பக்கம் எண் :

100பாரதம்துரோண பருவம்

தலால், 'கண்ணுதல் வடிவமெனும்படி ஒருபாதி சிவந்தது' என்றார்: உவமையணி,
மாரன் என்ற வடசொல்லுக்கு - (ஆடவரையும் மகளிரையும் காதல்நோயால்)
மரணவேதனைப்படுத்துபவனென்று காரணப் பொருள். கண்நுதல்-
வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. சொரிவது -
சோரியெனக்காரணப்பெயர்.

     சிவவடிவம் இரண்டுதன்மைகலந்த விவரம்:- பிருங்கியென்னும் மகாமுணி
பரமசிவனை மாத்திரம் பிரதக்ஷிணஞ்செய்யக் கண்ட பார்வதீதேவி, தன்
பதியைநோக்கி 'முனிவன் என்னைப்பிரதக்ஷிணஞ்செய்யாமைக்கு ஏது என்ன?'
என்றுவினவ, உருத்திரமூர்த்தி 'இஷ்டசித்திபெற விரும்புபவர் உன்னையும்,
மோக்ஷம்பெற விரும்புபவர் என்னையும் வழிபடுவர்' என்ன, அதுகேட்ட தேவி
பெருமானோடு பிரியாதிருக்குமாறு தவம்புரிந்து வாமபாகம் பெற்றனரென்பது.(149)

12.-மற்றொருபக்கத்தில் திருஷ்டத்யும்நன் துரோணன்மேல்
வில் வளைத்தல்.

இந்திரன்மாமகனிங்கிவர்தம்முடனிம்முறைபோர்புரியச்
சந்திரசூரியமண்டலமொத்தணிதானையிரண்டுமுனைந்
துந்தியவேலையினுந்திகணாலுடையுந்திரதந்திடைபோ
யந்தணன்மேல்வரிசாபம்வளைத்தனனைவர்படைத்தலைவன்.

     (இ-ள்.) இந்திரன் மா மகன் - தேவேந்திரனது சிறந்த குமாரனான
அருச்சுனன், இங்கு-இவ்விடத்தில், இவர்தம்முடன் -  இச்சஞ்த்தகவீரர்களுடனே,
இமுறை- இவ்விதமாக, போர் புரிய - யுத்தஞ்செய்துகொண்டிருக்க, சந்திர சூரிய
மண்டலம் ஒத்து அணி-சந்திரமண்டலத்தையும் சூரியமண்டலத்தையும் போன்று
(எதிரெதிரில்) ஒழுங்குபடத் திரண்டுள்ள, தானை இரண்டும்உம் -
இருநிறத்துச்சேனைகளும், முனைந்து - போர்கலந்து, உந்திய வேலையின்-தாக்கிய
சமயத்தில்,-ஐவர் படை தலைவன் - பாண்டவர் சேனாதிபதியான திட்டத்துய்மன்,-
உந்திகள் நால்உடை-நான்கு சக்கரங்களையுடைய, உந்து இரதத்திடை-உயர்ந்த
தேரிலே, போய்,- அந்தணன்மேல் - துரோணாசாரியன் மேல், வரி சாபம்
வளைத்தனன்-கட்டமைந்த வில்லை வளைத்துப் போர் செய்தான்:   (எ - று.)

     உந்தியென்பது உருளையாதலை "உந்தி தேருருளே யாறேயுவரி நீர்ச்சுழியே
கொப்பூழ்" என்னும் நிகண்டினாலும் அறிக. உந்துதல்- உயர்ச்சி, செலுத்தல்,
தள்ளுதல்.                                                     (150)

13.-துரோணன் திருஷ்டத்யும்நனுடைய துவசத்தொடு கவசமழித்தல்.

நூலொடுசாபம்வளைத்தவன்மற்றிவனொய்தினுகைத்தவடிக்
கோலொடுகோன்முனையற்றுவிழத்தொடுகுனிசிலைநாணழியச்
சேலொடுசேல்பொருசீலமெனும்படிதேர்களிரண்டுமணிக்
காலொடுகால்பொரவன்றுவசத்தொடுகவசமழித்தனனே,

     (இ-ள்.) மற்று - பின்பு, அவன் - துரோணன், நூலொடு சாபம் வளைத்து -
தநுர்வேதமுறையோடு ஒப்ப வில்லை வளைத்து,