பக்கம் எண் :

126பாரதம்துரோண பருவம்

ணமாம்,' என - என்று எண்ணி, நொந்து- வருந்தி, (வீமன்), சில கூறினன் -
சில(கோபவார்த்தைகளைக்) கூறுபவனானான்; (எ - று.) - அவற்றை, நோக்கி
மேல்மூன்றுகவிகளிற் காண்க.

     நிந்தனை இது-காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. கொல்- அசை.
பி-ம்:
முந்தமுடிவானமரில்.                                    (192)

55.-  மூன்றுகவிகள் - வீமன் நொந்து கூறியமையைத் தெரிவிக்கும்.

இந்தமதுமாலையிடை, தந்தபிமனாருயிரை
யுந்தியிடவோவெளிது. சிந்துபதிசேவகமே.

     (இ-ள்.) சிந்து பதி சேவகம்-சிந்துதேசத்தரசனது வீரம்,- இந்த மது மாலை
இடைதந்து- தேனையுடைய இக்கொன்றைப்பூ மாலையை நடுவிலே போகட்டு,
அபிமன் ஆர் உயிரை உந்தியிடஓ- (தனிப்பட்ட) அபிமந்யுவின் அருமையான
உயிரைப் போக்கிவிடுதற்கோ (வல்லது)? எளிது - (அவ்வீரம்) எளிமையையுடையது:
(எ - று.)-எளிமை - இகழப்படுந்தன்மை; தாழ்வு தருமயுத்த மாகவன்றி
வேறுசூழ்ச்சிசெய்து கடவுள்மாலையைக் குறுக்கிடுவித்துத் துணையில்லாதபடி
தனிப்படுத்திக் கொல்லமுயலுதல் பழிக்கத் தக்க தென்றதாம்.             (193)

56.விரகுபடவெப்பொழுது, முரணமர்தொடக்கும்வலி
யுரகதுவசற்கொழிய, வரசரிலெவர்க்குளதோ.

     (இ-ள்.) 'எப்பொழுதும்-, விரகு பட-வஞ்சனையாக, முரண் அமர் தொடக்கும்
- மாறுபட்ட போரைத் தொடங்கிச்செய்கிற, வலி-வலிமை, உரக துவசற்கு ஒழிய -
பாம்புக்கொடியனான துரியோதனொருவனுக்கே தவிர, அரசரில் எவர்க்கு உளதுஓ-
அரசர்களில் வேறுயார்க்கேனும் உள்ளதோ? (எ- று.)

     'உரகதுவசன்'-கொடுமையை விளக்குகிற சாபிப்பிராயவிசேடியம்:
கருத்துடையடைகொளியணி: பரிகராங்குராலங்காரம்.              (194)

57.தன்மகனையுஞ்சமரில், வன்மையொடுகொன்றொழிய
மன்முனைதிரண்டிடினு, மென்மகனிறந்திடுமோ.

     (இ-ள்.) மன் - (பல) அரசர்கள், முனை - போர்க்களத்தில், திரண்டிடின்
உம் -கூட்டம்கூடி எதிர்த்துப்போர்செய்தாலும், என் மகன் - எனது புத்திரனான
அபிமன்,தன் மகனைஉம் சமரில் வன்மையோடு கொன்றுஒழிய -
அத்துரியோதனனுக்குக்குமாரனான இலக்கணனையும் போரில் வலிமையாற்
கொன்றாலன்றி, இறந்திடும்ஓ -இறந்திடுவானோ? (எ - று.)-பி - ம்: மடிந்திடுமோ.

     இங்ஙனம் கூறியதனால் அபிமனது பல பராக்கிரம விஷயத்தில் வீமனுக்கு
உள்ள நம்பிக்கை வெளியாம் தம்பிமகனிடத்தில் அபேதமாகவுள்ள அபிமானத்தால்,
'என்மகன்' என்றான். 'தன் என்றது படர்க்கை யாதலால், இங்கே, துரியோதனனைக்
குறித்தது; (இது, வடமொழியில் ஸர்வநாம சப்தங்களுள் ஒன்றாம்.) மன் -
சாதிப்பெயராய், இராசசமூகத்தை உணர்த்தியது.                        (195)