இராமபிரானும், மேவலார் உயிர் தென் புலத்து இடு - பகைவர்களின் உயிரைத் தெற்குத்திக்கில் [யமலோகத்தில்] செலுத்துகிற, தன் பெரு தாதைஉம் - தனது சிறந்ததந்தையான அருச்சுனனும், தரம் என-(தனக்கு) ஒப்பென்று சொல்லுமாறு,- இமைப்பிடை - கணப்பொழுதிலே, ஏவினான் - பாணப்பிரயோகஞ்செய்தான்: (எ- று.) கோதை தங்கு கரம் - உடும்புத்தோலாலாகிய முன்னங்கைச் சட்டைதங்கிய கரமுமாம்: கோதா - வடசொல். சீதை - ஸீதா என்னும் வடசொல்லின் திரிபு: இதற்கு- கலப்பையுழுசாலென்று முதலிற் பொருள்: சனகமகாராசான் கேள்விக்காகச்சாலையுழுதபோது, பிராட்டி பூமிதேவியின்மகளாய்க் கலப்பையுழுபடைச் சாலிற் காணப்பட்டதனால், சீதையென்று திருநாமம்; இது - இடவாகுபெயரின்பாற்படும். (161) 24.- அபிமனம்பினால் சக்கரவியூகத்துஅணி சிதறுதல். அச்சுதப்பெயர்மாதுலன்புகலரியமந்திரமன்பினோ டுச்சரித்தொருநொடியினிற்பலகோடிபாணமுடற்றினான் எச்சிரத்தையுமெப்புயத்தையுமிடைதுணித்தலினடையமுன் வச்சிரத்தவனுரைசெய்சக்கரமாறிலாவணிபாறவே. |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ-ள்.) அச்சுதன் பெயர் மாதுலன் புகல்-அச்சுதனென்னும் ஒரு திருநாமத்தையுடைய (தன்) மாமனான கண்ணபிரான் (தனக்கு) உபதேசித்துள்ள, அரிய மந்திரம் - அருமையானதொரு மந்திரத்தை, அன்பினோடு உச்சரித்து - பக்தியோடு சொல்லி, ஒரு நொடியினில் - ஒருமாத்திரைபொழுதிலே. பலகோடி பாணம்- அநேகங்கோடி அம்புகளை, உடற்றினான் - பெருங்கோபத்தோடு பிரயோகித்தான்;(அவைகள்), எ சிரத்தைஉம்-(பகைவரது) தலைகளெல்லாவற்றையும் எ- புயத்தையும்உம்-தோள்களெல்லாவற்றையும், இடைதுணித்தலின் - நடுவிலே துண்டித்தலால்,-வச்சிரத்தவன் முன் உரைசெய்-வச்சிராயுதமுடைய இந்திரன் முன்பு உபதேசித்துள்ள, சக்கரம் - சக்கரவியூகத்தினது, மாறு இலா அணி - ஓப்பில்லாத ஒழுங்கு, அடைய பாற-முழுவதுஞ் சிதைய,-(எ - று.) 'பற்றினான்' என அடுத்த கவியில் முடியும். முன்னிரண்டடியிற்குறித்தது, வைஷ்ணவாஸ்திரம். 'முன் வச்சிரத்தவனுரைசெய்சக்கரம் என்றதனால், சக்கரவியூகத்தின் உபதேசபரம்பரை இந்திரனிடத்தினின்று வந்ததென்று தெரிகிறது. 'என்பது, ஸ்ரீவாசுதேவன் பக்கல் பெற்றதோர் அஸ்திரத்திரத்தினையுச் சரித்து...................சக்கரயூகத்தைப் பிளந்து உள்புக்கு' என்றது, பெருந்தேவனார் பாரதம். மாதுலன் - மாதாவினுடன்பிறந்தவன். மாறு இலா - மாறுபடுதலில்லாத எனினுமாம் பாற உடற்றினானென முத்தகமுமாம். (162) 25.-அபிமனைத் துரோணன் எதிர்த்துத்தோற்றல். மல்லலம்புயவபிமன்வெஞ்சரமழையனைத்தையுமாலெனப் பல்லவெங்கணைகொடுவிலக்கிமுனைந்துவந்தெதிர்பற்றினான் |
|