இல்- (வேறு மனிதர் தேவர் முதலிய) யாவருள்ளும் இல்லை, என-என்று சொல்லும்படி, வெல்ல வல்லது ஓர் தண்டினான் பகைவரைச் சயிக்கவல்லமையையுடையதொரு (சத்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தையுடைய வீமன், மனக்கு நேர்வரு தேரினன்- (தன்) மனத்துக்கு ஒத்த தேரின்மேலேறினவனாய், பலமண்டலீகர்உம் - அநேக சிற்றரசர்களும், மன்னர்உம்-அரசர்களும், சினம் குழாம் உறு சேனைஉம் - கோபத்தையுடைய கூட்டமாகப்பொருந்திய சேனைகளும், புடைசூழ - பக்கங்களிற் சூழ்ந்துவரும்படி, அன்று - அப்பொழுது, எதிர்சொல்ல - எதிர்த்துச்செல்ல,-(எ - று.)-'சக்கரமண்டலம் ஈயை ஒத்தது'என அடுத்த கவியோடுமுடியும். தொழுதியாரினும் - குற்றயலிகரம். (172) 35.-வீமன்செல்லச் சக்கரவியூகச்சேனை பொலிவிழந்து சிதறுதல் சாயையொத்தெழுசேனையோடெதிர்தடவிமன்குலவடவியிற் றீயையொத்துவிளங்குமாருதிசென்றுமண்டியதிசையெலா மாயையொத்தொருவடிவுமின்றிவகுத்தசக்கரமண்டலம் ஈயையொத்ததுகலுழனொத்தனனீறிலாவரியேறனான். |
(இ-ள்.) மன் குலம் அடவியில் - பகையரசர்களது கூட்டமாகிய காட்டிலே, தீயைஒத்து-(அதனை யெரித்து அழிக்கும்) நெருப்பைப் போன்று, விளங்கும் - பிரகாசிக்கிற, மாருதி-வாயுபுத்திரனான வீமன்,-சாயை ஒத்து எழு சேனையோடு- நிழலையொத்து (விடாதுகூடப்புறப்பட்டு) வருகிறசேனையுடனே, எதிர் தடவி - எதிரிலே (வீரர்களைத்)தேடிக்கொண்டு, சென்று மண்டிய-போய் நெருங்கின, திசை எலாம் - பக்கங்களிலெல்லாம். வகுத்த சக்கர மண்டலம்- (துரோணனாற்) பகுத்தமைக்கப்பட்டுள்ள சக்கரவியூகம், மாயை ஒத்து ஒரு வடிவுஉம் இன்றி-மாயையைப் போன்று ஒரு வடிவமுங் காணப்படாதபடி, ஈயை ஒத்தது - ஈக்கூட்டம்போலச் சிதறிற்று: (சிதற), ஈறு இலா அரி ஏறு அனான் - அழிவில்லாத ஆண்சிங்கத்தைப்போன்ற வீமன், கலுழன் ஒத்தனன் - கருடன்போன்று எதிரற்று விளங்கினான்; (எ - று.) சிதறிய எதிரிகள் கூட்டத்துக்குப் பறவைகளுள் எளியதாகிய ஈயை உவமைகூறியதற்குஏற்ப, அவற்றைச் சிதறடித்த வீமனுக்குப் பறவைகளுள் வலியதாகிய கருடனைஉவமைக்கூறினார், 'ஈறிலா அரியேறு' என்றது, திருமாலின் திருவவதாரமானநரசிங்கமூர்த்தியையுமாகும், மாயை - உள்ளதை இல்லாததாகவும், இல்லாததைஉள்ளதாகவும், ஒன்றை மற்றொன்றாகவும் அற்புதங்காட்டும் மந்திரசக்தி. மண்டலம் -வட்டமாகத்திரண்ட படை. (173) 36. - கலிங்கர் முதலிய வீரர் வீமனோடு பொருதல். கலிங்கர்சோனகர்மகதர்கன்னடர்கங்கர்கொங்கணர்கௌசலர் தெலுங்கராரியர்துளுவர்பப்பரார்சீனர்சாவகர்சிங்களர் குலிங்கர்மாளவர்களமரொட்டியாகுகுரர்கொப்பளர்கூபகர் புலிங்கசாலமெனச்சதாகதிபுதல்வனோடுறுபோர்செய்தார். |
(இ-ள்.) (அதுகண்டு), கலிங்கர் சோனகர் மகதர் கன்னடர் கங்கர் கொங்கணர் கௌசலர் தெலுங்கர் ஆரியர் துளுவர் பப்பரர் |