(இ-ள்.) பரிசன குமாரன்-வாயுகுமாரனான வீமன், விடும்-(தான்) பிரயோகிக்கிற, எரி கணைகளால்-உக்கிரமான அம்புகளால், முடுகு தரியலர் பதாதி படை -விரைந்துபோர்செய்த பகைவர்களது சேனைக்கூட்டம், நெரியவரு காலையிலே-சிதையமீளுகிற பொழுதிலே,-(எ - று.)-" என்று குறுகலும் என வருங் கவியோடுஇயையும். எரிகணை - பகைவரையழிக்கும் அம்பும், விளங்குகிற அம்பும், நெருப்பில் வைத்து வடிக்கப்பட்ட அம்புமாம்: வினைத்தொகை. பதாதிபடை - நிலைமொழி வடமொழியாதலின், இயல்பு. இதுமுதல் இருபத்தெட்டுக் கவிகள் - பெரும்பாலும் இரண்டு சீர்களும் விளங்காய்ச்சீர்களாகியகுறளடி நான்குகொண்ட வஞ்சித் துறைகள். இவற்றிற் சிறுபான்மை மாச்சீர்களும் வந்துள்ளன. (189) 52. | விறலபிமனின்றகள, முறுதுமினியென்றுநனி குறுகலும்விலங்கியது, நறையிதழியந்தொடையே. |
(இ-ள்.) 'விறல் - வெற்றியையுடைய அபிமன்-, நின்ற- பொருந்தின, களம் - இடத்தை, இனி -இப்பொழுது, உறுதும்- (நாம்) அடைவோம்,' என்று-என்று எண்ணி, (வீமன்), நனி குறுகலும் - மிகச்சமீபித்தவளவிலே,-நறை-வாசனையுடைய,அம்- அழகிய, இதழிதொடை - கொன்றைப்பூமாலை, விலங்கியது -குறுக்கிட்டது;(எ-று.) நறை - தேனுமாம்; இதனை 'ஐ' விகுதிபெற்ற பண்புப்பெயரென்னலாம் ஈற்று ஏகாரத்தை இங்குப் பிரிநிலை யென்னலாம். (190) 53. | இன்றமரின்யாருமுயிர், பொன்றிடினுமீசனணி கொன்றைகடவேனெனமுன், னின்றனனராதிபனே, |
(இ-ள்.) (அதுகண்டு), நர அதிபன் -வீமராசன், 'இன்று-இன்றைக்கு, அமரின் போரில், யார்உம் -எல்லோரும், உயிர்பொன்றிடின்உம் - உயிரழிவாரானாலும்,(யான்), ஈசன் அணி கொன்றை - சிவபிரான் தரித்த கொன்றைப்பூமாலையை, கடவேன் - தாண்டமாட்டேன்,' என - என்றுகருதி, முன் நின்றனன்-முன்னே நின்றுவிட்டான்: (எ - று.) இங்ஙனங் கூறியதனால், வீமனது சிவபக்தி மிகுதி விளங்கும். கொன்றை - அதன் மலர்மாலைக்கு இருமடியாகுபெயர். (191) 54.- அபிமனுக்குத் தான் உதவாமைக்கு வீமன் நொந்து கூறலுறுதல். முந்துவடிவாளமரின், வந்தணுகுவான்மதலை. நிந்தனைகொலாமிதென, நொந்துசிலகூறினனே. |
(இ-ள்.) 'முந்து - சிறந்த, வடி வாள் அமரின் - கூர்மையான ஆயுதங்களைக்கொண்டு செய்யும்போரில், வந்து அணுகுவான் - வந்துநெருங்கியுள்ளவன், மதலை-குமாரனான அபிமன்: இது-அவனுக்கு யான் உதவியாகாத) இத்தன்மை, நிந்தனை ஆம்-பழிப்புக்குக் கார |