பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்107

சாரம் ஆம் அணி யென்று பதம்பிரித்துப் பொருள் கொள்ளலாம். விளங்க,
துலங்க,ஏழ வயங்க, தயங்க என ஒரு பொருள் குறித்த பலசொற்கள் வந்தது -
பொருட்பின்வருநிலையணி.

22.இனஞ்செய் கேண்மைகொடு ருபதேயனு மெண்ணில்
                           கோடிமகீபருங்
கனஞ்செய்தூரியமெழவெகுண்டெறிகாலெனும்
                             படிகைவரத்.
தினஞ்செய்நாதனடாவுதேர் நிகர்தேர் விரைந்து
                          செலுத்தினான்.
றனஞ்சயன்றலைநாண் முயன்றதவம்பலித்தன தன்
                               மையான்.

     (இ-ள்.)  தனஞ்சயன் - அருச்சுனன், தலைநாள் - முற்காலத்தில்
[பூர்வசந்மத்தில்], முயன்ற - ஊக்கத்தோடு செய்த, தவம்-,  பலித்து அன-
(இங்ஙனம்) பயன்பட்டாற் போன்ற, தன்மையான் -  சிறந்ததன்மையையுடைய
குமாரனான அபிமன்,-இனம் செய் உறவாகச் செய்கிற, கேண்மை - சினேக
குணத்தை, கொள் - கொண்ட, துருபதேயன்உம்-துருபதபுத்திரனான
திட்டத்துய்மனும், எண் இல் கோடி மகீபர்உம்- அளவிறந்த கோடிக்கணக்கான
அரசர்களும், கனம் செய் தூரியம் எழ-பெருமைசெய்கிற வாத்தியங்கள் முழங்க,
வெகுண்டு எறி கால் எனும்படி - கோபித்து வீசுகிற பெருங்காற்றென்று (உவமை)
சொல்லும்படி, கை வர - பக்கங்களில் (உதவியாய்) வர,-தினம் செய் நாதன்
நடாவு தேர் நிலர் தேர்-நாளை யுண்டாக்குகிற தலைவனான சூரியன் செலுத்துகிற
தேவர் யொத்த (தன்) தேரை, விரைந்து செலுத்தினான் - துரிதமாகச் செலுத்தி
வந்தான்: (எ - று.)

     சூரியன்தேர் - ஓய்வின்றி விரைந்து செல்லுதற்கு உவமம்,
தவஞ்செய்திருந்தாலன்றி இப்படிப்பட்ட அருமையான உத்தம புத்திரனைப்
பெறுதல் கூடாதென்பார், 'தவப்பயனன்ன தன்மையான்' என்றார்;
"மகன்றந்தைக்குஆற்று முதவியிவன்றந்தை, யென்னோற்றான்
கொல்மெலனுஞ்சொல்" என்றது காண்க: ஒழுக்கங்களிலும், பலபராக்கிரமங்களிலும்
மிகச்சிறந்தவனென்க. நட்பு மிக்க அன்பை விளைத்துச் சுற்றத்தார்க்குஉரிய
உரிமையை உண்டாக்குதலால், 'இனஞ்செய்கேண்மை' எனப்பட்டது. கனம்செய்
தூரியம் - மேகவொலியைச்செய்கிற தூரியமுமாம்: அவை, முரசம் முதலியன.(160)

23.-அபிமன் அம்புகளைச் சக்கரவியூகத்துள்ள வீரரின்மீது ஏவுதல்.

ஓதைகொண்டணிநின்றசக்கரயூகமன்னருரந்தொறுங்
கோதைதங்குகரத்தில்வில்லுதைகூரவாளிகுளிக்கவே
சீதைகொண்கனுமேவலாருயிர்தென்புலத்திடுதன்பெருந்
தாதையுந்தரமெனவிமைப்பிடைதாவுதேரினனேவினான்.

     (இ-ள்.) தாவு தேரினன்-தாவிச்செல்லுந் தேரையுடைய அபிமன்,-ஒதை
கொண்டு-ஆரவாரத்தைச் செய்துகொண்டு, சக்கர யூகம்-சக்கரயூகத்திலே, அணி
நின்ற- ஒழுங்காய் நின்ற, மன்னர் பகையரசரின், உரம்தொறுஉம்-மார்பிலெல்லாம்,-
கோதைதங்கு- நாணி பூட்டிய, கரத்தில் வில்-(தன்) கைவில்லினால், உதை-
தள்ளப்படுகிற, கூரவாளி - கூர்மையுள்ள அம்புகள், குளிக்க- மூழ்கும்படியும்,-
சீதை கொண்கன்உம் -சீதையின் கணவனான