னான்அன்னவன்பகழிக்குலங்களநேகமோகரமாகையா, லென்னவெஞ்சமமினிநமக்கெனவேறுதேருடனேகினான்.் |
(இ-ள்.) (பின்பு), கன்னன் என்று உலகு எண்ணும் வீரன் உம்-கர்ணனென்று பெயர்பெற்று உலகத்தாரால் (கௌரவமாக) எண்ணப்படுகிற பராக்கிரமசாலியும் மொய்ம்புடன்-வலிமையோடு, பல கணைகள் - அநேக அம்புகளை, வான் மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன,-ஆகாயத்திற்காணப்படும் மின்னலின் வரிசைகன் மிகப்பல போல, நிறுத்தி-வில்லில் தொடுத்து, மெய்உற வீசினான்-(அபிமனது) உடம்பிற்படும்படிபிரயோகித்தான்; (ஆயினும்), அன்னவன் பகழி குலங்கள் அநேகம்மோகரம் ஆகையால் - அவ்வபிமனது அம்புக் கூட்டங்கள் மிக உக்கிரமாயிருத்தலால்,-இனி நமக்கு வெம் சமம் என்ன என - 'இனிமேல் நமக்கு (அவனோடு) கொடிய போர் செய்யும் ஆற்றல் யாது உள்ளது? என்று (கருதி), ஏறு தேருடன் ஏகினான் - (நான்) ஏறிவந்த தேரொடு பின் சென்றான்; (எ - று.) ஒருகோடி - மிகப்பலவாகிய எண்ணிற்கு ஓன்று எடுத்துக் காட்டியவாறு. வில் முதலிய ஆயுதங்கள் அழிந்தமை தோன்ற, 'ஏறுதேருடன் ஏகினான் என்றார், வேறு எனப் பதம்பிரித்தல், மோனைத்தொடைக்குச் சிறவாது. (165) 28. கிருபனும் கிருதவர்மனும் எதிர்த்து, அபிமனுடைய ஒருதொடுப்பிலே வெருவியோடுதல். கிருபமாமுனிதானுமேதகுகிருதவன்மனுமோர்புறத் திருவாரண்மையுநிலைபெறும்படிசென்றுதூவினரேவினால் ஒருவனேயிவனிவனெடுத்ததுமொருசராசனமம்பிலே வெருவியோடினர்தங்களோரிருவில்லுமற்றுவெறுங்கையே, |
(இ-ள்.) கிருபன் மா முனி தான்உம் - சிறந்த கிருபாசாரியனும், மேதகு கிருதவன் மன்உம்-மேன்மை பொருந்திய கிருதவர்மாவென்னும் யதுகுலத்தரசனும், ஓர் புறத்து-ஒரு பக்கத்தில், இருவர் ஆண்மை உம் நிலை பெறும்படி, சென்று- (எதிர்த்துச்) சென்று, ஏவினால் தூவினர்- அம்புகளால் பொழிந்தார்கள் - (அப்பொழுது), இவன் ஒருவன்ஏ - (எதிர்ப்பவன்) இவ்வபிமந்யு ஒருத்தனேதான்: இவன் எடுத்ததுஉம் ஒரு சராசனம் - இவன் (கையில்) ஏந்தினதும் ஒரு வில்தான்; (அங்ஙனம் இருந்தும்), அம்பிலே- (இவனது) அம்புகளாலே, (அவ்விரண்டு பேரும்), தங்கள் ஒர் இரு வில்உம் அற்று - தங்களது வில்லிரண்டும் அறுபட்டு, வெறு கை-ஆயுதமில்லாத கைகளையுடையவராய், வெருவி ஓடினர்-அஞ்சிஓடிப் போனார்கள்:(எ- று.) (166) 29.-அபிமனால் சகுனியின் மகன் முதலோர் இறந்துவிழ, மற்றையாவரும் நடுங்கி யோடுதல். சகுனியுந்திருமகனுமற்றுளதமருமேலிடுதானையோ டிகனெடுங்களம்வென்றுகொள்குவமென்றுவந்தெதிரணுகினார் |
|