நொய்தின் உகைத்த - விரைவாகப் பிரயோகித்த, வடி கோலொடு- கூர்மையான அம்புகளால், இவன் - திட்டத்துய்மனது, கோல் - அம்புகள், முனை அற்று - நுனியறுந்து, விழ - கீழ்விழவும், தொடு- (கையில்) ஏந்திய, குனி சிலை - வளைந்த வில்லின், நாண்- நாணி, அழிய - துணிபடவும், சேலொடு சேல் பொரு சீலம் எனும் படிதேர்கள் இரண்டுஉம் மணி காலொடு கால் பொர - சேல்மீனோடு சேல்மீன் போர்செய்ய மொழுங்கு போலு மென்னும்படி, தன்தேரும் திட்டத்துய்மன் தேரும் அழகிய கால்களோடு கால்கள் தாக்க, வல் துவசத்தொடு கவசம் அழித்தனன் - (அத்திட்டத்துய்மனது) வலிய தேர்கொடியையும் உடற்கவசத்தையும் அழித்தான்: நொய்தின் - அலட்சியமாக, எளிதாக, மென்மையாக எனவும் பொருள்கள் படும். கால் என்றது - தேரின் ஏர்க்கா லென்றேனும், முன்நிற்குந் தூண்களென்றேனும் சக்கர மென்றேனும் கொள்க. கோலொடு, ஓடு - கருவிப் பொருளது. சீலம் - வடசொல். (151) 14.-கவிக்கூற்று: துரோணன் செய்த போரின் சிறப்பு. அருமுனியாதிதிட்டனுமன் குலவாதியும்மந்தணனாம், பெருமுனிதானுமுடற்றியபோர்சிலர்பின்பொருதாருளரோ, வொருமுனியேழ்கடலுங்கரமொன்றிலொடுக்கினன்மன்னனைமேல், வருமுனிவென்றனன்முனிவருடன்பொரவல்லவர்யார்புவிமேல் |
(இ-ள்.) (முன்பு), அரு முனி ஆதி - (உலகத்தில்) அருமையான முனிவர்களுக்கு முதல்வனான, வதிட்டன்உம்- வசிட்டனும், மன் குலம் ஆதிஉம்- க்ஷத்திரியசாதியில்தோன்றிய சிறந்தவனான விசுவாமித்திரமகாமுனிவனும், அந்தணன் ஆம் பெரு முனிதான் உம்-பிராமணசாதியனான சிறந்த முனிவனாகிய பரசுராமனும், உடற்றிய - பெருங்கோபங்கொண்டுசெய்த, போர்-யுத்தம்போன்ற யுத்தத்தை, பின்- பின்பு, பொருதார் - செய்தவர், சிலர் உளர் ஓ - சிலபேராயினும் இருக்கின்றனரோ? [எவருமில்லை என்றபடி] ஒரு முனி - ஒப்பற்ற அகஸ்தியமகாமுனிவனொருவன், ஏழ்கடல் உம் - ஏழுசமுத்திரத்தையும், கரம் ஒன்றில் ஒடுக்கினன் - (தனது வலிமையால்) ஒருகையிலொடுங்கச்செய்தான்: (இப்பொழுது), மன்னனை - இராசனான திட்டத்துய்மனை, மேல் வரு முனி - எதிர்த்துவந்த முனிவனான துரோணன், வென்றனன் - சயித்தான்; (ஆதலால்), முனிவருடன் பொர வல்லவர் - முனிவர்களோடு போர்செய்யவல்லவர், புவிமேல் யார் - பூலோகத்தில் யாவர்உள்ளார்? 'திட்டத்துய்மனை முனி வென்றனன்' என்ற சிறப்புப் பொருளை (வேறுசில திருஷ்டாந்தங்களுங் காட்டி) 'முனிவருடன் பொரவல்லவர் யார் புவிமேல்' என்ற பொதுப்பொருளால் விளக்கியதனால், வேற்றுப்பொருள்வைப்பணி. ஏழ்கடல்- உவர்நீர், கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர் இவற்றின்மயமானவை. அறிவு ஒழுக்கங்களில் ஒப்புயர்வின்மையை உணர்த்துதற்கு 'அருமுனி' என்றும்,வசிஷ்டன் பிரமனது குமாரனாய்ப் படைப்பின் தொடக்கத்தில் மற்றைமுனிவர்களுக்கு முந்தித் தோன்றியதனால் |