பக்கம் எண் :

மூன்றாம் போர்ச்சருக்கம்97

உன்னையசோதைகையிற் காட்டிக்கொடுப்பேன்' என்று கூற, ஸ்ரீகிருஷ்ணன்
உடனேஅவன் வேண்டுகோளின்படியே முத்தியருளிச் சென்றன னென்பது.
"பந்தித்தடம்புடைசூழரங்கா ததி பாண்டனுன்னைச், சந்தித்தநாண்முத்தி
பெற்றதென்னேதயிர்த்தாழியுமே" என்றார் ஐயங்காரும்.                (124)

16.-ஸ்ரீக்ருஷ்ணன்ஆயுதமெடுத்தது கண்டு நடுங்கி வீடுமன்
தன்தேரினின்றுஇறங்குதல்.

வாசவன்முற்பெறு காளைதொழத்தொழ மாறுபடச்சினவுங்
கேசவனிப்படி மேல்வருகிற்பது கேவலமுற்றுணரா
நாசநமக்குறு காலநணித்தென நாடிநடுக்கமுடன்
தேசணிபொற்றட மேருவெனத்திரி தேரினைவிட்டிழியா.

இது முதல் நான்கு கவிகள் - குளகம்.

     (இ - ள்.) முன் வாசவன் பெறு காளை - முன்னே இந்திரன் பெற்ற
புத்திரனான அருச்சுனன், தொழ தொழ - மிகுதியாக வணங்கவும், (தணியாமல்),
மாறுபட சினவும் - பகைமைதோன்றக் கோபங்கொள்ளுகிற, கேசவன் -
கண்ணபிரான், இ படி மேல் வருகிற்பது - இவ்வாறு தன்மீது (எதிர்த்துப் போருக்கு)
வருவதை, கேவலம் உற்று உணரா - நன்றாக உற்றுப்பார்த்து அறிந்து,-(வீடுமன்),-
நமக்கு நாசம் உறு காலம் நணித்து என நாடி - 'நமக்கு அழிவு நேருங் காலம்
கிட்டியது ' என்று ஆலோசித்து, நடுக்கமுடன் - அச்சத்துடனே, தேசு அணி பொன்
தட மேரு என திரி தேரினைவிட்டு இழியா - ஒளிபொருந்தின பொன்மயமான
பெரிய மேருமலைபோலத் திரிகின்ற தனது இரதத்தை விட்டு இறங்கி, - (எ - று.) -
'இழியா' என்றது, "எனப் பல நாடியுரைத்தனன்" (19) என்பதனோடு முடியும்.

     உள்ளமும் உடம்பும் நடுங்குதல், அச்சமென்னுஞ் சுவைக்குரிய மெய்ப்பாடாம்.
வாஸவன் என்னும் வடசொல்லுக்கு-அஷ்ட வசுக்கள் தலைவனென்றும், எல்லா
ஐசுவரியமு முடையவ னென்றும் பொருள்; வசு - தேவர்களில் ஓர் இனம்: அல்லது,
செல்வம். கேசவன் - பிரமனையும் உருத்திரனையும் தன் அங்கத்திற் கொண்டவ
னென்று பொருள்படும்: க - பிரமன், ஈச-சிவன்; "பிறைதங்கு சடையானை வலத்தே
வைத்துப் பிரமனைத் தன்னுந்தியிலே தோற்றுவித்து" என்றார்
திருமங்கையாழ்வாரும்;இனி, இதற்கு - அழகிய மயிர்முடியையுடையவனென்றும்,
கேசி யென்னும்அசுரனைக் கொன்றவனென்றும் பொருள்கள் உண்டு. கேவலம் -
தனிமையாகஎன்றும், தனது சிறந்த ஞானத்தாலென்றும் பொருள் கொள்ளலாம்.
நமக்கு -தனித்தன்மைப் பன்மை.                                 (125)

17.-மூன்றுகவிகள்-வீடுமன் கண்ணனைப் பலவாறு துதித்தைக் கூறும்.

ஆரணகற்பித  மாதவவச்சுத வாழியிடைத்துயிலுங்
காரணசிற்குண ரூபமலர்க்கொடி காதன்மனத்துறையும்