தற்கு) ஓர் உபாயம் உள்ளது; (அது யாதெனில்), -நுதல் எரி நயனன்-நெற்றியில் நெருப்புக்கண்ணையுடைய சிவபிரான், அருள் - (உனக்குக்) கொடுத்தருளிய, கொன்றை மாலைதனை-கொன்றைப்பூ மாலையை, இவர் நடு இடில் - (வீமன் அபிமன்யுஎன்ற) இந்த இரண்டுபேர்களுக்கு மத்தியிற் போகட்டால், இரண்டு பால்உம்அகல்வர்-(அதனைத்ததாண்டி ஒருவரோடொருவர் சேராமல் இவர்) இரண்டுபக்கங்களிலும் பிரிந்துசெல்வாரகள்;' எ - று.) ஏ- தேற்றம். நுதலெரிநயனனருள் கொன்றைமாலையென்பதிலடங்கிய கதை;- பாண்டவர் வனவாசஞ்செய்கையில் ஒருநாள் வேட்டைக்குப்போயிருந்த சமயம் பார்த்துச் சயத்திரதன் சென்று ஆச்சிரமத்தில் தனித்திருந்த திரௌபதியை வலியக்கவர்ந்து தேரெற்றிக்கொண்டுசெல்ல, பின்பு மீண்டுவந்து செய்தியுணர்ந்த பாண்டவருள் வீமன் சினந்து தருமன்கட்டளையால் அருச்சுனனோடும் எதிர்த்துச்சென்று பொருது தன்வலியால் அவனை முடிபிடித்திழுத்துத் தரையில்தள்ளிக் கைகால்களால் அடித்தும் உதைத்தும் வலியடக்கி உயிருடன் பற்றிக்கொண்டு திரௌபதியையும் மீட்டுத் தருமனிடங் கொண்டு வந்து 'இவனைக்கொன்றிடுவதே ஏற்ற தண்டனை' என்றுகூற, அதற்குத் தருமன் 'பெருங்குற்றமுடையனாயினும் நெருங்கின சுற்றத்தானாகிய இவனைக் கொன்றிடின், நம்முடையதங்கை துச்சளைக்கு அமங்கலியம் உண்டாகும்: ஆதலால், அங்ஙனஞ் செய்யவேண்டா; வேறு வகையாகப் பங்கப்படுத்தி உயிருடன் விடுவதே தகுதி' என்றுகருணையுடன் கூற, அத்தமையனார்கட்டளையைக் கடக்கமாட்டாத வீமன் அச்சந்தவனை ஐங்குடுமிவைத்து அம்பாலே தலையைச் சிரைத்துக் கழுதையின்மேலேற்றிப் பரிபவப்படுத்தி அனுப்பிவிட, அங்ஙனம் அவமானப்பட்ட சிந்துராசன் பாண்டவரைக் கொல்லுமாறு வரம் பெறும்பொருட்டு இமயகிரியிற்சென்று தவஞ்செய்து பரமசிவனைத் தியானித்துப் பலநாள் பிராயோபவேசமாகக் கிடக்க,, பிரதியக்ஷமான சிவபிரான் 'ஸ்ரீகிருஷ்ணசகாயரான அப்பாண்டவர்களைக் கொல்லுதலும் வெல்லுதலும் உன்னா லாகுவதன்று: பெரும்போரில் ஒரு நாள் அருச்சுனனொழிந்தோரைத் தகைவதற்கே யாகும்' என்று தனது கொன்றைப்பூ மாலையையும், பகைவெல்லவல்லவொரு கதாயுதத்தையும் அன்போடு கொடுத்தருளினனெனக் காண்க. 'தான் முன்னம் வீமசேனனால் அபசயப்பட்ட அவமானந் தீரவேண்டிப் பரமேசுவரனை நோக்கித் தபசுபண்ண, ஆங்கு அவனும் பிரசந்நனாய் 'உன் அபிப்ராயம் ஏன்?' என்றலும், 'பாண்டவரைச் சயஞ்செய்யுமாறு எனக்கு அருள்செய்வாயாக' என்றலும், 'சக்கரபாணிசகாயராகிய பாண்டவரை வெல்லவரிது; மற்றவரை ஒருகால் மானபங்கப்படுத்தி' என்று தன்சடாமகுடத்துக் கொன்றை மாலையைப் பிரசாதிப்ப, பெற்றுப் போந்த அக்கொன்றைமாலையால், வீமசேனன் துணைபுகுதாது விலக்கியிட்டான் சயத்திரதன்' என்று பெருதேவனார் கூறியவாறு உணர்க. (185) 48. | அரன்முடியணிந்ததாமமிதுவெனவடிகொடுகடந்துபோக வெருவுவர், பரவைநிகர் நம்பதாதியவனிபர் பலருடன் வளைந்து கோலியமரிடை, வரமுறவணங்குநாளி வருள்செய்து மனமகிழ |
|