பொன்னுலகமாகிய சுவர்க்கத்தில் உள்ளனயாவும் பொன்மயமாதலால் 'கனகதரு' எனப்பட்டது. கனகத்தை மலருக்கு அடையாக்கினுமாம்: கொன்றைமலர் பொன்னிறமாதலால், கனகதருமலரோடு உவமிக்கப்பட்டதென்க. இதழி-நிறைந்த இதழ்களையுடையதெனக் காரணப்பெயர்போலும். மறை- மறைக்கப்படுவது என மந்திரத்துக்குக் காரணக்குறி; "மந்த்ரம்யத்நேந கோபயேத்" [மந்திரத்தை முயற்சியால்மறைக்கவேண்டும்] என்பது, விதி. (187) 50.-வென்றுமீளுகையில்,சிவபிரான்மாலை குறுக்கிட, அபிமன் கடவாது பகையைமுறியடித்து மடிவதாகத்துணிந்துபொருதல். எறிதொடையல் சங்க பாணிமருமக னிகலுமமர்வென்று மீளு மளவையி, னெறியிடைவி ளங்கிவாள கிரியென நிமிர்வுறவளைந்து சூழ வருதலு, மறிவுடனி றைஞ்சி யாதி பகவன தணிமுடிய லங்க லாகு மடையலர், முறியவினி மண்டு போரி லமர்செய்து முடிதுமென வந்து மீள மூடுகவே. |
(இ-ள்.) எறி தொடையல்-(சயத்திரதனால்) வீசப்பட்ட அம் மாலை, சங்கபாணி மருமகன் இகலும் அமர் வென்று மீளும்அளவையில்-சங்கத்தைக் கையிலுடைய கண்ணனுக்கு மருமகனான அபிமன் எதிர்த்துச்செய்த போரில்செயித்து (வீமனுடன் சேர்தற்கு)த் திரும்புமளவில், நெறியிடை - வழியிலே, விளங்கி - பிரகாசித்து, வாள கிரி என - சக்கரவாளமலைபோல, நிமிர்வுஉற - விளக்கம் பொருந்த, சூழ வளைந்துவருதலும் - சுற்றிலுஞ் சூழ்ந்து பொருந்தியிட,-(அதுகண்டு அபிமன்), அறிவுடன்இறைஞ்சி - (இது இறைவனதுமாலையென்ற) அறிவோடு வணங்கி, 'ஆதி பகவனதுஅணி முடி அலங்கல் ஆகும்-முதற்கடவுளான சிவபிரானது அழகிய திருமுடியில்தரித்த மாலையாகும்; (இதனைத் தாண்டிடுதல் தகுதியன்று): (ஆதலால்), இனி-,மண்டுபோரில் - நெருங்கிய யுத்தத்தில், அடையலர் முறிய-பகைவர் அழிய, அமர் செய்து-போர் செய்து, முடிதும்-இறப்போம்,' என-என்றுஎண்ணி, மீள வந்து முடுக -திரும்பிவந்து போர்செய்யத்தொடங்க,-(எ - று.)-"இதழித்தொடைவிலங்கியது" என்மேல் 52-ஆங் கவியோடு முடியும். பி - ம்: நெறியிடைவிலங்கி. சக்கரவியூகத்தினிடையில் தனியனாய் அகப்பட்டுக்கொண்ட தனக்கு வேறுஎவரும் துணையில்லாமையாலும், அவ்வியூகத்தினின்று மீண்டுவருதற்குத் தான் முழுவதும் வழியறியாமையாலும், அபிமன்முடிவோமென்று கருதினான். சக்கரவாளமலை - பூமியைச் சூழ்ந்த கடலைச்சுற்றிலும் கோட்டைமதில்போலச் சூழ்ந்துள்ள தொரு பருவதமென்ப. ஆதிபகவன்- இருபெயரொட்டு. (188) வேறு. 51.- மூன்றுகவிகள்-அம்மாலையைக் கடத்தற்கு அஞ்சி வீமன்வெளிநின்றமை கூறும். பரிசனகு மாரன்விடு, மெரிகணைக ளான்முடுகு தரியலர்ப தாதிபடை நெரியவரு காலையிலே. |
|