பக்கம் எண் :

112பாரதம்துரோண பருவம்

31.-மற்றுமுள்ள பலரும் அபிமனுக்குத் தோற்றேகுதல்.

மற்றுமற்றுமுனைந்துவந்துமலைந்தவெஞ்சினமன்னர்மெய்ம்
முற்றுமுற்றுமிவன்கைவாளிகண்முனைபுதைந்திடமூழ்கலா
லிற்றவிற்றபடைக்கலங்களுமெய்த்தவெய்த்தபதாதியு
மற்றவற்றவிதங்கொள்வாகமுமாகியேகினரடையவே.

     (இ-ள்.) மற்றும் மற்றும் - இன்னும் இன்னும், முனைந்த வந்து -
உக்கிரங்கொண்டுவந்து, மலைந்தபோர்செய்த, வெம் சினம் மன்னர் - கொடிய
கோபத்தையுடைய அரசர்கள், மெய் முற்றுஉம் முற்றுஉம் - (தங்கள்) உடம்பு
முழுவதிலும் இடைவிடாமல், இவன் கை வாளிகள்-இவ்வபிமன் கையம்புகள்,
முனை புதைந்திட நுனியழுந்தும்படி, மூழ்கலால் - தைத்து ஊடுருவுதலால், இற்ற
இற்ற படைக்கலங்கள்உம் - மிகத்துணிபட்ட ஆயுதங்களையும், எய்த்த எய்த்த
பதாதிஉம் -மிகஇளைத்த காலாள்களையும், அற்ற அற்ற விதம் கொள் வாகம்உம்
ஆகி-மிக அறுபட்ட யானை குதிரை தேர்என்ற இவற்றில் வகைகளையு
முடையவர்களாய், அடைய ஏகினர்-எல்லோரும் ஓடிப்போனார்கள்;   (எ-று.)

     வாஹம் - தாங்குவதெனக்காரணப்பொருள்படும். பி - ம்: விதங்களாகியும்
                                                           (169)

32.-அபிமன் தனியே சக்கரவியூகத்துள் இவ்வாறு கடும்போர்புரிய
வீமன் தருமனிடத்து வருத்தத்தோடு கூறத்தொடங்குதல்.

இளையவன்றனிமதலைதெவ்வரிளைக்கவிப்படியிகல்செயத்
தளையவிழ்ந்தவலங்கன்மீளிசமீரணன்றிருமதலைபோய்
வளையவன்சிலைமன்னவன்கழன்மலர்வணங்கிவணங்கலா
ருளையவந்தமர்முடுகிநின்றமைகண்டுசோகமொடுரைசெய்தான்.

     (இ-ள்.) இளையவன் தனி மதலை - தம்பியான அருச்சுனனுடைய ஒப்பற்ற
புத்திரனான அபிமன், தெவ்வர் இளைக்க-பகைவர்கள் சோர்வடையும்படி, இ படி
இகல் செய-இவ்வாறு போரைச் செய்ய,-தளை அவிழ்ந்த-(அரும்புகளின்) முறுக்கு
விரிந்த. அலங்கல்-போர்மாலையைத் தரித்த, மீளி - சிறந்தவீரனாகிய, சமீரணன்
திருமதலை-வாயுவினது சிறந்த புத்திரனான வீமன், வணங்கலார் -  பகைவர்கள்
பலர்,வளைய-(தன்னைச்) சூழ்ந்து கொள்ள, (சகாய மில்லாத அபிமனொருத்தனே),
உளைய - (அவர்களெல்லோரும்) வருந்தும்படி, வந்து-(எதிர்த்துச்) சென்று, அமர்
முடுகி நின்றமை- போரை உக்கிரமாகச் செய்துநின்றதன்மையை, கண்டு-,-
சோகமொடு-(துணையில்லாத)அபிமனுக்குச் சோர்வுண்டாகுமே யென்ற)
துன்பத்துடனே, போய்-(தருமனிடம்) சென்று, வல் சிலை மன்னவன் -வலிய
வில்லினையுடைய அத்தருமராசனது. கழல் மலர்-தாமரை மலர்போன்ற
திருவடிகளை, வணங்கி - நமஸ்கரித்து, உரைசெய்தான்-(சிலவார்த்தைகள்)
சொல்பவனானான்: (எ - று.)-அவற்றை, அடுத்த கவிமுழுவதிலும்.
அதற்கடுத்தகவியின் முதலிலும் காண்க.

    ஸமீரணன் என்ற வடசொல்லுக்கு - நன்றாகச் சஞ்சரிப்பவனென்று பொருள் 
'வணங்கலார் உளைய வந்து அமர்முடுகிநின்