரும் கடகளிறுஉம் - மலைபோல நின்று கர்ச்சிக்கும் மதயானைகளும், வய மா அணிஉம் - வலிய குதிரைவரிசைகளும், மான்தேர்உம் - குதிரைகளைப் பூட்டிய தேர்களும், தொலைய தொலைய - மிகுதியாகஅழியும்படி, யாவரைஉம் - (பகைவர்கள்) எல்லோரையும், சுடு வெம்கணையால்துரந்து துரந்து - அழிக்கவல்ல கொடிய அம்புகளால் துரத்தித்துரத்தி, அலையதரங்கம் எறி கடல்வாய் வடவானலம் போல் - அலையும்படி அலைகளைவீசுகிறகடலில் படபாமுகாக்நிபோல, அவன் நின்ற - அவ்வீடுமன் (பாண்டவசேனைமத்தியில்) நின்ற, நிலையை - தன்மையை, கண்டுஉம் - பார்த்தும், நிகர் இல்லான்விசயன் - ஒப்பற்றவனான அருச்சுனன், காணான் போல் நின்றான் - பாராதவன்போல(ப் போர் செய்யாது திகைத்து) நின்றான், (எ - று.) படபாநலம் - வடசொற்றொடர்; கடலினிடையே பெண்குதிரையொன்றின் முகத்தி லுள்ளதும், மழை முதலியவற்றால் வருகிற நீரினால் கடல் பொங்காதபடி அந்நீரை உறிஞ்சுவதும், யுகாந்தகாலத்தில் அங்குநின்று எழுந்து உலகங்களை யொழிப்பதுமாகிய தீ: படபா - பெண்குதிரை; அநலம் - நெருப்பு. நிகரில்லான் காணான்போல் நிற்பதே! என்றபடி இனி, நிகரில்லான் - இகழ்ச்சிக்குறிப்பினதுமாம். (122) வேறு. 14.-வீடுமன் கடும்போர்புரிகையில் பொராதிருந்த அருச்சுனனை ஸ்ரீ கிருஷ்ணன் சினந்து, சக்கரமெடுத்தல். கானெரி துற்றென வீடும னிப்படி காதிம லைத்திடவு மானநி னைத்திலை சாபமெ டுத்திலை வாளிதொ டுத்திலைநீ |
|